Friday, December 9, 2016

கூடுதல் கவனமாய் ...

கனத்தச் சொற்களைக் கையாள்வதில்
கவனமாய்  இருக்க வேண்டியிருக்கிறது

வாதாடுகையில்
கோபமாய் இருக்கையில் மட்டுமின்றி
கவிதை புனைகையிலும்
கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது

கனத்தச் சொற்கள்
வாதத்தின் போக்கை
கோபத்தின் காரணத்தை
மடை மாற்றிவிடுதலைப்போலவே

கவிதையிலும் கன த்தச் சொற்கள்
தன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து
கவிதையின் உள்ளார்ந்த பொருளை
உணரவிடாதுச் செய்து போவதால்...

படைப்பின் நோக்கத்தைப்
பாழாக்கிப் போவதால்..

கனத்தச் சொற்கள் விஷயத்தில்
கொஞ்சம் கூடுதல்
கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது

சமையலில்
கூடுதலாகிப் போன
உப்போ காரமோ
தன் இருப்பைக் காட்டி
சமையலின் தரத்தைக்
குறைத்து விடுவதைப் போலவும்

அணிவகுப்பில்
தன்னை பிரதானப்படுத்த எண்ணி
விரைந்துச் செயல்படுபவன்
அணியின் கம்பீரத்தை
அசிங்கப்படுத்தி விடுவதைப் போலவும்

கவிதையும்
பாழாகிவிடாதிருக்க அவசியம்
கனத்தச் சொற்கள் விஷயத்தில்
படைப்பாளிகள் எப்போதும்
கூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

ஸ்ரீராம். said...

கனத்த சொற்களைப் பேசும்போது என்ன உணர்ச்சியில் பேசுகிறோம் என்று காட்டலாம். எழுத்தில் அப்படி முடியாது! அது படிப்பவர்கள் மனநிலையைப் பொறுத்தது.

கோமதி அரசு said...

உண்மை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

பேசும்போதும் கனத்த வார்த்தைகள் வந்துவிட்டால் பிறகு வருத்தம் தான் மிஞ்சுகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

கனமான சொற்கள் விஷயத்தை கவனமாக கையாள வேண்டியது பற்றி மிகச் சுலபமாக உதாரணங்களுடன் சொல்லியுள்ளது, படிக்க கனமில்லாமல் லேஸாகவும் அழகாகவும் உள்ளது. பாராட்டுகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

நான் விரும்பித் தொடர்கிற
பதிவர்களில் ஒருவர் சமூக அவலம் குறித்து
ஒரு தார்மீகக் கொண்டு எழுதுவார்
அது எனக்குப் பிடிக்கும்

ஆனாலும் ஏனோ "ம " "வெ" எனத் துவங்கும்
நாம் அநாகரீகச் சொற்கள் என விலக்கும் வார்த்தையை
ஒவ்வொரு பதிவிலும் விடாமல் எழுதுவார்

ஒரு பின்னூட்டத்தில் கூட அது குறித்து
அதை மட்டும் தவிர்க்கலாமே என
எழுதினேன். அது பலனலிக்கவில்லை

அது குறித்து யோசிக்கையில்
அந்த அநாகரீகச் சொல்லையே அப்படிச் சொல்லாமல்
கடினமானச் சொல்லென சொல்லலாமே
என எழுதிப் பார்த்தேன்

அவ்வளவே...

tharun said...

Speech Imparted is most important supper

tharun said...

Speech Imparted is most important supper

Post a Comment