Friday, February 17, 2023

இவர் எதனால் இன்னும் ..வாழ்ந்து கொண்டிருக்கிறா..

 எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.


ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.


சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!


ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.


‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!


- தி இந்து .

Wednesday, February 15, 2023

இடைத்தேர்தலும் மக்கள் மனோபாவமும்..

 


முன்பு

பதவிக் காலம் முடியும் முன்

மக்கள் பிரதிநிதிகள் இறந்தால்

அவர்கள் குடும்பத்தாரைப் போலவே

மனம் கலங்கிய காலம் ஒன்று இருந்தது


அவர்கள் குடும்ப வாரீசுகள்

எவரேனும் போட்டியிட்டால்

அனுதாப ஓட்டுக்களால் மிக எளிதாக

வெல்லும் காலம் என்றும் இருந்தது


இன்று

எப்படியும் வென்றாக வேண்டும்

என்கிற முனைப்பில் வெறியில்

ஆளும் கட்சிகள் அள்ளி இறைக்கும்

பணத்தைப் பார்க்கையில்....


எப்படியும் தோற்க வைக்க வேண்டுக்

என்கிற நோக்கில் அதற்கு இணையாக

எதிர்கட்சிகள் செய்யும்

அட்டகாசங்களைக் கவனிக்கையில்...


மெல்ல மெல்ல

பிறதொகுதி மக்களின் மனோபாவமும்

மாற்றம் கொள்ளத் துவங்குகிறது

நலமாக இருக்கும் தங்கள் பிரதிநிதியை

கொஞ்சம் ஆற்றாமையோடு பார்க்கிறது


இருக்கையில்

தொகுதிக்கு ஏதும் செய்ய இயலாவிட்டாலும்

இதுபோல் இடையில் போயாவது

தொகுதி மக்களுக்கு நனமை செய்ய மாட்டாரா என

ஏக்கப் பெருமுச்சு விடுகிறது


எனவே......

பெருமூச்சு மெல்ல மெல்ல

ஆசையாக மாறாதிருக்கவாவது

வேண்டுதலாக ஆகாதிருக்கவாவது.....                                                                                                           அதன் தொடர்ச்சியாய்                                                                                                                                         இனி இடைத்தேர்தலே இல்லை என்று                                                                                                           ஆகித் தொலைப்பதற்காகவாவது...                                                                                                               அடக்கி வாசிக்கப் பயில்வோமா.....                                                                                                                 இடைத்தேர்தலை போர்க்களமாகக் கருதாது                                                                                               போட்டித் தேர்வாகக் கொள்வோமா...


Monday, February 13, 2023

இனியேனும் அளவுகோலை மாற்றாதிருப்போம்

 முன்பெல்லாம்

குடிகாரன் தீயவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் குடிப்பதால்

குடித்து கலாட்டா செய்பவன் மட்டுமே

தீயவனாகத் தெரிகிறான்


குடித்தும் அமைதியாக இருப்பவன்

நல்லவனாகத் தெரிகிறான்


எனவே இந்த நல்லவன் பட்டியலில்

குடிக்காதவனுக்கு இடமே இல்லை


முன்பெல்லாம்

கையூட்டுப் பெறுபவன் 

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் கையூட்டுப் பெறுவதால்

கையூட்டுப் பெற்றும் காரியம் முடிக்காதவனே

மோசமானவனாகத் தெரிகிறான்


கையூட்டுப் பெற்று காரியம் முடிப்பவன்

சிறந்த நிர்வாகி ஆகிப் போகிறான்


இந்தச் சிறந்தவன் பட்டியலில்

கையூட்டுப்பெறாதவனுக்கு வாய்ப்பே இல்லை


முன்பெல்லாம்

அரசியலில் ஊழல் செய்பவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருமே

ஊழல் வாதிகளாக இருப்பதால்

பிடிபடுபவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிகிறான்


பிடிபடாது ஊழல் செய்பவன்

அரசியல் சாணக்கியன் ஆகிப் போகிறான்


இந்த சாணக்கியன் பட்டியலில்

ஊழலற்ற அரசியவாதிக்கு சம்பந்தமே இல்லை


அளவுகோலை நிலையானதாக வைத்து

பொருட்களை எடைபோட்ட காலம் மாறி


பொருளுக்கு ஏற்றார்ப்போல

அளவுகோலை மாற்றும் நம் மனோபாவம்

தொடர்கிறவரையில்.......


