Friday, February 18, 2022

வெறுங்கை முழம்



வித்தியாசமாக

சுவாரஸ்யமாக

பயனுள்ளதாக

எதைச் சொல்லலாமென....

எப்படித்தான்  முயன்றபோதும்

எத்தனை நாள்  முயன்றபோதும்

ஏதும் பிடிபடாதே போகிறது


ஆயினும்

கவர்ந்ததை

ரசித்ததை

உணர்ந்ததை

சொல்லத் துவங்குகையிலேயே

வித்தியாசமும்

சுவாரஸ்யமும்

பயனும்

இயல்பாகவே

தன்னை இணைத்துக் கொண்டு

படைப்புக்குப்

பெருமை சேர்த்துப் போகின்றன


எத்தகைய

ஜாம்பவனாகினும்

வில்லாதி வில்லனாகினும்

இல்லாததிலிருந்து

ஏதும் படைக்க   இயலாதென்பது...


விஞ்ஞானத்திற்கான

அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல.          அது

படைப்பிலக்கியத்தற்கான

அடிப்படை ஞானம் என்பதும்

மறுக்க முடியாததுதானே  ?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... மெய் ஞானம் வேறு தான்...

Jayakumar Chandrasekaran said...

இல்லாத ஒன்று என்று 
எதுவுமே இல்லை. 
வெற்றிடம் என்றாலும் அங்கு  
"வெற்றிடம்" உள்ளது
பருப்பொருளை நம்பியே 
பாடல்கள் என்பது இல்லை.
இறைவன் எங்கும் இருக்கிறான். 
அவன் நம் உள்ளத்திலும் உள்ளான் 
அவனை போற்றி பாடிடலாம். 

Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான். அப்படிப் பார்க்கும் போது இல்லாதது என்று எதுவும் இல்லை அல்லவா!

கடைசி வரிகள் அருமை. ஆம் அது படைப்பிலக்கியத்திற்கும் வழி வகுக்கிறதுதான்.

துளசிதரன்

Post a Comment