இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..
கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட
கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..
கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...
கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...
கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை
கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை
இப்படி உதாரணங்கள் நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்.
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக் கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...
தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..
கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட
கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..
கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...
கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...
கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை
கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை
இப்படி உதாரணங்கள் நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்.
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக் கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...
தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287
20 comments:
///கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட////
மீ தான் இங்கின 1ஸ்ட்டூ:)..ஹா ஹா ஹா மிக அருமை... நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.. பிள்ளைகளில்கூட இப்படி உண்டு, நாம் சொல்லிக் கேட்காட்டிலும் அக்கா, அண்ணா அல்லது தம்பி தங்கை சொல்ல்வதைக் கேட்டிடும் சகோதரங்களும் உண்டு....
அந்த நூறுக்குத்தான் கால் எடுத்திட்டீங்க கவனிக்காமல்:).. 2 வதூஊஊஊஊஉ என்னோடது.
இதான் நம்ம தலைவிதி
இதான் நம்ம தலைவிதி
இதை கும்கி மெதட் என்று சொல்லலாமா ஜி :)
கட்டுப்பட்டதைக் கொண்டு கட்டுப்படாததை புரிய வைத்துவிட்டீர்கள். அருமையான ஆக்கம் இது.
அகமகிழ்ச்சியுடன் படித்து மகிழ்ந்தோம். சொற்கள் தங்களிடம் சும்மா நர்த்தனமாடுகின்றன. :) பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிவிற்கு அன்புடன் வாழ்த்துகள்
எனது இரண்டாவது வலையில்தான்
ஆக்கங்கள் போடுகிறேன்.
இங்கு வாருங்கள்:- https://kovaikkothai.wordpress.com/
asha bhosle athira //
.ஆம் அவசரத்தில் நூறு
முடமாகி இருந்ததைக் கவனிக்கவில்லை
சரி செய்து விட்டுவிட்டேன்
தங்கள் முதல் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
ராஜி //
சரியாகச் சொன்னீர்கள்
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
Bagawanjee KA //
மிகச் சரி
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
கட்டுப்பட்ட கைகளைக் கொண்டு
கட்டுப் படாத கவிதையைக்
கட்டுப்படுத்திய விந்தை.
சிந்தனை அருமை.
வரிகளின் விளையாட்டை ரசித்தேன்
முடித்த விதம்... ஆகா...!
வை.கோபாலகிருஷ்ணன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
kavithai (kovaikkavi) //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அரபுத்தமிழன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
KILLERGEE Devakottai //
இப்போதுதான் தங்கள்
ஐநூறாவது பதிவைப் படித்து
இரசித்து மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் //
அதை யாராவது பாராட்டமாட்டார்களா
என ஆவலாய் இருந்தேன்
பாராட்டியமைக்கு நல்வாழ்த்துக்கள்
(மேல்தாடை அசைவதில்லை
என்கிற செய்தியை வைத்துத்தான்
இதை எழுதினேன் )
அருமையான கவிதை.
கோமதி அரசு //
வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment