ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் தொழிலாளி வர்க்க எதேச்சதிகாரத்தை நிறுவ முயல்வதற்காகவே எப்போதும் பலமான கட்சியினை எதிர்ப்பதும் (தாம் வளர முயற்சிக்காது அப்போது காங்கிரஸ் இப்போது பாரதீய ஜனதா) நாட்டின் மீது உண்மையான அக்கறை கொள்ளாது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்ப்பதற்காகவே உழைக்கும் வர்க்கத்திடம் ஒரு பதட்டமான மனநிலையை உருவாக்கி அதன் மூலம் தொழிற்சங்கத்தை வளர்த்தெடுப்பதும் (பொது ஜன இயக்கமாக கட்சியை வளர்த்து போராட இயலாத காரணத்தால் தொழிற்சங்கங்கள் மூலம் அரசைப் பயமுறுத்த முயல்வதும் குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய காலங்களில்) முற்போக்கு என தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொள்கிற அரசியல் கட்சிகளின் அரசியல் தந்திரம்..இவர்கள் தந்திரம் புரிந்ததனால்தான் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் இருக்கிற ஊழியர்களின் வாக்குகள் கூட இவர்களுக்குப் பதிவாவதில்லை.(.ஆம் அப்போது டாடா பிர்லா இப்போது அம்பானி வகையறா..அப்போது காங்கிரஸ் இப்போது பா..ஜ.க..அவ்வளவே..கூட்டணிக்கான பேச்சு வார்த்தை என்பது கூட திரைமறைவில் கோடிகள் பெறும் வித்தையே)இதனைப் புரியாத சில நேர்மையானவர்கள்/நியாயமானவர்கள் தியாகம் என்கிற பெயரில் பலிகடா ஆவதே உச்சபட்ச அவலம்..
Thursday, December 16, 2021
Tuesday, December 14, 2021
அந்த ஏழு நாட்கள்..
*365 Days✈️With HFN St🌍ry*
♥️ Story-75 ♥️
_*Before reading... Gently close your eyes... Feel grateful for the Ocean of love that resides in your heart... Now continue reading...*_
*Last seven days of life*
Once upon a time, there was an _ashram_ , where a saint was giving a discourse to his disciples. Just then, a stranger entered the ashram and started abusing the saint. The saint looked at the man but did not say anything in reply and just remained silent. After a while, the man left.
One of the disciples present there got angry on hearing such words about his guru. He wondered why his guru didn't respond to that man and kept listening.
After the discourse was over, the disciple approached his guru and asked, "Guruji, why did you stay quiet when that man was abusing you brutally and cursing you? Please tell me, how were you able to stay so calm and smiling in such a situation? Didn't it anger you even a bit? Nor did your facial expression change. What's your secret?"
The saint smiled and replied, "I will certainly tell you this secret, but first, I have something important to tell you."
The disciple was surprised. He asked, "What is it, Guruji? Please tell me."
The saint replied, "You are going to die after a week. The end of your life is near."
The disciple was stunned to hear this. It was as if the ground had slipped away from under his feet... He would never have believed it if someone else had said it, but this was his Master, in whom he had complete faith and reverence. Therefore, he believed it to be true, that he only had seven days left to live.
The disciple was very depressed. He could not think straight in his state of despair. But then he took a moment and became stable, and contemplated with a calm mind. He then resolved to live those last seven days of his life to the fullest and so, he left the ashram with the blessings of his Guru.
On his way, the disciple got engrossed in his thoughts as to how to make the most of those last seven days of his life!
After a lot of contemplation, he finally made up his mind to spend the remaining seven days following his Guruji's teachings and living with humility, love, and devotion to God.
And from that very moment his temperament changed drastically!
Now, he met everyone with utmost love in his heart and wouldn't get angry at anyone for anything! He would spend most of his time meditating and remembering God.
He repented for his sins, asked for forgiveness from all those people with whom there was a rift or whom he had hurt, knowingly or unknowingly. After wrapping up his routine, he would get absorbed in the remembrance of God. This went on for six days. On the seventh day, the disciple felt an urge to see and meet his Guru before meeting his end.
He met his Guru and touched his feet with a feeling of satisfaction on his face and said, "Guru ji, my end is nearing, and I want to spend my last moments with you... Please give me your blessings for one last time."
The saint said, "My blessings are always with you. May you live a long and healthy life."
The disciple was utterly perplexed to hear such a blessing from his Guru's mouth, especially after what he had heard from him seven days ago.
After blessing his disciple, the guru asked, *"So, tell me, what were the last seven days like? Were you as angry with people as before?"*
With folded hands, the disciple replied, *"No, not at all, guru ji. I only had seven days to live. How could I waste them with such useless behaviour? Instead, I spent my time greeting people with all the love in my heart and even apologized to those whom I had ever hurt."*
At this, the guru smiled and said, "See, now you know my secret, and you've experienced it too. When I'm aware of the fact that I can die at any moment, why would I waste my precious time harboring ill-will towards anyone? Instead, I try to make the most of my time by opening my heart to all.
Life is too short to waste on regrets, grudges, fights, and arguments. Life is all about forgiving and moving on. The real purpose of life is happiness. When one truly understands the intensity of this secret of life, one remains calm in any situation. This is what wisdom is all about. Live every moment of your life as if it is your last."
