Tuesday, August 21, 2018

விஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்

சாதாரண நாட்களில் படித்துக் கொண்டும்
விளையாடிக் கொண்டும் ஒய்வு நேரங்களில்
ஜாலியாகச் சினிமா மற்றும் வெட்டி அரட்டை
அடித்தபடி   சிரித்துப்  பேசி
கலாய்த்துக் கொண்டு  மட்டுமே
இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களுக்குள்  ,

நீறுபூத்த நெருப்பாக சமூகப் பொறுப்பும்
சேவை மனப்பான்மையும்  எவ்வளவு
கனன்று கொண்டிருக்கிறது  என்பதற்கு
வெள்ளம் புயல் போன்ற அசாதாரண
சூழல்கள்  வரும்போதுதான் நமக்கே
புரியவும் செய்கிறது ,நம் நாட்டின் வருங்காலம்
குறித்து பெரும் நம்பிக்கையும் துளிர்க்கச் செய்து போகிறது

மதுரை டி .வி.ஸ்  நகரில் இயங்கிவரும்
இளைஞர்கள் அமைப்பின் சார்பில்
சில தினங்களுக்குள் சுமார் ஒன்றரை
மதிப்பிலான மருந்துப்பொருட்கள் நாப்கின்
டவல்ஸ் , பிஸ்கெட்ஸ்,டார்ச் லைட் /உடைகள்
மற்றும்   உடனடி அவசரத் தேவைக்கான
பொருட்களை ச் சேகரித்து நிவாரண
முகாம்களுக்கு அனுப்பிவைத்த நிகழ்வு
மிக்க பெருமிதம் தருகிறது

அவர்களது சேவையைப்  போற்றும் விதமாக
விஸ்வரூபம் எடுத்த வாமனர்களின்
புகைப்படங்களை இங்கு பகிர்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்


15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்//

அருமையான பொருத்தமான தலைப்பு.

மனிதாபிமானத்துடன் இந்த மகத்தான சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

//நம் நாட்டின் வருங்காலம் குறித்தது பெரும் நம்பிக்கையும் துளிர்க்கிறது//

ஆம். நிச்சயமாக. எல்லா ஊர்களிலும் இதுபோன்ற இளைஞர்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்தால் எதையும் ஆக்கபூர்வமாக நம்மால் எளிதில் சாதிக்க முடியும்.

KILLERGEE Devakottai said...

நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.

ஸ்ரீராம். said...

//சுமார் ஒன்றரை
மதிப்பிலான //

சொல்லாமல் விட்டால் என்ன... கோடியாகத்தான் இருக்கவேண்டும். அவர்களை வாழ்த்துவோம்.

Yaathoramani.blogspot.com said...

முதல் வருகைக்கும் வாழ்த்தி வழங்கிய அற்புதமான விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திருமண வேலைகளுக்கு இடையிலும் உடன் வந்து வாழ்த்தியமைக்கு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்வது மிகச்சரி.எதையும் எதிர்பாராது தக்க சமயத்தில் செய்யும் உதவி நிச்சயம் கோடி பெறும்.உடன் வரவுக்கும் அற்புதமான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

VVR said...

வாமனன் நீறுபூத்த நெருப்பு...... பொருத்தமான சொல்லாட்சி. காலம் எதையும் பொருத்தமான நேரத்தில் வெளிக்கொணரும். வாழ்க நம் இளைஞர் தொண்டு.

Yaathoramani.blogspot.com said...

வரிகளை இரசித்து பின்னூட்டமிட்டது மிக்க மகிழ்வளிக்கிறது.வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவே நம் இளைஞர்களின் சிறப்பு...

வெங்கட் நாகராஜ் said...

நல்லுள்ளங்களுக்கு எனது வாழ்த்துகளும்....

ராஜி said...

நம்ம பசங்கக்கிட்ட நல்லதும் கெட்டதும் சரிசமமா இருக்கு. அவங்களை வழிநடத்தி செல்லும் சரியான தலைமைதான் இல்ல/ அப்படி ஒரு தலைவன் கிடைச்சுட்டா இந்தியா வல்லரசாகிடும்

Unknown said...

உங்களுக்கு பிடித்த வீடியோவை பதிவேற்றம் செய்து பணம் சம்பாரியுங்கள் http://vidsking.in

K. ASOKAN said...

இளைஞர்கள் பணி போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றத்தக்க பணி.

மனோ சாமிநாதன் said...

அருமையான தலைப்பு! அசர வைக்கும் இளைஞர்கள்! நம்பிக்கையில் மிளிர்கிறது இந்தியா! நல்ல மனம் கொண்ட இளைஞர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Post a Comment