Thursday, February 9, 2017

முக்கியம்விஷயம் மட்டும் இல்லை அதைக் கொடுக்கும் விதமும்...

தொலைக்காட்சியில் விவாத மேடையில்
பேசுபவர்கள் எல்லாம் பேசுகிற பொருள் குறித்து
அந்தப் பொருள் குறித்து
அவர்கள் சார்ந்திருக்கிற இயக்கங்களின்
கொண்டிருக்கிற கருத்துக் குறித்தெல்லாம்
தெளிவாகப் பேசுகிறார்கள்

ஆனால் விவாதிப்பது எப்படி என்று
மட்டும் தெரியாமல் பேசுவது
பார்க்கவும் கேட்கவும் எரிச்சலூட்டுகிறது

முதலில் இதுபோல் நிகழ்ச்சிக்கு
அழைப்பவர்களை பிரபலமானவர்களா
எனப் பார்க்காமல்,விவாதித்தல் குறித்த
அடிப்படை அறிவுள்ளவர்களா எனப்
பார்த்து தேர்ந்தெடுத்தல் நல்லது

தெருவோரக்கடைக்கும்,
ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள
வித்தியாசம் ருசி, என்பது மட்டும் இல்லை
அதை விட உணவைக் கொடுக்கும்
விதமும்  மிக மிக முக்கியம் இல்லையா ?

அன்னியர்கள் பிரவேசிக்கக் கூடாது
அல்லது அனுமதிப் பெற்று வரவும்
என எழுதப்பட்ட சமையலறையுள்
எட்டிப்பார்த்தோம் எனில்....

அந்தச் சூழலையும் வேர்வையில்
குளித்து வெற்று உடம்புடன் இருக்கும்
சரக்குமாஸ்டரையும் தோசை துடைப்பத்தையும்
பார்த்தோமெனில், நிச்சயம் நெய்ரோஸ்ட்
கசக்கவே செய்யும்.. முக்கியம்

மாறாக டிப்டாப்பாக உடையணிந்து
மிகப் பவய்மாய் பறிமாறும் சர்வரை
தோசை ஊற்றச் சொல்வோமெனில்
நிச்சயம் நெய்ரோஸ்ட் வாயில் வைக்க
விளங்காதுதானே ?

அதைப்போலத்தான் இதுவும்....

நமக்குத் தேவை
விஷயம்  மட்டும்  இல்லை
அதைக் கொடுக்கும் விதமும்...முக்கியம்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோர் இனியேனும்
கவனம் கொள்வார்களா ?

12 comments:

KILLERGEE Devakottai said...

நல்லதொரு கோரிக்கை கவிஞரே

V Mawley said...



முக்கியமான விஷயத்தை தான் தொட்டிருக்கிறீர்கள் ..பல நேரங்களில் விவாதங்களில் பங்கேற்க வந்திருக்கும் இரண்டு மூன்று நபர்களும் ஒரே சமயத்தில் ஆக்ரோஷத்துடன் தன் கருத்தையே திரும்ப திரும்ப கூவுகின்றார்கள் ..யார் சொல்வதையும் கேட்க முடிவதில்லை ..மூன்று நாட்கள் முன்பு ஒரு விவாதத்தில் , நெறிப்படுத்த வேண்டிய நபரும் சேர்ந்து கொண்டார்--கத்தலில் !

என் SUGGESTION என்னவென்றால் ,பங்கேற்பவர்களின் COLLAR மைக்கின் ரிமோட் கண்ட்ரோல் , நெறிப்படுத்துவர் கையில் இருக்க வேண்டும் ...ஒரு சமயம் யார் பேசுகிறாரோ அவரைத்தவிற மற்றவர்களின் COLLAR மைக் OFF செய்யப் படவேண்டும் ...

மாலி

Avargal Unmaigal said...

இவர்கள் செயவது விவாதம் அல்ல விதாண்டாவாதம் அதுவும் காட்டு கத்தலில்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேலே நம் மாலி ஸார் அவர்கள் சொல்லியுள்ளது நல்ல யோசனை.

ஒருவர் பேசும்போது, மற்றவர்களும் பேசினால் சந்தைக்கடை போல ஒரே இரைச்சலாக மட்டுமே உள்ளது. மிகுந்த எரிச்சலும் ஏற்படுகிறது.

இருப்பினும் இதில் தாங்கள் சொல்ல வந்த முக்கியமான சப்ஜெக்டைவிட, அந்த நெய் ரோஸ்ட் உதராணத்தின் ருசியை நான் மிகவும் ரஸித்தேன். :)

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

நான் இந்த விவாத நிகழ்ச்சி எதுவுமே பார்ப்பதில்லை. பொறுமை கிடையாது. எரிச்சல்தான் வரும்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல கோரிக்கை

இராய செல்லப்பா said...

இந்தவிவாதங்கள்எல்லாம்வெற்றுஅரட்டையன்றிவேறில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த விவாதங்கள் எல்லாம் வெற்று வேட்டுகள். பயனில்லாதவை. பார்க்கும் பொறுமையும் இல்லை. உங்கள் கருத்து மிகவும் சரியே!

G.M Balasubramaniam said...

விவாதம் என்றால் எதிராளியின் கருத்தும் கேட்கப்படவேண்டும் இல்லாவிட்டால் அது வெறும் வாதமாகவே இருக்கும் விதண்டாவேதம்

balu said...

Fine

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கோரிக்கை. இந்த விவாதங்கள் பார்க்கவே பிடிப்பதில்லை - அனைவரும் கத்திக்கொண்டிருக்க சந்தைக்கடை மாதிரி இருக்கிறது!

Yarlpavanan said...

சிறப்பாக அலசி உள்ளீர்கள்
விழிப்புணர்வு மலர வேண்டும்

Post a Comment