"வனத்தோடு வாழ்ந்தாலும்
இனத்தோடு வாழ் "
இதில் இனம் என்பது
உடலால் என்பதில்
விலங்குகளுக்குக் குழப்பமில்லை
நமக்குத்தான் ஆயிரம் குழப்பம்
ஆதி மனிதனுக்குக் குழுவே இனம்
அடுத்து அதன் தொடர்ச்சியாய் ஜாதி
அதன் அகண்ட வடிவாய் மொழி
அதன் எல்லை விரிய விரிய மதம்
அது இன்னும் இன்னும் விரிய நாடு
அதன் நிறைவான எல்லையாய்
மதிக்கத் தக்கதாய் மனிதம்
ஆயினும் இன்னும் நம்மை
நிறைவினில் சிறிது நேரம் கூட நிற்கவிடாது
குறைந்த பட்சம் நாட்டுடன் கூட
நிலைபெற்று இருக்க விடாது
இனம் என்னும் சொல்லுக்கு
வேறு வேறு விளக்கம் அளித்து
நம்மை பின்னோக்கி நகர்த்துவோரை ...
இனியேனும்
நம் எல்லைக் கோட்டைவிட்டு
வெளியே நகர்த்தி வைப்போம்
நம் நிலை என்றும்
நாட்டிற்குக் கீழிறங்கிவிடாது
மேல் நோக்கியே நகரும் எனும்
உறுதியை நெஞ்சில் ஏற்போம்
இனத்தோடு வாழ் "
இதில் இனம் என்பது
உடலால் என்பதில்
விலங்குகளுக்குக் குழப்பமில்லை
நமக்குத்தான் ஆயிரம் குழப்பம்
ஆதி மனிதனுக்குக் குழுவே இனம்
அடுத்து அதன் தொடர்ச்சியாய் ஜாதி
அதன் அகண்ட வடிவாய் மொழி
அதன் எல்லை விரிய விரிய மதம்
அது இன்னும் இன்னும் விரிய நாடு
அதன் நிறைவான எல்லையாய்
மதிக்கத் தக்கதாய் மனிதம்
ஆயினும் இன்னும் நம்மை
நிறைவினில் சிறிது நேரம் கூட நிற்கவிடாது
குறைந்த பட்சம் நாட்டுடன் கூட
நிலைபெற்று இருக்க விடாது
இனம் என்னும் சொல்லுக்கு
வேறு வேறு விளக்கம் அளித்து
நம்மை பின்னோக்கி நகர்த்துவோரை ...
இனியேனும்
நம் எல்லைக் கோட்டைவிட்டு
வெளியே நகர்த்தி வைப்போம்
நம் நிலை என்றும்
நாட்டிற்குக் கீழிறங்கிவிடாது
மேல் நோக்கியே நகரும் எனும்
உறுதியை நெஞ்சில் ஏற்போம்
4 comments:
உண்மை, அருமை.
சிறப்பு. ஜாதி மதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சக மனிதனுக்குக் கொடுத்தால் எல்லோருடைய வாழ்க்கையும் சிறக்கும். வாழ்த்துக்கள்.
காணாத கோணத்தில் கவியின் வரவு
https://newsigaram.blogspot.com/2018/05/KAANAATHA-KONATHTHIL-KAVIYIN-VARAVU.html
பதிவர் : கவிஞர் கி. பாலாஜி
#தமிழ் #கவிதை #பாலாஜி #tamil #poem #balaji #sigaram #sigaramco #சிகரம்
அருமை... மனிதத்தை மதிப்போம்...
எனக்கும்தான் ஆயிரம் குழப்பம் அய்யா....வனத்தோடு வாழ்ந்தாலும் இனத்தோடு வாழ். என்பதில்......எந்த இனத்தோடு....
Post a Comment