Wednesday, October 31, 2018

தலைப்பும் கவிதையும் கவிஞனும்

தயிருக்குள் தயிராகவே
தனைமறைத்த வெண்ணையாய்க்
கவிதைக்குள் புலப்படாது மறைந்திருந்து

கவிஞனின் தேடுதல் நிறைவுற
மெல்லத் தலைக்காட்டும் நற்தலைப்பும்

மொட்டுக்குள் நேர்த்தியாய்
மறைந்திருக்கும் இதழ்களாய்த்
தலைப்புக்குள் சூட்சுமமாய் ஒளிந்திருந்து....

கவிஞனின் சிந்தனை ஒளிபட
மெல்ல விரியும் பூங்கவிதையும்

கண்ணுக்கினிய காட்சியாய்
நிகழ்வாய் உணர்வாய்
அரூபமாய் எங்கெனும் ஒளிர்ந்திருந்ததை

கண்டு உணர்ந்து இரசித்து
கவியாக்கி மகிழும் கவிஞனும்

ஒன்றுக்குள் ஒன்றாயும்
ஒன்றின்றிலிருந்து ஒன்றாயும்
ஒன்றின்றி ஒன்று இல்லையாயினும்..

அவைகளுக்கான இடம் விட்டு நகராதும்
இடைவெளிக் காக்கும் நாசூக்கும் கூட...

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டுமென
வாழ்வின் சூட்சுமம் ஒன்றை
சொல்லாது சொல்லித்தான் போகிறது

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ரசித்தேன் ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ரசித்தேன் ஐயா...

ஸ்ரீராம். said...

ஆசானாகும் அனுபவங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா ..... அருமையான உதாரணங்கள் !

சொல்லாது சொல்லிச்சென்றுள்ள வாழ்வின் சூட்சுமம் புரிந்தும் புரியாமலும்தான் உள்ளது.

இறுதியில் புரிந்ததா புரியாததா என்பது ஒருபுறம் இருக்க,
ஏதோவொன்று புரியத்தான் தொடங்கியுள்ளது
ஒவ்வொரு வரியிலும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

எப்படி இருந்தாலும் தலைப்புகள் முக்கியம் அதைப் பார்த்துதான் பெண்கள் புடவை எடுப்பார்களாம்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

K. ASOKAN said...

நன்று ரசித்தேன்

Post a Comment