இனி வரும்காலங்களில்

குடிக்காதவன் தீயவனாகிப் போகவும்

கையூட்டுப் பெறாதவன் மோசமானவனாகிப் போகவும்

ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு

இலாயக்கற்றுப் போகவுமே

அதிகச் சாத்தியம் ....


எனவே இனியேனும்

அளவுகோலை நிலையானதாகக் கொள்வோம்


பொருட்களை இனியேனும்

அளவுகோலை மாற்றாது எடை போடப் பயில்வோம்


Sunday, February 12, 2023

சுருக்கமாக எனினும் நறுக்..

 (அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை)


நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.


_அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறிவிடுகிறது._


_நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?_


_“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்._


_ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது._ _அப்படியென்றால் என்ன காரணம்?_


உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. _ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்._

_கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்._


_இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்._ 


_வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்._

_இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்._ 

_ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்._


_வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?_


_கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை._


_வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது._ அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…

_இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!_


நல்லவற்றை நமக்குள் 

நிரப்பி வைப்போம்!

_வாழ்க்கை நமக்கு  கிடைத்த வரம்... அதை அனுபவித்து வாழ்வோம்..

Sunday, February 5, 2023

நளினமா...நடத்தையா..

 ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.


 "நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"


 அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".


 குருஜி கேட்டார் - "அந்தப் பெண் முன்னேறிய பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"


 அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் .  (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)


 குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"


 அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.  மற்றும் புன்னகைத்தார்


 குரு ஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுத்தேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொன்னேன்.


 புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.


 அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.


 உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.


 உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.  பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர் மற்றும் உணவு கொடுத்தார்.  மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.  நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.

 நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.


 உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா..!!


 குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் *இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?*


 அந்த இளைஞன் சொன்னான் - குருஜி!  அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.


 இளைஞர்கள் மூலம் கூட்டத்தில் உரையாற்றிய குரு ஜி - "இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்" என்றார்.


 "அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் அழகான நடத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."


 💐 உங்கள் முகம் மற்றும் உடலின் அழகை விட உங்கள் நடத்தையின் அழகில் கவனம் செலுத்துங்கள்.  வாழ்க்கை உங்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாத அழகாகவும் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் மாறும்.......வாட்ஸ் அப் பகிர்வு

Wednesday, February 1, 2023

நினைவில் கொள்வோம்..

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.!

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள்.

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்.தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்,வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்.

திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலக்காமல் இருக்கும்.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள். முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால்  அழைத்துச் சென்று காட்டுவார்கள்.ஒருநாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்.எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள் கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்.தைத்து பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில் ஊறுகாய், வடகம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்.எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா...?உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள்  அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள் மரியாதை கொடுங்கள்.அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்தே போய்விடும்.அதாவது,

மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து போய் விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். 

நம்முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை, நம் கடமை.தனிமனித வாழ்வியில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களை தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக தடுக்க இயலாது.

 இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

ஆரோக்கியம் பேணுவோம்.

உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம்

பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.....வாட்ஸ் அப் பகிர்வு..

Monday, January 30, 2023

புரியாவிட்டாலும் முழுவதும் படிங்க..முடிவில் புரியும்..

 1254


Ambani vs Adani 


கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை ஹிட்டன்பர்க் என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதானியின் கம்பெனிகளின் பங்குகள் அனைத்தும் 20 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. 


இது ஹிட்டன்பர்கினால் தானா? ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிற்பதற்காகவே போலியாக ஏற்பாடு செய்யப்பட்டதா? இரண்டாம் உலகப்போருக்கும் ஹிட்டன்பர்க்குமே சம்பந்தம் இருக்கிறதாமே? 


இது போன்ற விவாதங்களுக்கு நான் வரவில்லை. ஏனென்றால் நானே ஹிட்டன்பர்க் அறிக்கையினை இன்னும் படிக்கவில்லை. ஆனால் அதானியின் பங்குகள் சரிவடைந்ததற்கு காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அளவிற்கு பங்குகளைப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கினார்களோ, அதே வேகத்தில் கடந்த இரண்டு நாட்களில் விற்றிருக்கின்றனர். இதில் பெரிய முதலீட்டாளர்கள், ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என எல்லாருமே அடங்குவார்கள். இதை தான் bear market என்று சொல்வார்கள். இந்த கரடி மார்கெட் அமைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதானிக்கு ஹிட்டன்பர்க் ரிப்போர்ட். 