The disciple immediately understood what this whole plot was about and learnt a profound secret to a peaceful and loving life that day!
♾️
*"Only remove the hatred and universal love is there."*
*Babuji Maharaj*
Heartfulness
Received in whatsapp
Monday, December 13, 2021
பிரதமரின் ராத்திரி ரவுண்ட் அப்..
மோடியின் #ராத்திரி ரவுண்ட் அப்
நேற்று #காசி விஸ்வநாதர் கோயில் வளா கத்தை திறந்து வைத்த பிறகு் மோடி #டெல்லி செல்ல வில்லை. நேற்று இரவு பிஜேபி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் வைத்து #நிர்வாக ரீதியாக ஒரு 6 மணி நேரத்தி ற்கு மீட்டிங் நடத்தினார்
அதற்கு பிறகு நள்ளிரவில் #யோகியுடன் காசி ரயில்வே நிலையம் சென்று சுத்த மாக இருக்கிறதா? என்று பார்வையிட்டு #ரயில்கள் சரியான நேரத்திற்கு வருகிறதா? என்று பயணிகளிடம் விசாரித்து விட்டு ரயில்வே #டிஜிட்டல் கிளாக் அருகேநின்று 70 வயதான நானே நள்ளிரவு 1•13 மணிக்கு #தூங்காமல் இருக்கிறேன்
ஆனால் நீங்கள் தூங்குகிறீர்கள் என்று ரயல்வே #ஊழியர்களை தூங்க விடாமல் செய்து இருக்கிறார்
.
ஒரு பிரதமர் அதிலும் அதிக #எதிரிகள் உடையவர் நள்ளிவில் ஒரு ரயில்வே ஸ்டேசனில் வந்து நிற்கிறார் என்றால் அவருக்கு அவருடைய ஆட்சி மீது எவ்வளவு #நம்பிக்கை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இனி மேல் தூங்கி எழுந்து நாளை மீண்டு ம் காசியில் உள்ள #மகாமந்திர் சத்குரு சதாபல்தியோ விஹான்கம் யோக சன்ஸ்தானின் 98 வது ஆண்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார் பிரதமர்.
எல்லோராலும் 70 வயதிலும் #உழைக்க முடியும் அந்த உழைப்பு என்பது அவர்களின் நடமாட்டமாகவே இருக்கும். ஆனால்மோடியின் உழைப்பு இந்த #தேசத்தின் நடமாட்டத்தை தொடக்க வைக்கும் உழைப்பாகும்.
Wednesday, December 8, 2021
ஊழலும் நம் நாடும்
இன்று டிசம்பர் 9
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்.
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊழலை தடுப்பதோடு அதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்துகிறது.
இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது.
ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்ணைப் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் அர்த்தம்.
இந்தியாவைப் பொறுத்தவரை 2016ல் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79வது இடத்திலும்,
2017ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்த போதிலும், 81வது இடத்தையும் பிடித்தது.
2018ல் 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் அரசு சார்ந்த வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார்.
லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் நேர்மையாக இருக்க விரும்பும் நபர் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளும், மனவேதனையும் அதிகமாக உள்ளது.
அந்த நபரைக் காட்டிலும் அவரது குடும்பத்தினரின் நிலை மிகவும் பரிதாபமானதாகவே உள்ளது.
அரசு சேவைகளை காலதாமதமின்றி விரைவாக பெறுவதற்கு லஞ்சம் அல்லது அன்பளிப்பு கொடுப்பது பெரிய தவறில்லை என்கிற மனநிலைக்கு பொதுமக்கள் மாறிவிட்டனர்.
இந்த மனநிலை தங்கள் கடமையை செய்வதற்கு லஞ்சம் பெறுவதை பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சமும், ஊழலும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.
எனவே லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமுதாயத்திடம் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் உள்ளது.
சிறுவயது முதலே நேர்மையாக இருக்க கற்றுக் கொடுத்தால் இனிவரும் சமுதாயமாவது ஊழலற்றதாக இருக்கும்.
நரகமாகும் நாமிருக்கும் சொர்க்கம்
ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்கநொந்து நூலாகிப்போகிறது உடல்
உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்
செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு
தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை
தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு
காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு
வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்
நியாயத்தை
பதவியும் செல்வாக்கும் தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்
மொத்தத்தில்
தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க
கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச் சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....
சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு
Tuesday, December 7, 2021
அன்று ஒரு நாள் ஆனந்தத் திருநாள்..
Sunday, December 5, 2021
இம்முறையும் எப்போதும் போலவே..
இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்எப்போதும் போலவே
இயற்கைக்கு எதிராக
எங்கள் வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள் செய்தக் கொடுமைகளை
அது தானாகத் தன்னைச்
சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல
அது எங்களுக்குப் பேரிடராய்
பெரும் அழிவாய்
எம் அன்றாட வாழ்வைப் பாதிக்க
இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத் தெளிவாய்ப் புரியக்
காடுகளை அழிப்பதில்லை
கண்மாய் குளங்களை ஆக்கிரமிப்பதில்லை மண்வளமகெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என
இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே
ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட
இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க
இனி குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக் குடிகாரனைப்போலவே
இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே
செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்
எண்ணத்தால் இமயம் அசைப்பதில் வெற்றுச் சொல்லால் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்
இம்முறையும் .....






