Friday, August 17, 2012

அழுக்கு மன மூட்டை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூட் டை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்

அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூட் டையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….
அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி
போவோர் வருவோரின்
மார்பினை  உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உரக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்து விரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

மீள்பதிவு 

68 comments:

Lali said...

மிகவும் வித்தியாசமான எழுத்து..
அடிக்கடி பார்க்கும் ஒரு மனிதனை.. ஆனால் அனைவரும் உதாசீன படுத்தும் ஒரு பிரஜையை உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்...
மனதில் ஏதோ ஒன்று உடைகிறது நீர்க்குமிழியாய்..

Lali
http://karadipommai.blogspot.in/

Unknown said...

மனிதனில் இருக்கும் அழுக்கு மூட்டை தான் தீய எண்ணங்கள்... உங்களின் கவிதை அருமை!

பால கணேஷ் said...

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் நினைவுக்கு வருகிறது இந்த கேரக்டரைப் படித்ததும். அருமை ஸார்.

NKS.ஹாஜா மைதீன் said...

அருமை.....இலக்கியநயத்தோடு எழுதப்பட்ட கவிதை... த ம 4

கீதமஞ்சரி said...

அகத்துள் மூட்டை மூட்டையாய் அழுக்கைச் சுமப்பவர்கள் மத்தியில் புறத்தே அழுக்கு மூட்டை சுமப்பவன் பைத்தியக்காரன் பட்டம் பெறுகிறான். அழுக்கு மூட்டையைப் பிரிந்தால் அவன் தெளிவானா? அவன் தெளிந்தால் அதைப் பிரிவானா? விடைகாணவியலாத கேள்வி. நாம் சுமந்து திரியும் இவ்வுடலாகிய அழுக்கு மூட்டை பிரியும்போதுதான் ஆன்மா பரிசுத்தமாகும். மீள் பதிவென்றாலும் மீள்சிந்தனை தோற்றுவிக்கும் பதிவு. மனமுவந்த பாராட்டுகள் ரமணி சார்.

Unknown said...

மன விகாரங்களையும்..மறைக்க முயன்று தோற்றுப்போவதையும்... நேர்மையாளனின் பார்வையில் எடுத்து வைக்கப்பட்ட வரிகள்!

நன்று..வாழ்த்துக்கள்!

எனது கவிதைகள்... said...

அருமையான வரிகள், வாழ்த்துக்கள் அய்யா!


உண்மைவிரும்பி.
மும்பை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...
நன்றி சார்... (TM 6)

Rasan said...

அழகான வரிகள்....
நன்றி சார்.... தொடருங்கள்

இடி முழக்கம் said...

அருமை அருமை. நண்பரே... வரிகள் காட்டி நிக்கும் கருத்துக்கள் அத்தனையும் யதார்த்தம் .....மீண்டும் மீண்டும் படிக்கும் போது இன்னும் பல புதிய கருத்துக்கள் ....

இடி முழக்கம் said...

த.ம 7

Anonymous said...

கருத்தூன்றி படித்தால் புரிவது
நாம் நம் மன அழுக்கு மூட்டையைத்
துறக்க வேண்டும் என்பதே.

rajamelaiyur said...

அழகான எழுத்து நடை .. அருமையான நெஞ்சை தொடும் வரிகள்

சசிகலா said...

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி
போவோர் வருவோரின்
மார்பினை உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உறக்கக் கத்துவான்.

காட்சிகள் கண் முன் வந்து போயின அருமை ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

சிவனுக்கு பிச்சைக்காரன் என்றும் ஒரு பெயர் உண்டு. அவன்தான் இவனோ? அன்றி இவன்தான் அவனோ?

உங்கள் கவிதையில் சிக்கெனப் பிடித்த வரிகள்......

// நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான். //

sathishsangkavi.blogspot.com said...

அருமையான எழுத்து சார்....

TM 11

G.M Balasubramaniam said...

காணும் காட்சியினை கருத்தூன்றிக் கவனித்து,கருவில் சுமந்து அழகு கவிதையாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

துரைடேனியல் said...

நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள தூண்டும் அற்புதமான சொல்லோவியம்.

arasan said...