இந்த  பியரிஷ் மார்கெட்டை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், 


ஒன்று - ஹிட்டன்பர்க் அறிக்கையினால் அதானியின் பங்குகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் அதை விற்று விட்டார்கள்.


இரண்டு - அதிக லாபம் பார்க்க வேண்டி (அ) அதானியை கவுக்க வேண்டி அவரின்  எதிரிகள் (பியர் கேங் ஐ) வைத்து செய்த சதி.


ஆனால், அதானியின் எதிரிகள் அவரை கவுக்க சதி செய்து பங்குகளின் விலை பல மடங்கு குறைந்ததாக தெரியவில்லை. அதனால் 90% முதலாவதாக சொன்ன விசயம் தான் சரியாக இருக்க வேண்டும். 


2022 - நாடெங்கும் அதானி அலை அடிக்குது. காலகாலமா இருந்த ஆண்ட பரம்பர முகேஷ் அம்பானியவே சொத்து மதிப்புல ஓவர்டேக் செய்கிறார் அதானி.


ஒரு ஊர்ல தின்னைல கடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் கூட ஆகும். ஆனா பணக்காரன் ஆக முடியுமா? அப்படியே ஆயிட்டா, அவன் நேர்மையாக பணக்காரன் ஆகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கா?


அப்படி செல்வந்தர் ஆன அண்ணன் தான் அதானி. அதானியின் கம்பெனிகளின் பைனான்சியல் இன்டிக்கேட்டர்களைப் பார்க்கும்போது எல்லாவற்றிலும், revenue மற்றும் valuation  தான் ஏறியிருக்கிறதே தவிர, அவரின் நிகர லாபம் (net profit) பெரிதளவில் ஏறவில்லை. ஆனாலும் தன் நிறுவனத்திற்கு வந்த இன்வெஸ்ட்மென்ட்களை வைத்து கம்பெனியின் வேல்யூவேஷனை உயரத்திக்காட்டியிருக்கார்.  இது எல்லா நிறுவனங்களும் செய்யும் விஷயம் தான். ஆனால் அதானிக்கு கடன் கொடுத்தோர் பட்டியலில் அதிகமாக உள்ளது நம் தேசியமய வங்கிகள் தாம் என்பது தான் இங்கு வேடிக்கையான விசயம். இந்தக் கடன் எல்லாம் வாராக்கடனாகி, நீரவ், மல்லையா பட்டியலில் அதானி வருவாரா என்பது சொல்ல முடியாத விஷயம். ஆனால் போகிற நிலைமையைப் பார்த்தால் அப்படி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதில் அதானி பங்குகளின் விலை இறங்கியதற்கு இரண்டாவது காரணமாக ( அவரின் எதிரிகளால்) நடந்தது என்றால், இந்தியாவில் அப்படி நடப்பது இது முதன்முறை அல்ல.


ஏற்கனவே ஒரு நபருக்கு நடந்து இருக்கிறது. தற்போது அதானி இருக்கும் நிலையை விட பலமடங்கு அப்போது அவர் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். 


அவர் வேறும் யாரும் அல்ல. துருபாய் அம்பானி தான்!


எனக்கு பொருளாதாரத்தின் மீது ஈர்ப்பு வந்ததற்கு காரணமே குரு மாதிரியான படங்கள் தான். உண்மையாலுமே பத்து பேர தூக்கி போட்டு ஒரு ஆளு அடிச்சா அந்த மாதிரியான படங்கள தூக்கி வச்சு கொண்டாடும் கூட்டம் மத்தியில எனக்கு குரு மாதிரியான படங்கள் தான் உண்மையாலுமே ஹீரோயிட்டாக தெரிந்தது. அந்த படத்தில் ஒரு சண்டை காட்சி இல்ல. படம் முழுக்க உண்மைனும் சொல்ல முடியாது. அதே சமயம் படம் முழுக்க கு(து)ருபாய நல்லவனாகவும் காட்டவில்லை. குரு படம் வந்து இருபது ஆண்டுகள் கழித்து ஹர்ஷத் மேத்தாவின் ஸ்காம் சீரியஸ் வெளிவரும் போது தான் நாம் கட்டிவைத்திருக்கும் ஹீரோ பிம்பம் உடைந்து, உண்மையில் ஹீரோயிஸம் என்றால் என்ன என்பதை வெகுஜனம் உணர ஆரமிக்கிறது. பல பேர் ஸ்காம் பார்ப்பதற்காக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். பலர் ஸ்காம் பார்த்த பின் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு ஆய்வில், கோவிட் காலத்தில் பெரும்பாலான மில்லினியல்ஸ் என்று சொல்லப்படும் 90s kids பங்கு சந்தையில் டிமேட் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக ஸ்காம் 92 சீரியஸை நான் பார்க்கிறேன். 


