Tuesday, January 21, 2020

மரணத்திலும் ஒரு ஆறுதல்...

மரணம்
எவ்வகையிலும் யாராலும்
தவிர்க்க இயலாததே.
.
இது மிகத் தெளிவாய்த் தெரிந்தும்
சிலரின் இழப்புகள்
தாங்க முடியாததாகவே
சங்கடப்படுத்திப் போகிறது

ஆனாலும் கூட...

"ஆறு மாதமாய்
மிகவும் அவதிப்பட்டார்
நல்ல வேளை போய்ச் சேர்ந்தார் "
எனக் கேட்பதை விட...

"போனவாரம் கூடப் பார்த்தேனே
மிக நன்றாகத் தானே இருந்தார்
திடீரென என்ன ஆச்சு "
எனக் கேட்க நேர்ந்த மரணங்கள்
கொஞ்சம் ஆறுதல் படுத்தியே போகிறது..

ஆம்
மரணம் எவ்வகையிலும்
யாராலும் தவிர்க்க முடியாததே...

ஆயினும் இனி எப்போதும்
ஆறுதலான மரணத் தகவலே
எல்லோருக்கும் கிடைக்கட்டும் என
வேண்டிக் கொள்வோமாக..

8 comments:

KILLERGEE Devakottai said...

அழகிய மரணம் எல்லோரும் விரும்புவதே...

மனோ சாமிநாதன் said...

சிலரின் இழப்புகள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் ஆழ்மனதைத்தாக்கி அடிக்கடி வேதனைப்படத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் சொல்வது மாதிரி மரணம் தவிர்க்க இயலாதது. கூடியவரை நல்லதையே நினைத்து நல்லவைகளையே செயல்படுத்துவோம் அதுவரை!

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //
ஆம்..நீங்கள் சொல்வது சரியே

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

கூடியவரை நல்லதையே நினைத்து நல்லவைகளையே செயல்படுத்துவோம் அதுவரை!///
ஆம்..அது ஒன்றுதானே
நமக்குச் சாத்தியமானது..

திண்டுக்கல் தனபாலன் said...

யோசித்து பார்த்தால் சரியே... ம்...

bandhu said...

நொடியில் மரணம்! பெரிய வரம்... த்ரயம்பகம் யஜாமஹே ..

G.M Balasubramaniam said...

மரணத்திலும் ஆறுதாலா விடுதலை அல்லவா

வெங்கட் நாகராஜ் said...

நல்லவைகளை மட்டும் செயல்படுத்துவோம். சிறப்பான சிந்தனை.

மரணம் - நினைத்தபடி நடந்துவிட்டால்... நல்லதே!

Post a Comment