தொடர்ந்து மூன்று பதிவர் சந்திப்பிலும்
கலந்து கொண்டவன் என்கிற முறையிலும்
சமூக இயக்கங்களில் தொடர்ந்து பொறுப்பு
வகித்து வருபவன் என்கிற முறையிலும்
மனம் திறந்து வெளிப்படையாக சில விஷயங்களைப்
பகிர்தல் நம் பதிவர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற
உதவும் என நினைத்து இதை எழுதுகிறேன்
உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும் கூட
மேடை அமைப்பு, விளம்பரம் , ஒலிபெருக்கி அமைப்பு
என செலவுக்கு அதிகப் பணம் வேண்டும் என்கிற
இன்றையச் சூழலில் ஒரு பதிவர் சந்திப்புக்கு
நிச்சயம் அதிகம் செலவாகும் என்பது
நாம் அனைவரும் அறிந்ததே
என்னுடைய அனுமானத்தில் சென்னை மதுரையை விட
புதுகை ,மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதாலும்
ஆரம்பம் முதலே மிக முறையாகவும் தெளிவாகவும்
அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்தும் ஐயா
முத்து நிலவன் அவர்கள் தலைமையில் புதுவைப்
பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதால்
இந்தப் பதிவர் சந்திப்புக்கு அதிக எண்ணிக்கையில்
பதிவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்
என நினைக்கிறேன்
அந்த வகையில் குறைந்த பட்சம் 200 பதிவர்களாவது
கலந்து கொள்வார்கள் என மதிப்பிடுகிறேன்
அந்த பதிவர்களுக்கு நல்ல முறையில் காலைச் சிற்றுண்டி
மதிய உணவு இடையில் இரு ஹை டீ என மட்டும் ஏற்பாடு
செய்தாலே 70 ஆயிரம் வரை உத்தேசமாக ஆகிவிடும்
(100+ 25+ 25 +200 =350 )
இது நீங்கlலாக மேடை , அடையாள அட்டை
பதிவர்கள் கைடுஎன இன்ன பிற விஷயங்களுக்கு
குறைந்த பட்சம் 75 ஆயிரம் ஆகிவிடும் .
என்வே குறைந்த பட்சம் 2 இலட்சம்
இலக்காக வைத்து நிதி திரட்டினால் ஒழிய
பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்கச்
சாத்தியமில்லை என்பது எண்ணம்
இந்த வகையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயை
புரவலர்களிடம் இருந்தும்
நன்கொடையாளர்களிடம் இருந்தும்
பதிவுக் கட்டணமாகவும் பிரித்துப் பெற்றால் தான்
போதிய நிதி இலக்கைத் தொட முடியும் என்பது
என் கருத்து
பதிவர்களில் புரவலர்களெனத் தரத்தக்கவர்களிடம்
இருந்து 5000/
நன் கொடைத் தர மனமுள்ளவர்களிடம் இருந்து
2000 /1000 எனவும்
மற்றவர்களிடம் இருந்து
கட்டணமாக 500 உம் பெற முயற்சிக்கலாம் என்பது
என் எண்ணம்
500 கட்டணம் கட்டாயமில்லை கொடுத்தால்
ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கலாம்
( நாம் நிச்சயம் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ரூபாய் 500 அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் )
இது எனது அபிப்பிராயம் அவ்வளவே
இது சரியாயிருக்கும் என பெருவாரியோர்
முடிவெடுக்கும் பட்சத்தில் நானும் என்னை
ஒரு புரவலாக இணைந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்
என இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவரின் கருத்தை எதிர்பார்த்து ---