கலக்கல் அய்யா ...
ரொம்ப ரசித்தேன்

ஆத்மா said...

சார் சூப்பர் பதிவு சூப்பர் கற்பனை....மிக அருமை
த. ம 15

Unknown said...கண்ணில் கண்ட காட்சிகளை புகைப்படக் கருவி பதிவு
செய்தது போல கண்முன் அம் புனிதனை படமாக பதிய வைத்தீர்! அது மட்டுமல்ல மனித மன அழுக்கைப் போக்கும் பாடமாகவும் வைத்தீர்!
அருமை!

சீனு said...

// எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.// உங்கள் எழுத்தின் வேகம் இதில் தெரிகிறது... அருமை சார்

குறையொன்றுமில்லை. said...

நல்ல கருத்துள்ள கவிதை . நல்லா இருக்கு.

”தளிர் சுரேஷ்” said...

தெருவோர மனிதனைப் பற்றிய சிறப்பான கவிதை! அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
கோமதி அரசு said...

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….
அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்//

மூட்டையை சுமந்து கொண்டு போவதைபார்த்து அருமையான தத்துவ கவிதை எழுதிவிட்டீர்கள்.

மனிதரிடம் உள்ள வேண்டாத எண்ணம் மூட்டையை பிரித்து தூக்கி எறிந்தால் மனிதன் தேவன் ஆவான்.
அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.


ஹேமா (HVL) said...

வார்த்தைகளால் சித்திரம் வரைந்து விட்டீர்கள். நல்ல கவிதை.

Athisaya said...

புரிகிறுது ஐயா!தங்கள் கருத்தோட்டம்.ஆனாலும் தங்களிடமிருந்தான வித்தியாசமான கவிதை.வாழ்த்துக்கள் ஐயா!!!சந்திப்போம்.

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

ஸாதிகா said...

வரிகளில் மெருகு கூடிக்கொண்டே போகினறது.

தனிமரம் said...

அர்த்தம் பொதிந்த அழுக்கு மூட்டை ஐயா.

அம்பாளடியாள் said...

ஒரு வித்தியாசமான கவிதை .அருமை தொடர வாழ்த்துக்கள் ஐயா .

ஹேமா said...

திரும்பத் திரும்ப வாசித்து எம்மை நாமே தேடியெடுக்க வைக்கும் வார்த்தைகள்.மீள்பதிவானாலும் படிக்க வைக்கிறீர்கள் !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மூட்டைக்குள் இருப்பது என்னவென்று தெரியாது.ஆனால் இந்தப் பதிவில் பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

தெருக்களில் அடிக்கடி கண்களில் படும் உருவம்தான் எனினும், அந்த உருவத்திற்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்துவிட்டீர்கள் ஐயா

Anonymous said...

.... திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
ஒரு அங்கமாகவே வாழும்/

தீய எண்ணம் பற்றிய உண்மை இது தான் நல்ல சிந்தனை விரிப்பு.
2-3 தடவை வாசித்தேன்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

Lali //

மனதில் ஏதோ ஒன்று உடைகிறது
நீர்க்குமிழியாய்..

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ayesha Farook s

மனிதனில் இருக்கும் அழுக்கு மூட்டை தான் தீய எண்ணங்கள்... உங்களின் கவிதை அருமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் நினைவுக்கு வருகிறது இந்த கேரக்டரைப் படித்ததும். அருமை ஸார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

அருமை.....இலக்கியநயத்தோடு எழுதப்பட்ட கவிதை.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி//

மீள் பதிவென்றாலும் மீள்சிந்தனை தோற்றுவிக்கும் பதிவு. மனமுவந்த பாராட்டுகள் ரமணி சார்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

மன விகாரங்களையும்..மறைக்க முயன்று தோற்றுப்போவதையும்... நேர்மையாளனின் பார்வையில் எடுத்து வைக்கப்பட்ட வரிகள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

எனது கவிதைகள்... //

அருமையான வரிகள், வாழ்த்துக்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


இடி முழக்கம் //

.....மீண்டும் மீண்டும் படிக்கும் போது இன்னும் பல புதிய கருத்துக்கள் ....//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

கருத்தூன்றி படித்தால் புரிவது
நாம் நம் மன அழுக்கு மூட்டையைத்
துறக்க வேண்டும் என்பதே.

