Wednesday, February 9, 2022

நீட் குறித்து ஒரு நீட்டான பதிவு..

 நீட் தேர்வுக்கு முன்னால் முன்புபோல் 50% மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை தகுதியே இல்லாத ஜஸ்ட் பாஸ் செய்த மாணவர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவ இடங்களை பெற்றனர் ...கல்லூரிக்கு 150 இடங்கள் என்றால் 50% என்பது 75 இடங்கள் ஆகும் ..அதாவது ஒவ்வொரு கல்லூரியும் 75 * இரண்டு கோடி 150 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டு இருந்தார்கள் அதன் மூலமாகத்தான் அரசியல்வாதிகளுக்கும் காசு கொடுத்து இருந்தார்கள் ...

ஆனால் இப்போது அப்படி அல்ல நீட் தேர்வு மூலமாக இடங்களை நிரப்புவதால்  தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே மருத்துவ இடங்களை பெற முடியும் ...

நமது மருத்துவக் கல்லூரி ஓனராக இருந்தால் கூட நீட் தேர்வில் ரங்கிங் பெற்றால் தான் இடம் கிடைக்கும் ...


அடுத்து அரசுப்பள்ளி தனியார் பள்ளி மாணவர்களை பற்றியது ..


தனியார் பள்ளி மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் ..

ஆனால் அரசுப் பள்ளியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்திருப்பதால் இப்பொழுது 250 மார்க் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பை பெற்றுள்ளார்கள்.

2006 முதல் 2016 வரை பத்து வருடங்களில் மொத்தமே 39 அரசுப் பள்ளி மாணவர்கள் தான் மருத்துவப்படிப்பு இடம் பிடித்தனர் ..

சென்ற வருடம் 340 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பு தேர்வாகினர் இந்த முறை 11 மருத்துவக் கல்லூரிகள் 

திறக்கப்பட்டதால் 544 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு தேர்வாகியுள்ளனர் ..

இப்பொழுது சொல்லுங்கள் நீட் தேர்வின் மூலமாக தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் எத்தனை கோடி வைத்து இருந்தாலும் இடம் கிடைக்காது  ..

அரசு பள்ளி மாணவர்களும் அதிக அளவில் மருத்துவ படிப்பில் இடம் பிடிக்கும் ..


ஒரே அடியாக தனியார் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னால் யாரும் மூட மாட்டார்கள் போராட்டம் தான் நடக்கும் ...

ஆனால் இப்பொழுது அரசுப் பள்ளியில் படித்தால் 250 மார்க் வாங்கினாலே மருத்துவப் படிப்பு இடம் கிடைக்கும் என்பதால் ஆட்டோமேட்டிக்காக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வருவார்கள் ..

இன்னும் 10 வருடங்களில் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக மூடப்படும் அரசுப் பள்ளிகள் தரம் நன்றாக உயரும் என்பது எனது கருத்து.


இதுவரை எந்த அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி மாணவர்கள் எவரும் பெரிய அளவில் நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் செய்ததாக இதுவரை இல்லை ..

அரசியல்வாதிகள்தான் மருத்துவக்கல்லூரி அவர்களிடமிருந்து  கமிஷன் மற்றும் தேர்தல் நிதி  கிடைக்காது என்பதால் இந்த மாதிரி நீட் எதிர்ப்பு போராட்டம் செய்கிறார்கள்..  


தரமான மருத்துவர்கள் கிடைக்க கண்டிப்பாக நீட் தேர்வு வேண்டும் 


அற்புத நயினார் ..

5 comments:

நெல்லைத்தமிழன் said...

இந்த ஆராய்ச்சி ஒருபுறம். நீங்க யார் யார் மருத்துவக் கல்லூரிகள் வச்சிருக்காங்க என்ற லிஸ்ட் எடுங்க. புதிய தலைமுறை, துரைமுருகன், டி ஆர் பாலு, எ வ வேலு, அன்புமணி வகையறா என்று பெரிய லிஸ்ட் பார்த்தேன்.

மக்கள் எடப்பாடியன் 7.5 சதவிகித்த்தை ஆதரிக்கலை. தொலைக்காட்சி பத்திரிகைகள் ஜால்ராக் கூட்டமாக ஆகிவிட்டன. பேசாம 7.5 சத்த்தை 15 சதமா ஆக்கினா இன்னும் உபயோகம். ஆனால் அரசியல்வாதிகள் பணம் பண்ணுவதற்கு இடைஞ்சலா இருக்கு.

நேற்று முதல்வர் சொன்னது சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அவர் லாஜிக்படி, முறைகேடுகள் சில நடப்பதால் அரசுப்பணி தேர்வையும் நிறுத்தி ப்ளஸ் டூ மதிப்பெண்கள்படி நடத்தணும். சில நோயாளிகள் இறப்பதால் டாஸ்மாக், மருத்துவமனைகளை மூடணும். சில தனியார் பள்ளிகளில் தவறு நடப்பதால் தனியார் பள்ளிகளை மூடணும். ஆனால் ஜால்ரா கோஷ்டிகளுக்கு இது புரியாது

ஸ்ரீராம். said...

அரசியல்..  இவர்கள் செய்வது வேற்று அரசியல்.  நவோதயா பள்ளிகள் பற்றியும் சொல்லி இருக்கலாம்.

ஸ்ரீராம். said...

திருத்தம் :

அரசியல்..  இவர்கள் செய்வது வெற்று அரசியல்.  நவோதயா பள்ளிகள் பற்றியும் சொல்லி இருக்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் சீரழிக்கும் எதையும் செய்யும்...

CSCCA said...

Lost Ark was available in the West on February 11. Whoever wants to buy Lost Ark Gold for their server, you can visit IGGM to get whatever you want. Best wishes to you.

Post a Comment