ஒவ்வொரு படைப்பின் போதும்
"எதை" எனக்
குழப்பிக்கொள்ளாதே
அது உன் சிந்தனையை
ஓரடி நகரவிடாது நிறுத்திவிடும்
"இதை"த்தான் என்பதில்
மிகத் தெளிவாய் இரு
சிந்தனைச் சரடின் நுனி
சட்டெனச் சிக்கிவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"எப்படி"எனக்
கலங்கிப் போகாதே
அது போகாத ஊருக்கு அனுப்புவதில்
மிகக் குறியாய் இருக்கும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"இப்படித்தான்"என்பதில்
திண்ணமாய் இரு
நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
தெளிவாயும் தெரியத் துவங்கும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"யாருக்கு" எனக்
குழம்பிச் சாகாதே
அது உன்னைச் செக்குமாடாக்கி
ஓரிடத்தினிலேயே சுழலச் செய்துவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"இவர்களுக்குத்" தான்
என்பதில் உறுதியாய் இரு
நேர்க்கோட்டுச் சிந்தனை
இயல்பாகவே அமையப் பெற்றுவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"ஏன் " என
எண்ணி மாளாதே
அது அஸ்திவாரத்தை அசைப்பதோடு
உன்னையும் செல்லாக் காசாக்கிவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
உன் இலக்கதனை
மிகச் சரியாய் நேர்செய்து கொள்
உன் படைப்பு நிச்சயம்
கவனிக்கத் தக்கதாகிவிடும்
காலம் கடக்கும்
அமர காவியமாகியும் விடும்
"எதை" எனக்
குழப்பிக்கொள்ளாதே
அது உன் சிந்தனையை
ஓரடி நகரவிடாது நிறுத்திவிடும்
"இதை"த்தான் என்பதில்
மிகத் தெளிவாய் இரு
சிந்தனைச் சரடின் நுனி
சட்டெனச் சிக்கிவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"எப்படி"எனக்
கலங்கிப் போகாதே
அது போகாத ஊருக்கு அனுப்புவதில்
மிகக் குறியாய் இருக்கும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"இப்படித்தான்"என்பதில்
திண்ணமாய் இரு
நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
தெளிவாயும் தெரியத் துவங்கும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"யாருக்கு" எனக்
குழம்பிச் சாகாதே
அது உன்னைச் செக்குமாடாக்கி
ஓரிடத்தினிலேயே சுழலச் செய்துவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"இவர்களுக்குத்" தான்
என்பதில் உறுதியாய் இரு
நேர்க்கோட்டுச் சிந்தனை
இயல்பாகவே அமையப் பெற்றுவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
"ஏன் " என
எண்ணி மாளாதே
அது அஸ்திவாரத்தை அசைப்பதோடு
உன்னையும் செல்லாக் காசாக்கிவிடும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
உன் இலக்கதனை
மிகச் சரியாய் நேர்செய்து கொள்
உன் படைப்பு நிச்சயம்
கவனிக்கத் தக்கதாகிவிடும்
காலம் கடக்கும்
அமர காவியமாகியும் விடும்
11 comments:
படைப்புகள் நின்று பேசப்படும் கலை/
படைப்பாளிகளுக்கு நல்ல வழிகாட்டல் பதிவு கவிஞரே
ஒவ்வொரு படைப்பின் போதும்... வெற்றிகாண இலக்கினை நிர்ணயித்து, ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டிய நற்சிந்தனைகளை மிக அழகாகத் தெளிவாக தங்கள் பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
"இதைத்தான்", "இப்படித்தான்", "இவர்களுக்குத் தான்"..ஆகா, எவ்வளவு சுருக்கமாகச் சொன்னீர்கள்! எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவும் இலட்சியம்.
-இராய செல்லப்பா நியூஜெர்சி
அனைத்தும் அருமை எந்த வரியை மேற்கோள் காட்டுவதென்று குழம்பித்தான் போனேன் அவ்வளவும் படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்
அருமை.
அருமை ஐயா
அருமை
அருமை ஐயா
உங்கள் படைப்பு அருமை ரமணி சார்
தெளிவே துணை. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Post a Comment