Tuesday, December 13, 2022

பட்டா மாறுதல் மகாத்மியம்..

 


பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவது பிடிபடுவது அன்றாடச் செய்தியாக வந்தும் (நிச்சயம் இதுபோல் தைரியமாக புகார் தருவது மாட்டுவது எல்லாம் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருக்கும் என்றாலும்) அரசு இது குறித்து ஏன் கவனம் செலுத்தாது இதைத் தொடரச் செய்கிறது...இதனால் அரசு அதிகாரிகளுத்தான் லாபம்...அரசுக்கு கெட்ட பெயர் எனத் தெரிந்தும் ஏன் இதைத் தடுக்க ஆவன செய்யக் கூடாது...குறைந்த பட்சம் முதல் முயற்சியாக பட்டா மாறுதலுக்கு நான் யாருக்கும் லஞ்சம் தரவில்லை என்கிற சான்றிதழை பட்டா மாறுதல் கோருபவரிடம் பெற்று இணைக்க வேண்டும் எனத் துவக்கினால் என்ன...லஞ்சம் கேட்கிறவர் கொஞ்சம் சங்கடப்படவாவது வாய்ப்பிருக்குமே..இது குறித்து தொடர்பவர்கள் தங்கள் கருத்தைப்  பதிவு செய்யலாமே..அதைப்போல லஞ்சம் கேட்கிற பெருமக்களுக்களும் தங்கள் நியாயத்தை அநாமதேயமாகக் கூடப் பதிவு செய்யலாமே...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் தராமல் நல்லது நடந்தால் சரி...

நெல்லைத் தமிழன் said...

பட்டாவிற்கு ஐந்து லட்சம் லஞ்சம், குறைந்தபட்சம் 25000 லஞ்சம். 2000ம்லாம் நம்பும்படி இல்லை. Link இல்லைனு ஆச்சுன்னா (அதுவும் அவங்க பிரச்சனை) 3-5 லட்சம் லஞ்சம் உறுதி. நில அளவைனு ஒரு கூத்து. இவங்களுக்கு மத்திய அரசுதான் லாடம் கட்டணும்

Post a Comment