Sunday, March 8, 2020

காலச் சூழல்...

காலச் சூழல்
தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை


9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...
ஆனாலும்
அனுபவித்தே தீர வேண்டும்...

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் - கல்லிலிருந்து அரிசி பொறுக்குதல்... நல்ல உதாரணம். இங்கே பலவும் இப்படித்தான் இருக்கிறது.

G.M Balasubramaniam said...

கவிதைக்கு பொய் அழகு என்பதுபோல் மிகைப்படுத்தல் பதிவில் தெரிகிறதே

Yaathoramani.blogspot.com said...

அழுத்தம் கொடுக்க மிகைப்படுத்தல் அவசிய்ம்தான் இல்லையா

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவும் கடந்துபோகும் என்று நம்புவோம்

சிகரம் பாரதி said...

வலைத் திரட்டி உலகில் புதிய புரட்சி, வந்தது : வலை ஓலை எனும் புதிய செய்தி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது காலச் சூழல்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

சிகரம் பாரதி said...

//காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை//
ஆம்...

ஸ்ரீராம். said...

இப்படிப்பட்ட நிலையில் நேவையானதைச் சேகரம் செய்ய எவ்வளவு களை ஒதுக்க வேண்டுமோ...!

Jayakumar Chandrasekaran said...

//காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை//
சாவிகொடுக்காமல் நின்ற கடிகாரம் போல்? 

Post a Comment