Wednesday, February 15, 2017

இன்றைய அரசியல் சூழல்.. ஒரு யதார்த்தப் பார்வை

அ.இ.அ.தி.மு. க வைச் சேர்ந்த பெரும்பாலான
சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து
மன்னார்குடி குடும்ப அதிக்கம் உள்ள பக்கம்
நீடிப்பது அவர்கள் அறியாமல் செய்கிற
தவறு இல்லை

அது அவர்கள் அறிந்தே செய்வதுதான்

அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள்
அதிக பட்சம் அறிந்தது சசிகலா அம்மா அவர்களைத்தான்.
அவர்கள் தேர்தலில் சீட்டுபெற்றதும், தொடர்ந்து
தொடர்பில் இருந்ததும் சசிகலா அம்மாவுடன் தான்

ஏனெனில் அவர்களுக்கான எந்தத் தகவலும்
உத்தரவும் சசிகலா அவர்கள் மூலம்தான்
பெரிய அம்மா சொன்னதாகப் பெறப்பட்டிருக்க
வாய்ப்பு இருந்திருக்கிறதே அன்றி
இவர்கள் நேரடியாக கருத்தைச் சொல்லவோ
அல்லது கருத்தைப் பெறவோ வாய்ப்பு
நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை

அவர்களுகெல்லாம் நிச்சயம் தெரியும்
இனி இரட்டை இலை சின்னத்தில் நிற்கும்
வாய்ப்பு கிடைத்தாலும்  தேர்தலில்
வெல்லும் வாய்ப்பு நிச்சயம் இல்லை

இருக்கிற பதவியைத் தக்க வைத்துக் கொண்டு
திரிசங்குச் சொர்க்கம்போல
மீதம் இருக்கிற காலத்தை ஓட்டுவதைத் தவிர
அவர்களுக்கு வேறு வழி இல்லை

நம்மைப் பொ ருத்தவரை ...

கட்சித் தலைமை மட்டுமல்லாது வேட்பாளரின்
தகுதி அறிந்தும் வாக்களிக்க வேண்டிய
அவசியத்தை நிச்சயமாக இந்தச் சூழல்
மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது

கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இனி
இயல்பாய் வெளி வர வாய்ப்பு இல்லாததால்
தேர்தல் வருமாயின் கூடுமானவரையில்
இப்போதை விட கொஞ்சம் மேம்பட்ட
சட்டமன்ற உறுப்பினர்கள் வென்று வரவும்
வாய்ப்பும் இருக்கிறது

கண்ணுக்குத் தெரிந்த பெரிய விஷ மரத்தை
நீதி வீழ்த்திவிட்டது

கட்சிக்குள் பரவி உள்ள அதன் ஆணி வேர்கள்
விஷ மரத்தை மீண்டும் துளிர்க்க விடாதுச்
செய்ய வேண்டிய பொறுப்பு...

உண்மையான அண்ணா தி.மு.க தொண்டர்களுக்கு
மட்டுமல்ல

எதிர்கட்சிக்கும் இருக்கிறது

என்ன செய்யப்போகிறார்கள்

பொருத்திருந்து பார்ப்போம்

8 comments:

Avargal Unmaigal said...

போலி அரசியல்வாதிகளை இனம் கண்டு நல்லவர்களை அவர்கள் எந்தக்கட்சியானாலும் அவர்களை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும்

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். இதுமாதிரியான ஆட்களை வைத்துக் கொண்டு இன்னும் கஷ்டப் படுவதைவிட, ஒரு பொதுத் தேர்தல் வருவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

PUTHIYAMAADHAVI said...

In-between J and MLAs sasis role ...totally i agree with u.very realistic approach on today's situation.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய அரசியல் யதார்த்தத்தை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

இனியொரு தேர்தல் வந்தால் மக்கள் மிகவும் யோசித்துப் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்பதை நிச்சயமாக நாம் எதிர்பார்க்கலாம்.

ஸ்ரீராம். said...

தேர்தல் வரவேண்டும் என்றே விருப்பம். ஆனால் யாருக்கு வோட்டு போடுவது?!!

G.M Balasubramaniam said...

ஒன்றுமட்டும் புரியவில்லை அம்மாவோ சின்னம்மாவோ குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அளிக்கப்பட்டும் ஏன் இந்தக் கூக்குரல் மக்களின் குரலா ஊழலுக்கா நம்மை ஆள்பவரை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம் ஊழல் பேர்வழிகளானாலும் மக்களிடம் செல்வாக்கு நீடிக்கிறதே

Unknown said...

Controvercy in other Opposition parties also prevails. 176000 CCCCCCCCs.How could the poor voter choose

Post a Comment