மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிகாடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
நிஜ உருவை விட
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது
பொறுக்கப் போகிற
பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டேன் ஆயினும்
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை
பாவப்பட்ட முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட
ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும் மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும் மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப் போகிறது
ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது
15 comments:
ரொட்டி - அரியணை
வேஷம் - அரசியல் போர்வை.
இதை பொது வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
எழுத்தின் பொருள் அருமை.
நன்றாக எழுதுகிறீர்கள். சமயங்களில் சொல்ல வரும் விஷயம் புரிவது போல இருக்கும். சமயங்களில் மறைபொருளாய் மறைந்து நின்று மயங்க வைக்கும். இதுவோ, அதுவோ என ஆட்டம் காட்டும்! இது அந்த வகை.
அருமையான பொருள் பொதிந்த பின்னூட்டம்.முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்
பல சமயங்களில் ரொம்பக் கெடுபிடியானவர்போல் காட்டிக் கொள்ளும் மிக மிக மென்மையானவர்களின் ஆதங்கத்தைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.தங்கள் வரவுக்கும் மனம் திறந்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
//ரொட்டிக்கான போருக்கு புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது//
ரொட்டிக்கான போர் என்ற நிலை வந்துவிட்ட போது, யாராக இருப்பினும் எந்த வேஷம் போடுவதிலும் தப்பு ஏதும் இல்லை.
அவரவர்கள் போட்டுள்ள வேஷம், கடைசிவரை கலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதே மிக முக்கியமாகும்.
காலத்துக்கு ஏற்ற கச்சிதமான பதிவுக்குப் பாராட்டுகள்.
உடன் வரவுக்கும் அற்புதமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
நன்றாக இருக்கிறது.
துளசிதரன், கீதா
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும் நல்வாழ்த்துக்கள்
நாடகமே இந்த உலகம் என்ற தத்துவத்தை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை அருமை...
வணக்கம் சகோதரரே
தங்கள் பாணியில், வார்த்தைகளை அருமையாக புனைந்து ஆழமான வரிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்.
நிஜமான உருவை விட்டு தேவைகளுக்காக புலியின் வேஷத்தோடு தினம் தினம் அவசியமாய் உலாவினாலும், மனம் மட்டும் குற்ற உணர்ச்சியில் அடுப்படி பூனையாக ஒடுங்குகிறது. நியாயமான மனதின் வேதனைகளை சொல்லில் வடித்த விதம் சூப்பர். மிகவும் ரசித்தேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறந்த எண்ணங்கள்
சிந்திக்க வைக்கும் - தங்கள்
கைவண்ணங்கள்!
புலிவேசம் போட்டது ரொட்டிக்காக மட்டுமா?நிஜ புலிகளிடம் மாட்டி நிம்மதியை தொலைக்கவா? இறுதியில் வேஷம் கலக்கப்பட்டு வீணாவது மட்டும் உறுதி@
You really make it seem really easy together with your presentation however I in finding this topic to be actually something which I think I would
never understand. It seems too complicated and very wide for me.
I'm having a look ahead in your subsequent submit, I will try to get the dangle of it!
Thank you for the auspicious writeup. It in fact was
a amusement account it. Look advanced to more added agreeable
from you! However, how can we communicate?
Post a Comment