Sunday, January 12, 2020

மனித நேயம்...

தனித்திருந்தோர்கள் ஒன்று சேர
நாங்கள்  இப்போது ஒரு குடும்பம் என்றார்கள்

குடும்பங்கள் ஒன்று சேர
நாங்கள் எல்லாம் இப்போது உறவினர்கள் என்றார்கள்

உறவினர்கள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த ஜாதி என்றார்கள்

ஜாதிகள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த மதம் என்றார்கள்

மதங்கள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த நாட்டினர் என்றார்கள்

நாடுகள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் மனிதர்கள் என்றார்கள்

இப்படித் தனித்திருந்ததில் இருந்துத் துவங்கி
இப்படிப் பல நிலைகள் கடந்து
மனிதனாக உணரவும்
இணைந்திருக்கவும் காரணம் எது ? என்றேன்

எல்லோரும் எவ்வித முரணுமின்றி
முணுமுணுப்புமின்றி
ஒருமித்த குரலில்
மனித நேயம் என்றார்கள்

9 comments:

G.M Balasubramaniam said...

மனித நேயம் ஒரு வித்தியசமான பார்வையில்

திண்டுக்கல் தனபாலன் said...

மிகச்சரி...

வெங்கட் நாகராஜ் said...

மனித நேயம் - நல்லதொரு பார்வை.

தொடரட்டும் பதிவுகள்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி..

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி..

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

Post a Comment