 சரி..வலவலனு போகாம மேட்டர்குள்ள போவோம். பொருளாதார கட்டுரை ஆதலால் கொஞ்சம் பொறுமையாக தான் போக வேண்டும். அதனால கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க.


இந்தியால தற்போது இரண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இருக்கிறது. ஒன்று பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE)  மற்றொன்று National Stock Exchange (NSE). இதற்கு நடுவில் பல ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தன. ஆனால் அவையனைத்தையும் முடிவிட்டன. இதில் NSE ஹர்ஷத் மேத்தா வழக்கிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டது. BSE ஆங்கிலேய காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டது. அதனால் ஒரு நிறுவனம் மக்களிடையே பணம் திரட்ட வேண்டும் என்றால்,  அந்த காலத்தில் BSE ஐ தான் அணுகுவார்கள். நம் துருபாயும் BSE யை தான் தேடி போனார்.  Reliance Industries Ltd. 1977 இல் பங்கு சந்தையில் இறங்கியது. ஒரு ஷேர் பத்து ரூபாய் என மொத்தம் 2.8 மில்லியன் ஷேரை ஷேர் மார்கெட்டில் இறக்கியது. அப்போது பத்து ரூபாய் என்றால் இப்போது இருநூறு ரூபாய் என்று இருக்கும். ஒரு வருடத்திலேயே ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் ₹10 இல் இருந்து ₹50 ரூபாயை எட்டியது. இந்த தொகை சின்னதாக தெரியலாம். ஆனால் ஒரு வருடத்தில் ஐந்து மடங்கு அளவிற்கு பங்குகள் ஏறியிருக்கிறதென்றால் நினைத்துப் பாருங்கள். அதே பங்குகள் 1980 இல் ₹104  ரூபாயாகவும், 1983 இல் ₹186 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த அசுர வேக வளர்ச்சி பலருக்கு பல சந்தேகங்களை கொடுத்தது. அதே சமயம் பல போட்டியாளர்களுக்கு பொறாமையினையும் கொடுத்தது. 


குரு படத்தில் ஒரு காட்சி இருக்கும். மாதவன் குருவின் செயலை பற்றி செய்தி தாளில் எழுதியவுடன், சட்டென பங்குகள் சரிவை சந்திக்கும். முதலீட்டாளர்கள் (மக்கள்) எல்லாம் தங்கள் ஷேர் சர்டிபிகேட்'களை குருவிடம் காண்பித்து சண்டை போடுவது மாதிரியான காட்சிகள் இருக்கும். அதே போல் தான் தற்போது ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிழ்த்து விட்டிருக்கிறது.


நாம கதைக்கு வருவோம். இப்படி வீறு நடை போட்ட அம்பானியின் கம்பெனியை கவிழ்க்க ஒரு கூட்டம் பங்கு சந்தையில் களம் இறங்கியது. அது தான் "The Bear Cartel". கதையைப் பற்றி பார்க்குமுன் Bear cartel ஐ குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


பங்கு சந்தையில் இருவிதமான மக்கள் உள்ளனர். Bulls and Bears. நான் ₹10 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்குகிறேன். அது ₹20 ஏறினால், அதை விற்று விடுவேன். எனக்கு ₹10 ரூபாய் லாபம். கம்பெனிக்கும் பங்கு விலை உயர்ந்ததால் லாபம். பங்கு விலை உயரும் என்று optimistic mindset உடையவர்கள் தான் bulls. அதே பங்கு விலை இறங்கும் என்ற pessimistic mind set உடையவர்கள் தான் bears. கம்பெனி நஷ்டமானால் கரடிகளுக்கு கொண்டாட்டம். இந்த bear mind set உடையவர்கள் எல்லாம் ஒரு சேர இணைந்து மார்கெட்டை manipulate செய்வார்கள். அதை தான் bear cartel என்கிறோம்.


