Wednesday, March 25, 2020

கொடியதற்கு எதிராக மிக எளிமையாய்..

*கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு காவல்துறையின்  ஆத்திச்சூடி*

(அ) அடிக்கடி கை கழுவுங்கள்...

(ஆ) ஆபத்தை அறிந்து செயல்படுங்கள்...

(இ) இல்லத்தில் தனித்திருங்கள்...

(ஈ) ஈரப்பதம்  உள்ள இடத்தில்  தள்ளி இருங்கள்...

(உ)  உற்றார் உறவினரை சற்று ஒதுக்கி வையுங்கள்...

(ஊ) ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படாதீர்கள்..

(எ) எங்கேயும் வெளியிடங்களில் தேவையின்றி சுற்றாதீர்கள்...

(ஏ) ஏற்கனவே உலக நாடுகளை அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸ் தொற்று  நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

(ஐ) ஐயமின்றி அனைத்தையும் எதிர் கொள்ளுங்கள்...

(ஒ) ஒதுங்கியிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பிறரிடமிருந்து...

(ஓ) ஓரிடத்தில் இருந்து ஓய்வெடுங்கள்....

(ஔ) ஔவையார் வழிவந்த நம் ஒவ்வொருவருக்கும்  கொரோனா வைரஸ் பற்றிய  விழிப்புணர்வு மிக மிக அவசியம்....

இ(ஃ)து அனைத்தையும் அறிந்து நடத்தலே இனிய வாழ்வுக்கு சிறந்த வழி..

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

புதிய ஆத்திச்சூடி - சிறப்பு.

இந்தப் பேரிடரை ஒற்றுமையோடு எதிர்கொள்வோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கொரோனா ஆத்திச்சூடி நன்றாக உள்ளது. அனைவரும் இதனை பின்பற்றி நலமுடன் வாழ்வோம். அனைவரும் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

G.M Balasubramaniam said...

விழிப்புணர்வு சொல்லிச் சென்ற விதம் அருமை

Kasthuri Rengan said...

கொரனா சூடி அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

நல்லாயிருக்கு.  மதுரை நிலை என்ன ரமணி ஸார்?

Yaathoramani.blogspot.com said...

நான் தற்சமயம் பெங்களூரில்..இங்கு எம் பகுதியில் இதுவரை பாதிப்பேதும் இல்லை..இருப்பினும் பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது வாசல்தாண்டி...

Post a Comment