Sunday, January 1, 2017

குழப்பத்தில் தள்ளாடும் சராசரிகளுக்கான கைத்தடி...

சந்தோஷத்திற்கும்
அதைக் கொண்டாடுவதற்கும்
காரணங்கள் தேவையில்லை

காரணங்களின்றியே
சந்தோஷமாய் இருக்கும்
உபாயம் அறிந்தவன்
காரணங்கள் தேடி அலைவதே இல்லை

இந்த சூட்சுமம் அறியா சராசரியோ
கிடைத்த சந்தோஷ தருணங்களில் கூட
அதை இரசித்துக் கொண்டாடாது
காரணங்களை விமர்சித்துத் திரிகிறான்

"இது ஆங்கில வருடப் பிறப்பு
தமிழருக்கு இது தேவையா ?"
என இனப்பற்றைச் சொறிந்து ...

"பொங்கல் திருவிழா
இது கதிரவனை வணங்குவோருக்கானது
இது இஸ்லாமியருக்குத் தேவையில்லை "
என மதப்பற்றைக் கீறி ..

"ஆயுதங்களுக்கு எதற்குப் பூஜை ?
அது மடத்தனமில்லையா "
எனப் பகுத்தறிவு வாதம்  முழங்கி...

........................
சராசரியானவன்
சந்தோஷமாய்
இருக்கக் கிடைத்த அபூர்வத் தருணங்களைக் கூட
தொலைத்துத் திரிகிறான்

காரணங்களின்றியே
சந்தோஷமாய் இருக்கும்
சூட்சுமம் அறிந்தவனோ
அந்தத் தருணங்களில்
சந்தோஷத்தின் உச்சம் தொடுகிறான்

ஏனெனில்
அவனுக்கு நிச்சயமாய்த் தெரியும்
சந்தோதோஷமாய் இருப்பதற்கு
காரணத் தேவை இல்லவே இல்லை என்பதும்

காரணங்கள் எல்லாம்
குழப்பத்தில் தள்ளாடும்
சராசரிகளுக்கானக்  கைத்தடிதான்  என்பதுவும்...

22 comments:

ஆல் இஸ் வெல்....... said...

ரொம்ப நல்லா இருக்கு..

அபயாஅருணா said...

சராசரியானவன்
சந்தோஷமாய்
இருக்கக் கிடைத்த அபூர்வத் தருணங்களைக் கூட
தொலைத்துத் திரிகிறான்

இது 100% உண்மை .

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழப்பத்தில் தள்ளாடும் சராசரிகளுக்கான கைத்தடி பற்றியதான இந்தப் பதிவு அருமை. குழப்பங்களை நீக்கித் தெளிவினைத் தந்துள்ளது. பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இருப்பினும் இன்னும் ஒரு சிறு குழப்பம்:

7-வது வரியில் உள்ள 3-வது வார்த்தை

’அழைவதே’வா அல்லது
’அலைவதே’வா என்பதில் :)

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

கருத்தில் கவனம் கொண்டு
அவசரமாய் எழுதி
மீண்டும் ஒருமுறை படிக்காது
விட்டுவிடுவதால் வரும் கோளாறு இது
சரிசெய்துவிட்டேன்
சுட்டிக்காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

சராசரியானவன்
சந்தோஷமாய்
இருக்கக் கிடைத்த அபூர்வத் தருணங்களைக் கூட
தொலைத்துத் திரிகிறான்//

அருமை உண்மை!!!!! முழுவதும் உண்மை!!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Youngcrap said...
This comment has been removed by the author.
Youngcrap said...

காரணம் இல்லாம சிரிக்கிறவன் கிருக்கன் அப்படினு எங்க ஆச்சி சொல்லும்!!!

Yaathoramani.blogspot.com said...

Youngcrap //உங்கள் பக்கம் போய்ப்பார்த்தேன்
உங்க ஆத்தா சொன்னதும் சரிதான்
எனப்பட்டது
வாழ்த்துக்களுடன்...

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் வரிகள்
சராசரியானவன் எண்ணிப் பார்த்து
வெற்றி நடை போட வேண்டும்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

சந்தோஷப்படவும் ஆச்சரியப்படவும் நிறையவே இருக்கின்றன

V Mawley said...



Serious-minded people எல்லோருமே ' சந்தோஷப்படுவதை ' seriousness-க்கு விலையாக கொடுக்க வேண்டியுப்பது தான் உண்மை ..நான் இதை புத்தி பூர்வமாக உணர்கிறேன் ..இந்த விஷயத்தை தாங்கள்
அணுகியிருப்பது very thoughtful ..

இன்னொரு விஷயத்தைப் பற்றி கூட கொஞ்சம் 'சிந்துக்கும் படி ' தங்களுக்கு ஒரு நேயர்-விருப்பம் (!)...தினமும் 'தினசரிகளில் ' ..
நீ/தாங்கள் என்/எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள் .. எங்களை வழிநடத்துகிறீர்கள் etc.,etc.. என்பது போன்ற 'செய்திகளை,'
சென்றுவிட்டவர்களை , மிகவும் மதிக்கிறவர்கள் -பிரசுரிக்கிறார்களே ...இதில் உள்ள மனோ தத்துவம் பற்றி ..

மாலி

ஜீவி said...

//சந்தோஷத்திற்கும்
அதைக் கொண்டாடுவதற்கும்
காரணங்கள் தேவையில்லை.. //

இஜ்த எடுப்பு மனசில் துளிர்த்ததுமே தம்மை வரிகளாக்கிக் கொண்ட வார்த்தைகள் அது பாட்டுக்க அங்க்ங்கே வந்தமர்ததை உணர்ந்தேன்..

வெங்கட் நாகராஜ் said...

சந்தோஷப்பட காரணம் தேவையில்லை.... எப்போதும் சந்தோஷமாக இருப்போம்....

நல்ல பகிர்வு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எதுவும் அவரவர் மனதைப் பொறுத்தே அமையும். அது மகிழ்ச்சியான நிலையில் அமையட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

Nagendra Bharathi said...

அருமை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென சூட்சுமாக சொல்லி அழகாக புரிய வைத்திருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

தி.தமிழ் இளங்கோ said...

எல்லாம் இன்ப மயம். புத்தாண்டு வாழ்த்துகள்.

s m swamy said...

atharku ore oru kaaranam undu. athu, eppothum santosama irunthu santosap padutthuvathe

Post a Comment