 இப்போது இந்த bear cartel துருபாயின் பங்குகள் மீது கண்ணு வைத்துவிட்டனர். ரிலையன்ஸின் பங்குகளை சரிவடைய செய்து, லாபம் பார்க்கும் நோக்கில் சந்தையில் களம் இறங்கினர். அந்த சமயத்தில் ரிலையன்ஸ் பங்குகளை பல நடுத்தர மக்கள் வைத்திருந்தார்கள். பங்குகளின் விலை இறங்கினால், லாபம் பார்ப்பது இந்த bear cartel மட்டும்தான். ஆனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடுவது அம்பானியோடு சேர்த்து, அவரை நம்பியுள்ள லட்ச குடும்பங்கள். 


1982 - மார்ச் 18. Bear cartel தன் வேலையை துவங்க ஆரம்பித்தது. கடகடவென ரிலையன்ஸ் பங்குகளை மார்கெட் இல் விற்க ஆரம்பித்தது. ரிலையன்ஸ் பங்குகள் விற்று கொண்டே இருந்தன. அரை மணி நேரத்தில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் பங்குகள் விற்று தீர்ந்தது. வெறும் அரை நாளில் ரிலையன்ஸின் பங்கு விலை ₹131 இலிருந்து ₹121 ஆக சரிந்தது. 


இப்போது ஒரு சில பங்கு சந்தை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். இப்போ இன்னைக்கு நீங்க ஒரு கம்பெனியோட ஒரு பங்கை வாங்குறிங்கனா, அந்த பங்கு உங்களுக்கு T+2 நாளில் வந்துவிடும். அதாவது Trading day + 2 days. திங்ககிழமை  டாடா மோட்டார்ஸ் ஷேர் ஆர்டர் போடுறிங்கனா, புதன்கிழமை உங்க அக்கவுண்டுக்கு டாடாவின் பங்குகள் வந்துவிடும். ஆனா அதுக்குள்ள நீங்க அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். அப்போது இப்படி இல்லை. ஒரு பங்க நீங்க இப்போ ஆர்டர் போட்டா அது உங்களுக்கு ஒரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை தான் கிடைக்கும். அதற்குள் நீங்கள் செட்டில்மென்ட் எல்லாம் முடித்துவிட வேண்டும். இப்போது உள்ளது போல ஆன்லைன் முறையும் அப்போது அல்ல. In case, ஒரு வேளை அந்த second friday இன் போது உங்களிடம் shares இல்லையென்றால் நீங்கள் அதற்கான தனி அபாராத தொகையை செலுத்த வேண்டும். அதற்கு பெயர் தான் உந்தா பத்லா. கொஞ்சம் குழப்பமாக இருக்கும். கதைக்கு போனவுடன் புரிந்து விடும்.


சரி. அம்பானியோட shares எல்லாத்தையும் bear cartel வித்தாங்க. அப்போ, bear cartel ஏற்கனவே அம்பானியோட பங்குகளை வாங்கி வச்சிருந்தாங்களா? 


அப்படினு கேட்டா, இல்ல!


அப்போ எப்படி இல்லாத ஒரு ஷேர்ஸை விக்க முடியும்? 


ஹூம். முடியும். அதற்கு பேரு தான் short selling. அதை தான் இந்த bear gang பண்ணாங்க.


அவர்களிடம் இல்லாத ஒரு ஷேரை வாங்கி, அதன் விலையை இறக்கி, விலை இறங்கியவுடன் அதை விற்று  லாபம் பார்ப்பார்கள். இந்த இடத்தில் உங்களுக்கு தெளிவாக குழம்ப வேண்டும். இப்போது மீண்டும் ஒரு  முறை குழப்பினால், தெளிவாகி விடும்.


அதாவது, ஒரு ரிலையன்ஸ் ஷேர் உங்ககிட்ட இல்ல. அதே சமயம் நீங்க ஒரு bear ஆக trading பண்ணனும் னு ஆசை படுறிங்க. அதிக விலைக்கு விற்று, மீண்டும் குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு தான் sebi ஒரு விதிமுறை வைத்துள்ளது. அதற்கு பெயர் தான் MIS (Marginal Intraday Settlement). 


