எதைப் பறக்க வைப்பது
எதை இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்
எதனைமுளைக்கச் செய்வது
எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்
எதனை மிதக்கச் செய்வது
எதனை மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்
எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக் கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்
எதனைக் கடத்தி ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்
எதை இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்
எதனைமுளைக்கச் செய்வது
எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்
எதனை மிதக்கச் செய்வது
எதனை மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்
எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக் கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்
எதனைக் கடத்தி ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்
19 comments:
அருமை கவிஞரே...
எவரை அமர வைப்பது
எவரை அடக்கி வைப்பது
இது ஜனநாயக கடமை ஆற்றும்போது தெரியவேண்டும்.
அருமை.
REVISED:
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தை விட்டு விட்டு .............
பூமி, காற்று, நீர், நெருப்பு ஆகிய நான்கின் தன்மைகளைப் பற்றி மட்டும் சொல்லியுள்ளீர்கள்.
அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆகாயம்..... வெயில், இடி, மின்னல், மழை போன்ற எதை எதை, எப்பப்போது, யார் யாருக்கு, எந்தெந்த அளவுக்குக் கொடுக்க வேண்டுமோ, அதை அதை, அவ்வப்போது, அவரவர்களுக்கு, அந்தந்த அளவுக்குக் கொடுத்தே தீரும்.
மேலும் அடுத்த பத்து நிமிடங்கள் முதல் பத்து மாதங்கள் வரைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
காலம் கடக்க நினைப்பதுதான்.... மனிதர்களின் செயல்.
காலம் யாருக்காகவும் எப்போதுமே காத்திருக்க விரும்பாது.
நடக்க வேண்டியவை, நடக்க வேண்டிய நேரத்தில், கச்சிதமாக நடந்தே தீரும்.
ஆம் தெரியவேண்டும் தெரியாமல் இருப்பதே ஜனநாயகத்தின் பலவீனம் உடன் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்
பாராட்டு இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது வாழ்த்துக்களுடன்
நீங்கள் குற்றிப்பிட்ட வானம் வெளி தானே இவைகள் அனைத்திற்கும் மூலம் இவைகளின் நிலைப்புக்கும் காரணம்.ஒருவகையில் இல்லாததுபோல் இருக்கிற மூலத்தைப் போல.அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
ஆம் நாம்தான் புரிபடாத அதை புரிந்து கொள்ள முயலவேண்டும்.அது எப்படி முயன்றாலும் பிடிபடாது என்றாலும்.
வெட்ட வெளியிலிருந்துதான் நீங்கள் குறிப்பிட்ட நான்கும் தோன்றி நின்று அதனுள்ளேலயே மறைந்துவிடுகின்றன நாம் அனைவரும் உட்பட.
அருமை
அருமையான கண்ணோட்டம்
நம்மவர் எண்ணவோட்டம்
எப்படியோ அப்படியே...
ஆம் அதனாலேயே சொல்லவேண்டியதில்லை எனக்கருதினேன்.வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்கள்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரரே
அருமையான எண்ணங்களுடன் கூடிய எழுத்துக்கள்.
பஞ்ச பூதங்களின் கடமைகளை, அவைகளின் இயற்கை சுபாவங்களை, எப்படியெல்லாம் பிறருக்கு நன்மை பயக்கும் விதமாக எந்தந்த நேரத்தில் தர வேண்டுமென அவைகளுக்கு தெரியுமென்பதை சூட்சுமமாக தாங்கள் சுட்டி காண்பித்திருப்பது மிகவும் அருமை.
இவ்வாறெல்லாம் எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். பாராட்டுகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அர்த்தமுள்ள கவிதை. ஏனோ கண்ணதாசன் நினைவுக்கு வருகிறார். இது அவரது பாணியோ?..
R Muthusamy //
பாராட்டு இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது வாழ்த்துக்களுடன்
Kamala Hariharan //
உற்சாகமூட்டும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்கள்
Post a Comment