Sunday, May 20, 2018

சுற்றுச் சுவர்

கரிய இருள்
கூடுதல் தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
மிக எளிதாய்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

வெகு நாட்களாய் 
பட்டுப்போய்க் கிடந்தவைகள்   கூட
இப்போது  லேசாய்
மிக லேசாய்த்   துளிர்க்கத் துவங்குகின்றன

13 comments:

KILLERGEE Devakottai said...

துளிர்ப்பு மனித மனங்களுக்கு அவசியமானதே...

Yaathoramani.blogspot.com said...

முதல் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

துளிர்க்கத் துவங்குபவைகள் யாவும் ஒரு நாள் பட்டுப்போகத்தான் செய்யும். இது இயற்கையின் விதி.

பட்டால் மட்டுமே தெரியும் ..... பட்டுப்போனவைகளே தேவலாமோ ..... பட்டுத் தங்கங்களோ என்று.

Yaathoramani.blogspot.com said...

அதுவும் சரிதான்.பட்டால் தெரியும் சில பட்டே கூட இருந்தால் கூடத் தேவலாம் எனப்படும்

சிகரம் பாரதி said...

அருமை. சிறப்பான வரிகள். துளிர்த்தது உங்கள் கவிதை மட்டுமல்ல, எங்கள் மனங்களும் தான்!

பயணங்கள் பலவிதம் - 03
https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html
#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

அளவான தூரம்; விலகாத நேசங்கள்.

அருமை.

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமான.நிறைவான பின்னூட்டம்.மிக்க நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அளவான வார்த்தைகள்... அருமையான உவமானங்கள்..
தங்களின் நம்பிக்கை கவிதை கண்டு எங்கள் மனதிலும் பட்டுப் போனவையும் துளிர் விடுகின்றன... மிக அருமை .

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Anonymous said...

It's remarkable in support of me to have a site, which is beneficial
in support of my experience. thanks admin

Anonymous said...

I always was concerned in this topic and still am, thanks for putting up.

Yaathoramani.blogspot.com said...

Pl post your link

Post a Comment