Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-


 பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 சென்னைப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன் இந்த விழா
மிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
 "எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும்

36 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// "எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும் ///

அப்படிச் சொல்லுங்க சார்...

சிறப்பாக செய்வோம்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

(TM 2)

பால கணேஷ் said...

ஆஹா... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற தலைவரின் பாடலை நினைவூட்டிய மனதைத் தொட்ட பகிர்வு. உங்களை வரவேற்பதில் பதிவர் சந்திப்பு பெருமையும் மகிழ்வும் கொள்கிறது,

G.M Balasubramaniam said...

விழா நிகழ்ச்சிகளை வீடியோவாக வெளியிட முடியுமா என்று முயற்சிக்கவும். விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

சார் நீங்கள் MGR போல நடித்து காட்டணும் என சிலர் கேட்கிறார்கள் தயாராய் இருங்கள்

ராமலக்ஷ்மி said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

Unknown said...

நட்புகள் பல(ம்) பெற வாழ்த்துகிறேன்!

Angel said...

அண்ணா மிக்க சந்தோஷம் ...இந்த குடும்ப விழாவில் பங்கு பெற முடியலை என்ற ஆதங்கம் என்னை போன்ற வெளிநாட்டில் இருப்போருக்கு உண்டு ..ஆனாலும் எல்லாரும் சந்தோஷமா சில நாட்கள் பதிவர் சந்திப்பு பற்றி பதிவுகளில் படிக்கும் போது உங்கள் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது என்பது உண்மை
நானும் மோகன் அவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கேன் ..வீடியோ பதிவு வேணும்னு ..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நாளைய சரித்திரம்

ராஜி said...

தங்களை விழாவில் சந்திக்க ஆவலாய் உள்ளேன் ஐயா

Anonymous said...

சென்னைக்கும் பதிவர் விழாவுக்கும் வருக !
தங்கள் அறிவை அனுபவத்தைப் பகிர்ந்து தருக !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாளை சரித்திரம் பேசும் இம்மாநாட்டை...

சென்னை பித்தன் said...

சந்திப்போம்!காத்திருக்கிறேன்,

சென்னை பித்தன் said...

த.ம.9

Unknown said...



தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி!நேரில் கண்டு
மகிழ்வோம்

த ம 10

Athisaya said...

மனதிற்கு மகிழ்வாயுள்ளது ஐயா!இங்கிருந்து வாழ்த்துகிறேன்.உம்படை வெல்லும்.!

பட்டிகாட்டான் Jey said...

வாருங்கல் காத்திருக்கிரோம்.

பட்டிகாட்டான் Jey said...

த.ம 1548

சிவகுமாரன் said...

நான் மதுரையில் என்று நினைத்து ஏமாந்து போனேன்

அன்பு உள்ளம் said...

வாழ்த்துகிறேன் ஐயா!

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
"எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும்

http://anpuullam.blogspot.ch/2012/08/blog-post_24.html

vetha (kovaikkavi) said...

Nalvaalthu.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

Vetha.Elangathilakam.

geevanathy said...

சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

MARI The Great said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (TM 11)

வெங்கட் நாகராஜ் said...

விழா சிறக்க வாழ்த்துகள். உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை இம்முறை இழந்துவிட்டேன். அடுத்த தமிழகப் பயணத்தின்போது மதுரை வந்தாவது உங்களைச் சந்திக்க வேண்டும்.... பார்க்கலாம்.

த.ம. 12.

சக்தி கல்வி மையம் said...

நாளை சந்திப்போம் நண்பரே..

மனோ சாமிநாதன் said...

விழா மிகச் சிறப்பாக நடந்தேற இனிய வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

விழா சிறப்பாக நடக்கும். வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

Rasan said...

//நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
"எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும் // கண்டிப்பாக. நாளைய சந்திப்பு சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துக்கள்.

இடி முழக்கம் said...

நாளைய சந்திப்பு வெற்றியடைய மனமாந்த வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

சென்னை பதிவர்கள் கூட்டம் என்ற பெயரில் கூகுளில் எப்படியும் 200 வது தேறும்ன்னு நினைக்கின்றேன். கூட்டம் முடிந்ததும் இன்னோரு 200 வந்துடும். ஈரோட்டு நிகழ்ச்சியை விட ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது என்பதென்வோ உண்மை. வலையகம் உருவாக்கியுள்ள நேரிடையான ஒலி ஒளி நிகழ்ச்சியைப் பற்றி படித்த போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, இதுவும் ஒரு வித முன்னேற்றம் தான். விழா சிறக்க வாழ்த்துகள்,

நிலாமகள் said...
This comment has been removed by the author.
நிலாமகள் said...

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்//

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

அன்பு உள்ளம் said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்ததை ஒட்டி
இதில் பங்கு பற்றிய தங்களுக்கும் என் மனம்
கனிந்த வாழ்த்துக்கள் ஐயா .

கதம்ப உணர்வுகள் said...

நம்ம வீட்ல ஒரு சந்தோஷ நிகழ்வுன்னா எப்படி மனம் முழுக்க பூரிப்போடு ஆவலோடு காத்திருப்போமோ அப்படி ஒரு காத்திருப்பு இந்த கவிதையில் தெரிந்தது ரமணி சார்....

உவமை மிக அருமை... உண்மையே.. எழுதும் எழுத்துக்களை வைத்து தான் இவர் இப்படி இருப்பார் என்று நாம் நமக்குள் உருவகப்படுத்தி வைத்திருப்போம்...

அதற்கு ஒரு துளி கூட குறையாம அத்தனை அன்பு உள்ளங்களும் விழாவை சிறப்பித்ததை படங்களும் கட்டுரைகள் மூலமாகவும் வெளிப்படுத்தியதையும் பார்த்தோம்....

நல்லபடி விழாவுக்கு போய் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரமணி சார்...

Post a Comment