மிகச் சரி

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

"என் ராஜபாட்டை"- ராஜா //

அழகான எழுத்து நடை .. அருமையான நெஞ்சை தொடும் வரிகள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

காட்சிகள் கண் முன் வந்து போயின அருமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ

சிவனுக்கு பிச்சைக்காரன் என்றும் ஒரு பெயர் உண்டு. அவன்தான் இவனோ? அன்றி இவன்தான் அவனோ? //

மிகச் சரி
ஊர் சுற்றும் பித்தன் என் கண்களுக்கு
ஒரு வகையில் உலகாளும் பித்தனாகத்தான் தெரிகிறான்தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சங்கவி s//

அருமையான எழுத்து சார்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam .

காணும் காட்சியினை கருத்தூன்றிக் கவனித்து,கருவில் சுமந்து அழகு கவிதையாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...

அழுக்கு மனமூட்டை...
என்றாவது ஒருநாள் மாறும் போது
மற்றவர்கள் அதன் எதிரில்
நிற்க முடியாமல்
மனத்தை மறைத்துக்கொண்டு
அதற்கு பயப்பட தான் வேண்டியுள்ளது.

கருத்தாழக் கதைங்க ரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //.

அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள தூண்டும் அற்புதமான சொல்லோவியம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அரசன் சே//

கலக்கல் அய்யா ...
ரொம்ப ரசித்தேன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி

சார் சூப்பர் பதிவு சூப்பர் கற்பனை....
மிக அருமை

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

கண்ணில் கண்ட காட்சிகளை புகைப்படக் கருவி பதிவசெய்தது போல கண்முன் அம் புனிதனை படமாக பதிய வைத்தீர்! அது மட்டுமல்ல மனித மன அழுக்கைப் போக்கும் பாடமாகவும் வைத்தீர்!
அருமை!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

/சீனு //

/ உங்கள் எழுத்தின் வேகம் இதில் தெரிகிறது... அருமை சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

நல்ல கருத்துள்ள கவிதை . நல்லா இருக்கு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

தெருவோர மனிதனைப் பற்றிய சிறப்பான கவிதை! அருமை! நன்றி!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


கோமதி அரசு//
.
மனிதரிடம் உள்ள வேண்டாத எண்ணம் மூட்டையை பிரித்து தூக்கி எறிந்தால் மனிதன் தேவன் ஆவான்.
அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா (HVL)//.

வார்த்தைகளால் சித்திரம் வரைந்து விட்டீர்கள். நல்ல கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

மூட்டைக்குள் இருப்பது என்னவென்று தெரியாது.ஆனால் இந்தப் பதிவில் பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தெருக்களில் அடிக்கடி கண்களில் படும் உருவம்தான் எனினும், அந்த உருவத்திற்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்துவிட்டீர்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தீய எண்ணம் பற்றிய உண்மை இது தான் நல்ல சிந்தனை விரிப்பு.
2-3 தடவை வாசித்தேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


AROUNA SELVAME //

கருத்தாழக் கதைங்க ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மாதேவி said...

மனத்தில் அழுக்கு மூட்டையுடன் மனிதர்கள் திரிய இவனோ இற்றுப்போன துணிமூட்டையுடன் பைத்தியக்காரன் பெயர் தாங்கி .....

கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மனதிற்குள் அழுக்கு மூட்டை சுமந்து வரும் பலர்.... இவர்களுக்கு நடுவே இவர்....


நல்ல கவிதை.....

த.ம. 19

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

மனத்தில் அழுக்கு மூட்டையுடன் மனிதர்கள் திரிய இவனோ இற்றுப்போன துணிமூட்டையுடன் பைத்தியக்காரன் பெயர் தாங்கி .....

கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //.

மனதிற்குள் அழுக்கு மூட்டை சுமந்து வரும் பலர்.... இவர்களுக்கு நடுவே இவர்....
நல்ல கவிதை...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment