Monday, November 8, 2021

சிங்காரச் சென்னையும் ஐப்பசித் துயரும்..

.


மன்னனின் அலட்சியத்தால்

கணவனை இழந்த கண்ணகி

தலைவிரி கோலமாய்

அடக்கவொணோ ஆக்கிரோசமாய்

மதுரை வீதி அலைந்த நிலையாய்..


மக்களின் அலட்சியத்தால்

தான் நடந்த வழிகளையும்

தங்கி வாழ்ந்த குளம் குட்டைகளையும்

இழந்த மழைநீர்

சென்னை வீதிகளில்

வெறிபிடித்து அலைகிறது...


ஒவ்வொரு ஆண்டும்

முறையாய் அதனை 

ஆற்றுப்படுத்த முயலாது

தலைமுடிபிடித்து தள்ளுதல் போல்

அலட்சியமாய் கடத்த முயல்வதால்


தொலைந்த குழந்தையைத் தேடி

பித்துப்பிடித்தலையும் தாயாய்

மீண்டும் மீண்டும் அது 

கூடுதல் பலம் சேர்த்து வருகிறது

மிக மிக ஆக்ரோஷமாய்....


அதற்கான முறையான வழிகாட்டாது

இருந்து போக இடம் கொடாது

சாமர்த்தியமாய் திரிகிற வரை

சிங்காரச் சென்னைக்கான

இந்த ஐப்பசித் துயரத்திற்கு

விடியல் என்பது கிடையாது


குற்றமுணர்ந்து நீதி வழங்கிய

பாண்டிய மன்னனாய்

நாமும் தவறை உணர்ந்து

திருந்தாத வரையில்

சென்னைக்கான இந்த ஐப்பசிச் சாபத்திற்கு

விமோசனம் என்பதே கிடையாது

5 comments:

ஸ்ரீராம். said...

இது சென்னை மட்டுமல்ல, எல்லா ஊர்களுக்கும் பொருந்தும்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

வல்லிசிம்ஹன் said...

அருமையான கவிதை வரிகள்.
சின்னக் குழந்தையைத் தேடி அலையும் தாய்!!
அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

காரணம் அவா...

Thulasidharan V Thillaiakathu said...

சென்னை மட்டுமல்ல. கேரளம், கன்னியாகுமாரி, மும்பை மற்றும் எல்லா ஊர்களுக்கும் இதுதான்.

கீதா

Post a Comment