Friday, August 3, 2012

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்

57 comments:

வெங்கட் நாகராஜ் said...

//நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு//

அத்தனையும் உண்மை.

மிக நல்ல கருத்து கொண்ட கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

த.ம. 2

குறையொன்றுமில்லை. said...

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

மிகவும் ரசித்த வரிகள் கவிதை நல்லா இருக்குவாழ்த்துகள்.

சின்னப்பயல் said...

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்

சசிகலா said...

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

உற்சாகம் தரும் வரிகள் ஐயா கோர்த்த விதம் அழகு மீண்டும் மீண்டும் படித்தேன்.

MARI The Great said...

///நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு///

சிந்திக்க தூண்டும் வரிகள் ஐயா (தம 5)

பால கணேஷ் said...

வெள்ளத்தனையது மலர் நீட்டம் - எண்ணங்களின் சிறப்பை அருமையாக எடுத்தியம்பினீர்கள் நண்பரே. சிந்தனையைத் தூண்டி மனதைத் தொட்ட படைப்பு. நன்று. (7)

Anonymous said...

புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே ....

அருமையான வரிகள்.. இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன் .. !!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நேற்றையும் நாளையும் நினைத்து இன்றை மறக்கச் செய்வது நம் எண்ணங்களே என்ற கருத்து மிக அருமை.
த.ம.8

Radha rani said...

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே... அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள். எண்ணம் இனிதானால் எல்லாமே இனிமைதான்.

கோவி said...

சிறப்பான பதிவு.. எனது தமிழ்மண ஓட்டும் (9) சேர்க்கப்பட்டது..

திண்டுக்கல் தனபாலன் said...

எண்ணங்களே எல்லாமே என்று சொல்லும் அற்புத கவிதை...

நன்றி…
(த.ம. 9)

செய்தாலி said...

//நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு//

ரெம்ப சிறப்பா சொனீங்க சார்

தி.தமிழ் இளங்கோ said...

எண்ணங்கள் மேம்பட, எண்ணங்களின் வலிமையை உணரச் செய்த, கவிஞரின் எண்ணமிகு ