Tuesday, February 21, 2017

" மெயில் விடுத் தூது "

சிறுத்து
இனித்த இரவுகள்
நீண்டுக் கசக்கிறது

போர்வையாய்
கதகதத்த இருள்
மிரட்டிக் கனக்கிறது

தோழனாய்
அரவணைத்தத் தனிமை
நெருப்பாய் எரிக்கிறது

தாயாய்த்
தாலாட்டிய உறக்கம்
விழிகளைக் கிழிக்கிறது

மெழுகாய்
உருகி ஒளிர்ந்து
இருள் ஓட்டிய அற்புதமே

உடலுள்
உயிராய் நிறைந்து
உணர்வூட்டிய அதிசயமே

பிளவுகளாய்த்
தொடக்கத்தில்  தெரிந்த
சின்னச் சின்னப் பிரிவுகள்

இப்போது
பூகம்பமாய் வெடித்து
சிதறவைத்துப் போகிறது

என் சிந்தனையை
சிதிலமடையச்
செய்து போகிறது

பாமரனை
பாவலனாக உயர்த்தி
இரசித்தப் பைங்கிளியே

மீண்டும் நான்
பாமரனாவதற்குள்
உடன் வந்துச் சேர்

(  ஒரு காதலர்  பிரிவுக் கவிதையைப்
படிக்க  வந்த கோபத்தில்/ சோகத்தில்
பிறந்த கவிதை )

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோபத்தில் / சோகத்தில், பிறந்த கவிதையாயினும் "மெயில் விடுத் தூது" என்ற தலைப்பும் வரிகளும் மிகப் பொருத்தமாகவே விழுந்துள்ளன.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

ஸ்ரீராம். said...

பாமரன் பாவலனாவதும், பாவலன் பாமரனாவதும் கன்னியின் கடைக்கண் பார்வையிலா!

Yarlpavanan said...

பாமரன் பாவலனாக உயரவோ
பாவலன் பாமரனாகத் தாழ்ந்திடவோ
பைங்கிளிகள் பார்வையோ...

Thulasidharan V Thillaiakathu said...

பாமரனை
பாவலனாக உயர்த்தி
இரசித்தப் பைங்கிளியே

மீண்டும் நான்
பாமரனாவதற்குள்
உடன் வந்துச் சேர்// மெயில் விடு தூது...ஆ! இப்போதெல்லாம் மெயில் கூட சில சமயம் பிசகிவிடும்...வாட்சப் விடு தூது??!!!!

Post a Comment