Monday, February 13, 2017

தர்மம் தன்னை சூது கவ்வும்.....

தர்மம் தன்னை
சூது கவ்வும்
ஆயினும்
இறுதியில் தர்மமே வெல்லும்

என்பதனை

தர்மம் தன்னை
சூது கவ்வும்
இருபது ஆண்டுகள் ஆயினும்
இறுதியில்
தர்மமே வெல்லும்

என இனிச் சொல்லலாம்

நீதியின் மீதும்
சட்டத்தின் மீதும்
நாம் இழந்து கொண்டிருந்த நம்பிக்கையை
மீட்டுக் கொடுத்த
நீதிபதிகளுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றியும்
நல்வாழ்த்துக்களும்

13 comments:

அன்பே சிவம் said...

நச் முத்திரை தீர்ப்ப...

அன்பே சிவம் said...

நச் மு த் தி ரை தீ ர்ப் பு... திரை விலகியது. கறை மறைந்தது.
.

அன்பே சிவம் said...

நச் மு த் தி ரை தீ ர்ப் பு... திரை விலகியது. கறை மறைந்தது.
.

Thulasidharan V Thillaiakathu said...

இருக்கலாம். உங்கள் வரிகள் அருமை. ஆனால் இது வரை நடந்த வழக்கில் சொல்ல முடியாத சொல்லத் தவறிய தீர்ப்பு இப்போது எப்படி இவ்வளவு விரைவாக வந்தது என்பது வியப்பு. மட்டுமல்ல தீர்ப்பிலிலும் அரசியல்??!!! ஆதாயம்....இத்தனை நாள் இந்த தர்மம் எங்கே ஒளிந்திருந்தது??!!!

கீதா

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்படியோ, ஏதோவொரு திரை கொஞ்சம் விலகியதும், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சமாவது வெளிச்சம் கிடைக்க இருப்பதும் கேட்க மகிழ்ச்சியே.

இருப்பினும் இதுபோன்ற முக்கியமான கிரிமினல் வழக்குகளின் தீர்ப்புகளில் இவ்வளவு கால தாமதம் ஏற்படக்கூடாது.

அவற்றை அனைத்துக் கோர்ட்டுகளிலும் சேர்த்து, அதிகபக்ஷம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து, நியாயமான தீர்ப்பு, விரைவாக வழங்கப்பட வேண்டும் என ஓர் அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மக்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

தி.தமிழ் இளங்கோ said...

பல்வேறு மனிதர்களை அடையாளம் காட்டிய வழக்கு.

Yarlpavanan said...

நீதியின் மீதும்
சட்டத்தின் மீதும்
நாம் இழந்து கொண்டிருந்த
நம்பிக்கையை மீட்டுக் கொடுத்த
நீதிபதிகளைப் பாராட்டுவோம்!

G.M Balasubramaniam said...

எட்டுமாதங்களுக்கு முன்பே முடித்திருந்த வழக்கில் இப்பொழுது தீர்ப்பு. நல்ல காலம் ஜெயலலிதா தப்பித்துக் கொண்டார் ஜஸ்டிஸ் டிலேய்ட் இஸ் ஜஸ்டிஸ் டினைட்

இராய செல்லப்பா said...

இருபது ஆண்டுகள் கழித்துத்தான் தர்மம் வெல்லும் என்றால், எங்களுக்கு வயதாகிவிடுமே என்கிறார் ஓர் இளைஞர். ஓரளவு முயன்றால்- குமாரசாமிகளை அகற்றினால் - தீர்ப்பு இன்னும் இரண்டு வருடம் முன்னதாகவே வரக்கூடும். செய்வீர்களா, செய்வீர்களா?

- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

இப்படி இழுத்தடிக்காமல் இருக்க வேண்டும் - அப்படி நடக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ....

V Mawley said...

One definite result is that Tamilnad has been freed from the clutches of the Mannargudi Mafia--So far so good..

Mali

G.M Balasubramaniam said...

@ வி.மாலி, இத்தனை மகிழ்ச்சி கூடாது. மன்னார்குடி மாஃபியா சிறையிலிருந்தே ஆட்டுவிக்கலாம் கைத்தடிக்கு முதலமைச்சர் பதவி

Post a Comment