Wednesday, December 8, 2021

நரகமாகும் நாமிருக்கும் சொர்க்கம்

 ஆடைகளை

பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

4 comments:

ஸ்ரீராம். said...

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..."

திண்டுக்கல் தனபாலன் said...

மத வெறியும் ஒரு காரணம்...

Thulasidharan V Thillaiakathu said...

நாம் வாழ்ந்திட இறைவன்/இயற்கை கொடுத்த இந்த அழகான நல்ல உலகை நம் செயல்களால், ஆணவத்தால் பாழ் செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மனிதர்கள் நாம் நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கிறோம்.

துளசிதரன்

Post a Comment