ஒரு டாடா மோட்டார்ஸ் பங்கு ₹300 இல் இருக்கிறது. கண்டிப்பாக அது இன்று ₹200 ஐ தொடும் என்று உறுதியாக நம்புறீங்க. இப்போ நீங்க ₹300 ரூபாய் ஷேரை வித்து, அதை மீண்டும் ₹200 ரூபாய்க்கு வாங்கினால், உங்களது லாபம் எவ்வளவு? 

₹100 ரூபாய்.


எல்லாம் ஓகே. ஆனா என்கிட்ட இல்லாத ஷேரை எப்படி நான் விக்க முடியும்? னு கேப்பிங்க.


அத பத்தி Sebi யே கண்டுக்கிறதில்ல. நீங்க ஏன் worry பண்றிங்க! 


ஆனாலும் இதுல லாஜிக் உதைக்குதே பாஸூ னு தோணும். இப்போது லாஜிக்கை உடைக்கிறேன்.


நீங்க இல்லாத டாடா மோட்டார்ஸ் ஷேரை யாருக்கோ ₹300 ரூபாய்க்கு வித்துட்டிங்க. இங்க நீங்க seller. Buyer உங்கிட்ட இருந்து share ஐ இன்னும் வாங்கல. ஆனா பணம் கொடுத்துட்டான். இப்போ நீங்க அன்னைக்குள்ள buyer கிட்ட share அ ஒப்படைச்சே ஆகனும். இல்லாத share எங்க போய் வாங்குவிங்க? மார்கெட் ல. அன்னைக்கு சாயங்காலம் மார்கெட் மூடுறதுக்குள்ள share அ வாங்கி நீங்க buyer கிட்ட ஒப்படைச்சே ஆகணும். ஏன்னா, அதுக்கு தானே வாங்கிருக்கிங்க ₹300 ரூபா துட்டு. உங்க கணிப்புபடியே share இன் விலை ₹200 கிட்ட இறங்குது. டக்கனு அத ₹200 ரூபாய்க்கு வாங்கி buyer கிட்ட கொடுக்குறிங்க. .


இப்போ உங்க லாபம் எவ்ளோ? ₹100 ரூபாய். கணக்கு சரியா வரும். இதே நீங்க எதிர்பார்த்த மாதிரி பங்கோட விலை ₹200 க்கு போகாம ₹400 க்கு போச்சு னா?  


உங்களுக்கு ₹100 ரூபாய் நட்டம். Buyer க்கு ₹100 ரூபாய் profit. ஏன்னா அவன் உங்க கிட்ட ₹300 ரூபாய்க்கு வாங்குவான். பங்கு விலை ₹400 க்கு போச்சுனா, அத அந்த ரேட்டுக்கு வித்துட்டு லாபம் பாத்துப்பான். அவன் bull. நீங்க bear.


சரி. இப்போ கதைக்குள்ள வருவோம். அம்பானியோட பங்குகளை எல்லாம் இப்படி தான் இந்த bear cartel விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் கணிப்பு, இப்போ ₹131 ரூபாய்க்கு வித்துருக்கோம். பின்னாடி ₹121 ரூபாய்க்கு வாங்கிக்கலாம் என்பது தான். 


 எவ்ளோ shares வித்துருங்காங்க?


கிட்டத்தட்ட 3 லட்சம் 50 ஆயிரம். ஒரு share ku 10 ரூபாய் லாபம் னா. 3,50,000 x 10 = 35, 00,000 வரை லாபம். அதுவும் அந்க காலத்துல. விலை இன்னும் இறங்குச்சுனா இன்னும் லாபம்.


ஆனா, அந்த இடத்துல யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்னு நடந்துச்சு. திடீர்னு ரிலையன்ஸோட பங்குகள் அனைத்தும் ஏற ஆரம்பிச்சிது. 


Bear cartel எல்லாரும், "ஏய் எப்புற்றா" னு பாத்தாங்க. விலை ஏறி ஏறி ஆரம்ப விலை ₹131 க்கே வந்துச்சு. அதோட விட்டுச்சா னு பாத்தா அதான் இல்ல. இன்னும் ஏறுது ஏறுது ஏறிகிட்டே இருக்கு.


