மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்
கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்
மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்
தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாப் போகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்
இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்
2 comments:
கவிதை நன்று. இயற்கையுடன் இணைந்து விட்டால் எல்லாம் சுகமே.
இனிமை...
Post a Comment