Thursday, July 16, 2020

அபுரியும் புரியும்...

விலகி ஒதுங்கிச் செல்லமுடியாதபடி
அந்த அபுரிக் கவிஞரை
இப்படிச் சந்திக்க நேரும் என
நான் நினைக்கவே இல்லை.

அவரும் நான் தப்பித்துவிடாதபடி
என் கைகளைப் பிடித்தபடி..

"இன்னமும் அப்படித்தான்
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் போலவே "
என்றார் சிரித்தபடி..

"அப்படியென்றால் எப்படி "
என்றேன் அப்பாவியாய்...

"புரிகிறமாதிரி
ரொம்பப் புரிகிறமாதிரி..."
என்றார்

"என்ன செய்வது
அவ்வையின் ஆத்திச்சூடியே
ஆரம்பமாயும்
அழவள்ளியப்பாவே
தொடர்ச்சியாகவும்
அம்புலிமாமாவே
பிடித்ததாகவும்
ஆனதாலோ என்னவோ
இப்படித்தான் எழுத வருகிறது "
என்றேன் அப்பாவியாய்.

"அது சரி.அதற்காக இப்படியா
கோவணம் கூட இல்லாமல்
அம்மணயாய் விட்டமாதிரி.."என்றார்
சரி கிண்டலடிக்கிறார் எனப் புரிந்தது

நான் மௌனமாய் இருந்தேன்..

என்னை மீண்டும் சீண்டும் விதமாய்
"இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்  ?"
என்றார்

நியூட்டனின் மூன்றாம் விதியை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது
சரி செய்து வெளியிடவேண்டும் " என்றேன்

"எங்களைப் போன்றவர்களுக்கே
அதை  எழுதுவது கஷ்டம்
உம்மைப்  போன்றவர்களுக்கு
சொல்லவேண்டியதே இல்லை..
சரி..அதிலென்ன குழப்பம் " என்றார்

"மூன்றாம் வகுப்பு படிப்பவனுக்கும்
தெளிவாகப் புரிகிறமாதிரி
ரொம்ப எளிமையாய் அமைந்து விட்டது
அப்படியே வெளியிட்டால்
அது எப்படி சரியாக வரும் எனத்தான்
ஒரே குழப்பமாய் இருக்கிறது " என்றேன்

அபுரி என்ன நினைத்தாரோ
முகத்தை அழுந்தத் துடைத்தபடி
"கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது
அப்புறம் சந்திப்போம்"
எனச் சொல்லியபடி நடையை கட்டினார்.

வெகுநாள் பாரம் ஒன்றை
இறக்கிவைத்த திருப்தியில்
நானும் நடக்கத் துவங்கினேன்

8 comments:

ஸ்ரீராம். said...

ஏதாவது குறியீடா? யாரைக் குறிக்கிறது என்று அபுரி.

Yaathoramani.blogspot.com said...

புரியக் கூடாது என்பதற்காகவே எழுதுகிறவர்..(உபயம் சுஜாதா..)

திண்டுக்கல் தனபாலன் said...

அவசர வேலையாய் ஓட்டத்திலே புரிந்து விட்டது... இனி உங்களிடம் வர மாட்டார்...

Jayakumar Chandrasekaran said...

மூன்றாம் விதி சரியாகத்தான் இருக்கிறது. அடுத்து வந்தால் விலகிச் செல்ல நேரிடும். (அபுரி வந்து சென்றது)

Jayakumar

Seeni said...

சிறப்பு..

G.M Balasubramaniam said...

நான் யரையவதுகுறிக்க விரும்பினால் டைரெக்ட் தான்

கரந்தை ஜெயக்குமார் said...

மூன்றாம் விதி சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது

Karthick said...

Supper article
See also ours website
https://www.biofact.in

Post a Comment