Monday, April 16, 2018

கவிதைக் கரு

கனல் புணர
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று

காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்

உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று

சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக்  கரு

என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நன்று.

Avargal Unmaigal said...

குரு என்னமோ சொல்லவ்ரீங்க ஆனால் சிஷ்யனுக்கு அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம்மில்லை

Yarlpavanan said...

சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக் கரு

அருமை தொடருங்கள்

Post a Comment