"தை "க்கு முன் வரும்
மார்கழி மாதம்
பீடை என்பது போல்
ஜனவரிக்கு முன் வரும்
டிஸம்பரே
நீயும் பீடை தானா ?
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன ஒரு தீராப்பகை ?
தமிழ்த் தலைவர்களின் மீது
அப்படியொருக் கொலைவெறி ?
சுனாமியென வந்து
கடற்கரை மக்களை
கொத்துக் கொத்தாய்
கொன்று போட்டுப் போவதும்...
புயல் சூறாவளியென
பொங்கி எழுந்து
மீண்டு எழமுடியாதபடி
சேதம் விளைவிவித்துப் போவதும்...
டிஸம்பரே
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன தீராப்பகை ?
மூதறிஞர் என நாங்கள்
கொண்டாடிய இராஜியை
பகுத்தறிவுப் பகலவயாய்
ஒளிர்ந்த எங்கள் பெரியாரை..
ஏழைப் பங்காளனாய்த் திகழந்த
எங்கள் புரட்சித்தலைவனை
அனைவருக்கும் அன்னையாய் உயர்ந்த
எங்கள் புரட்சித்தலைவியை
அரசியல் சாணக்கியனாய் ஒளிர்ந்த
எங்கள் அன்பு சோ .இராமசாமியை
கள்வனைப் போல்
ஒளிந்திருந்து உன் மாதத்தில்
காவு கேட்கும் கொடுமை ஏன் ?
டிஸம்பரே
உனக்கு தமிழினத் தலைவர்கள் மீது
அப்படியென்ன ஒரு கொலைவெறி ?
ஒன்றைப் புரிந்து கொள்
உன்னால் இவர்களது
உயிரைத்தான் கவர இயலும்
சிகரம் தொட்ட
இவர்களது புகழை
இம்மியும் குறைக்க இயலாது
மாறாக இனியும் உன்
கொடும்செயல்கள்
இதுபோல் தொடருமாயின்...
மார்கழியைப் பீடையென்று
மங்களங்கள் ஒழித்தது போல்
உன்பெயரை இனி
"பீடை மாதம் "என மாற்றி
உன் செறுக்கை ஒழித்திடுவோம்
டிஸம்பரே
உன் பெயர் டிஸம்பரா ?
இல்லையினி பீடை தானா ?
இனி உன் செயல்கள் மூலம்
இதை நீயே முடிவு செய்து கொள்
மார்கழி மாதம்
பீடை என்பது போல்
ஜனவரிக்கு முன் வரும்
டிஸம்பரே
நீயும் பீடை தானா ?
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன ஒரு தீராப்பகை ?
தமிழ்த் தலைவர்களின் மீது
அப்படியொருக் கொலைவெறி ?
சுனாமியென வந்து
கடற்கரை மக்களை
கொத்துக் கொத்தாய்
கொன்று போட்டுப் போவதும்...
புயல் சூறாவளியென
பொங்கி எழுந்து
மீண்டு எழமுடியாதபடி
சேதம் விளைவிவித்துப் போவதும்...
டிஸம்பரே
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன தீராப்பகை ?
மூதறிஞர் என நாங்கள்
கொண்டாடிய இராஜியை
பகுத்தறிவுப் பகலவயாய்
ஒளிர்ந்த எங்கள் பெரியாரை..
ஏழைப் பங்காளனாய்த் திகழந்த
எங்கள் புரட்சித்தலைவனை
அனைவருக்கும் அன்னையாய் உயர்ந்த
எங்கள் புரட்சித்தலைவியை
அரசியல் சாணக்கியனாய் ஒளிர்ந்த
எங்கள் அன்பு சோ .இராமசாமியை
கள்வனைப் போல்
ஒளிந்திருந்து உன் மாதத்தில்
காவு கேட்கும் கொடுமை ஏன் ?
டிஸம்பரே
உனக்கு தமிழினத் தலைவர்கள் மீது
அப்படியென்ன ஒரு கொலைவெறி ?
ஒன்றைப் புரிந்து கொள்
உன்னால் இவர்களது
உயிரைத்தான் கவர இயலும்
சிகரம் தொட்ட
இவர்களது புகழை
இம்மியும் குறைக்க இயலாது
மாறாக இனியும் உன்
கொடும்செயல்கள்
இதுபோல் தொடருமாயின்...
மார்கழியைப் பீடையென்று
மங்களங்கள் ஒழித்தது போல்
உன்பெயரை இனி
"பீடை மாதம் "என மாற்றி
உன் செறுக்கை ஒழித்திடுவோம்
டிஸம்பரே
உன் பெயர் டிஸம்பரா ?