இப்போ bear cartel மட்டுமில்ல, whole இந்தியாவுமே சொல்லுச்சு, " Eppuuuraaa".


இது எப்படி சாத்தியமாச்சு. அம்பானிக்கும் அரசுக்கும் தொடர்பு இருந்துச்சா? , அம்பானிக்கும் Sebi க்கும் ஏதாச்சு உடன்படிக்கை நடந்துச்சா? 


இல்லை! 


இந்த இடத்தில் தான் துருபாய் எனும் பிஸினஸ் மேக்னேட்டை குறைவாக எடை போட்டுவிட்டார்கள்.


பங்கு விழுந்த அதே நேரத்தில், உடனடியாக பக்கத்திலிருந்த நாடுகளிலுள்ள பெரிய முதலீட்டாளர்களை அழைத்து , Friends of Reliance எனும் ஒரு நிறுவனம் மாதிரியான அமைப்பை உருவாக்கி, மலமலவென தன் கம்பெனி shares ஐ, தான் உருவாக்கிய கம்பெனியை வைத்தே ஆர்டர் செய்தார். கட கட கட வென buying order பறக்கிறது. இதெல்லாம் எதுவும் புரியாமல் மக்கள் திக்குமுக்காடினர். என்னடா இவ்ளோ வேகமா இறங்குது, திடீர்னு இவ்ளோ வேகமா ஏறுது னு யாருக்குமே ஒன்னும் புரியல.


₹131 ரூபாய்  ஷேரை ₹121 ரூபாய்க்கு கொண்டு வந்து bear cartel லாபம் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அதை அம்பானி கடைசியில் ₹201 ரூபாய் க்கு கொண்டு வந்து நிறுத்தினார்.


"எதிர்ல வரவனோட பொருள புடுங்கி அவனையே போடணும் டா" என்று பாணியை அம்பானி கடைபிடித்தார்.


இப்போ இவ்வளவு பணம் கொடுத்து share ஐ settle செய்ய bear இடம் பணம் இல்லை. வெள்ளிக்கிழமை வந்தாகிவிட்டது, கால அவகாசம் கேட்டார்கள்.


"வரட்டும் அவன்.. இதுக்கு தான் நா காத்துகினுகிடந்தேன். என்ன கதி ஆவறன் பாரு." 


ஒரு ஷேருக்கு உந்தா பத்லா ₹25 கொடுக்கனும் ஆர்டர் போட்டாரு அம்பானி. அப்போ எத்தனை ஷேர். எத்தனை பைசா. அம்பானிக்கு எவ்வளவு லாபம். நினைச்சு பாத்தாலே தலையெல்லாம் சுத்துது.


அடுத்த ரெண்டு நாளில் கிட்டத்தட்ட 10 கோடி அளவில் ஆர்டர் பண்ண ஷேர் வராததால் மார்கெட்டே ஸ்தம்பித்து நின்றது. இரண்டு நாட்கள் ஷேர் மார்கெடே க்ளோஸ். அடுத்த மூன்று நாட்கள் வரை வெறும் ரிலையன்ஸ் ஷேர் மட்டுமே மார்கெடில் ட்ரேட் ஆகியது.


இன்னைக்கு அதானியோட பங்குகள் சரிந்து வருவது அன்றைய அம்பானியோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. அதே சமயம் அம்பானி போல ஏதாவது மாய மந்திரம் செய்து அதானி மீண்டு வந்திருவாரா என்றால், நிச்சயம் முடியாது. ஏனென்றால் நான் முன்னாடியே சொன்னேனே, தின்னை - கலியாணம் - பணக்காரன்.


இன்னும் ஓப்பானாக சொல்ல வேண்டுமென்றால், அதானியால் ஒரு போதும் அம்பானி ஆகவே முடியாது.


ஏன்னா....


இந்த துணியும் வளர்ச்சியும் கடுமையான உழைப்பால வந்தது.


நீ குருநாத் கூட மோதனும் னா கடுமையா உழைக்கனும்.


குருநாத் கூட சண்ட போட நீ குருநாத் ஆகணும்.


ஆனா...


குருநாத் இங்க ஒருத்தன் தான்! Thanks Vishnu)


PC ஜோதிஜி திருப்பூர்