Friday, May 11, 2018

நிர்வாண ஞானம்

 "உனக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய் "என்றார் அப்பா

எரிச்சல் எரிச்சலாக வந்தாலும்
என் நன்மைக்குத்தானே எனச்
 சொன்னதை எல்லாம் தவறாது செய்தேன்

 " உனக்குத் தெரியாது
 நாங்கள் சொல்கிறபடிச் செய் "
என்றார்கள் ஆசிரியர்கள்

 கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தாலும்
என் வளர்ச்சிக்குத்தானே என
சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தேன்

 "உங்களுக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய்யுங்கள் "
என்றாள்  மனைவி

அனுபவத்தில் சில விஷயங்களில்
அவள் சொல்வதே சரியாய் இருந்தாலும்
 ஆண் எனும் மனோபாவத்தில்
விரும்பாத பாவனையில் செய்தேன்

"உங்களுக்குப் புரியாது
நான் சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள் "
என்றான் மகன்

புதிய தொழிற்நுட்பங்கள் புரியாததால்
வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய்
அவன் சொன்னதை மட்டும் செய்து கொண்டு வந்தேன்

 "மக்குத்தாத்தா
 உனக்கு ஒன்னுமே தெரியலை
 இப்படிச்செய்யனும் "எனத்
தப்பும் தவறுமாய்  எது ஒன்றையும் செய்கிறாள் மழலை தாண்டும் பேத்தி.

முதன் முதலாய் தவற்றை ஒப்புக்கொண்டு
அவள் போங்கில் சரியாய்ச் செய்து போகிறேன்

 வாழ்வில் முதன் முதலாய்
"உனக்கு எதுவும் தெரியாது "என்கிற வார்த்தைக்குச்

சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
அடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி


25 comments:

KILLERGEE Devakottai said...

ம்...

ஸ்ரீராம். said...

ஸூப்பர்.

Ajai Sunilkar Joseph said...

அருமையா இருக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொன்றும் மிகச்சிறப்பான + உண்மையான + யதார்த்தமான வரிகள்.

நிர்வாண ஞானம் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா அருமை!! உண்மைதான் யார் சொன்னாலும் தவறாகவோ அல்லது கோபம் ஏற்படுத்தினாலும் பேரனோ பேத்தியோ சொன்னால் மட்டும் இனிய மொழியாய் ஆகிவிடுகிறது....

கீதா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சூப்பர்

'பசி'பரமசிவம் said...

//வாழ்வில் முதன் முதலாய்
"உனக்கு எதுவும் தெரியாது "என்கிற வார்த்தைக்குச்
சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
அடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி//

சிலிர்ப்பூட்டும் வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மிகக் குறிப்பாய் தலைப்பினைப் பாராட்டியமைக்கு.

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆம் அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன் தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

இன்னும் எழுத தெம்பூட்டும் பாராட்டுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

மிகவும் அருமை. ஒவ்வொரு காலகட்டத்திலும் சங்கடப் படும் நாம் மழலையின் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு இன்னமும் எதிர்பார்க்கிறோம்.
யதார்த்தமான மனப்பக்குவத்தை உணர்த்தும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நன்றிகள்.
அருமை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஜீவி said...

//சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
அடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி..///

சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
பிறர் கைப்பாவையாய்....


திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அருமையாகச் சொன்னீர்கள் ஆம் பிறர்க் கைப்பாவையாய்..வரவுக்கும் அற்புதமான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

சொல் கேட்டே வளர்ந்தோம் நாம்.
சின்னஞ்சிறு கிளிகள் சொல்வது மிக இனிது. அவர்கள்
வாய்மொழித்தேன் வளம் கொடுக்கும்.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

வாசகரை நன்றாகச் சிந்திக்கத் தூண்டி
வாசித்தவரை நன்றாகச் சிந்திக்க வைத்து
எள்ளளவேனும் வாழ்வைை எண்ணிப்பார்க்
இனிதே அமைத்துத் தந்த பாவுிது!

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

iramuthusamy@gmail.com said...

நமக்குத் தெரியாதவை எத்தனையோ? உறவுகள் தந்த விமர்சனம் உரமாய் அமைவது நெகிழ்ச்சிதானே.

Post a Comment