Wednesday, May 2, 2018

தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

தமிழகத்திற்கு இப்போது
மிக மிக அவசரமாய் அவசியமாய்த்
தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

படிப்பு , சுய நலமின்மை ,
பொது நலன் பேணல் முதலான
குணங்கள் தேவையில்லை

ஊராட்சி வார்டில் நின்று
ஜெயிக்கும் செல்வாக்கு இல்லையெனிலும்
அது ஒரு பொருட்டில்லை

உணர்வுப் பூர்வமாய்
கேட்போரைக் கவரும்படியாய்
பேசமட்டும் தெரிந்திருக்கவேண்டும்

மிகக் குறிப்பாய்...

ஜாதி வைத்தோ மதம் வைத்தோ
மக்களைக் கூறு போடும் படியாய்...

எங்கோ எந்தக் கருங்காலியோ
செய்யும் சிறு பிரச்சனையாயின்
அதனைப் பெரிதாக்கும் படியாய்

பெரிதெனின் அதனை
பிரச்சனையாகச் சிந்திக்கவிடாது
ஜாதி மதத்தோடுக் கலந்து
இன்னும் மிகப் பெரும் பிரச்சனையாக்கும்படியாய்

அவசியம் பேசத்  தெரிந்திருக்க வேண்டும்

இப்போது
அதைச் செய்து கொண்டிருப்பவர்களின்
போலி அடையாளங்கள் உதிர்ந்து போனதால்

ஒரு பெருவாரியான மதத்தின் பெயரைத் தாங்கிய
வேற்று மதத்தினர் என்பது
அதிகம் பிரச்சாரமாகிப் போனதால்

அவர்களை நம்பி இனிப் பயனில்லை என்பதாலே
நாங்கள்
புதுத் தலைவர்களைத் தேடுகிறோம்

(பொது மதத்தினருக்கு
கூடுதல் வாய்ப்பளிக்கப்படும் என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டுகிறோம் )

இவண்

தமிழகத்தை பதட்டத்திலேயே வைத்திருக்க
உறுதி கொண்டோர் கழகம்
(த.ப.வை.உ.கொ.க  )

3 comments:

ஸ்ரீராம். said...

வேதனையான உண்மை.

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது உண்மை.

பேச தெரிந்தவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் .

சிகரம் பாரதி said...

அட. கலக்கல். நாடு போகும் போக்கு இப்படியாய் இருக்கிறது. சிந்திப்போம், செயல் படுவோம்!

காணாத கோணத்தில் கவியின் வரவு
https://newsigaram.blogspot.com/2018/05/KAANAATHA-KONATHTHIL-KAVIYIN-VARAVU.html
பதிவர் : கவிஞர் கி. பாலாஜி
#தமிழ் #கவிதை #பாலாஜி #tamil #poem #balaji #sigaram #sigaramco #சிகரம்

Post a Comment