இல்லையினி பீடை தானா ?
இனி உன் செயல்கள் மூலம்
இதை நீயே முடிவு செய்து கொள்
12 comments:
சிகிச்சை என்ற பெயரில் சித்திரவதைகள் மேலும் மேலும் தொடராமல் அனைவருக்கும் நான் மோட்சமும், நிம்மதியும் அளித்துள்ளேனாக்கும் !
சிகரம் தொட்ட இவர்களது புகழை இம்மியும் குறைக்க இயலாது என்பது எனக்கும் மிக நன்றாகவே தெரியுமாக்கும்.
இந்த ஆண்டு (2016) இதே என் மாத இறுதி நாட்களில் நம் நாட்டிலிருந்து வரும் கருப்புப்பணம் யாவும் முற்றிலும் ஒழிய இருப்பதால் என்னைக் ’கருப்பு மாதம்’ என அழைப்பதில் எனக்கும் ஒருவிதத்தில் மிகுந்த மகிழ்ச்சியே + பெருமையே.
இப்படிக்கு
அன்புடன் டிஸம்பர் மாதம்
என் அபிமான நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியரும், நாடக நடிகரும், வழக்கறிஞரும், சட்ட ஆலோசகரும், பிரபல அரசியல் பத்திரிகை (துக்ளக்) ஆசிரியரும், பழுத்த அனுபவங்களும், பல்வேறு தனித்திறமைகளும் வாய்ந்த திரு. சோ ராமசாமி அவர்கள் இன்று காலமாகி விட்டது மிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது. :(
என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டு அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
வை.கோபாலகிருஷ்ணன் //
இந்த மாதத்தில் புகழுடம்பு எய்திய
பெருமைமிகுத் தமிழகத் தலைவர்களையும்
கொத்துக் கொத்தாய் புயல், சுனாமிக்குப்
பலியானவர்களையும், வீடு வாசல் இழந்துத்
தவித்தவர்களையும் நினைவு கொள்ளும்விதமாக
இதை எழுதியுள்ளேன்
மற்றபடி நீங்கள் குறிப்பிடுவது போல
டிஸம்பருக்கும் ஒரு பாசிடிவ் பகுதி உண்டுதான்
உடன் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு //
அன்புடன் டிஸம்பர் மாதம்//
டிஸம்பர் மாதத்தின் கூற்றாக
இதை எழுதியதை மிகவும் இரசித்தேன்
வாழ்த்துக்களுடன்...
ஒருவர் இறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
அது என்ன வழி என்று கேட்கிறீர்களா ?
அவர் பிறக்காமல் இருக்க வேண்டும்.
ஒருவருக்குப் ’பிறப்பு’ என்ற ஒன்று நிகழ்ந்து விட்டால் அவருக்கு ’இறப்பு’ என்பது சர்வ நிச்சயமாக உண்டு.
இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் ‘இறப்பு’ என்ற அதைக்கொஞ்சம் ஒத்திப்போட மட்டுமே முடியுமே தவிர, அதனை முழுமையாகத் தவிர்க்கவே முடியாது.
பீடை என்பதே பீடுடைய என்பதன் திரிபே
அடுத்தடுத்து...
மாதம் என்ன செய்யும் ஐயா
கரந்தை ஜெயக்குமார் said...
மாதம் என்ன செய்யும் ஐயா//
எத்தனை யுகமாயினும்
எந்த அளவு முன்னேற்றம் ஆயினும்
காலனுக்கு முன்பு எதுவும்
செல்லுபடியாகாது என்பது உண்மையே
ஆயினும் ஆதங்கத்தை எப்படியாவது
கொட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறதே
என்ன செய்வது ?
எந்த சாவுக்கும் இதுவரை காலன்
பலியேற்றுக் கொண்டதில்லை என்கிற
முதியவர்கள் வாக்குத்தான் சத்தியமானது
ஆயினும் பதட்டத்தில் யானையைக்
காணவில்லையெனில் பானைக்குள் தேடுகிற
பாமரத்தனமே இக்கவிதை
அப்படியே நம் நினைவுகளில் நீங்காது நிற்கிற
தலைவர்களை நினைவு கூறும் விதமாகவும்..
ஒருவரியாயினும் தொடர் சிந்தனைக்கு
வழியமைத்த அருமையான ஒரு வரிப்
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்களுடன்...
நல்ல கவிதை.
தொடர்ந்து சோக நிகழ்வுகள் இம்மாதத்தில்....
நல்லதொரு கவிதை!
நல்லதொரு கவிதை! நிகழ்வுகளைக் கோர்த்து...
Post a Comment