Saturday, December 25, 2021

மென்மேலும் உயர்வோம்..

 செய்யக் கூடாதை செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

2500 வருடமாக பற்பல புரட்டுகள் உள்ளதே...!

ஏன்...?

படித்தவர்கள் இவ்வாறு செய்யலாமா...?

ஆமாம் அந்தக் காலத்தில் யார் யார் படிக்க முடிந்தது...?

சிந்திக்கலாமே...!?

Jayakumar Chandrasekaran said...

செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை


இயக்கமும் அவனே இயக்குபவனும் அவனே.

இருளையும் ஒளியையும் வைத்தவனும் அவனே

அவனின்றி ஓர் அணுவும் அசையாது. 


உலகம் பாழ்படுதல், தொலைந்த முன்னேற்றம், சமூகக்கெடுதல் என்பவையும் அவன் விளையாட்டுகளே. 

ஆனாலும் விதியை மதியால் வெல்லலாம் என்பது போன்று கடமை உள்ளவர்கள் சிறிதேனும் முயற்சி செய்திருக்கலாம், கொஞ்சம் விதியை மாற்றி அமைக்க. 

மாற்றுக்கருத்து சொன்னதற்கு மன்னிப்பு கோருகிறேன். 

Jayakumar

Post a Comment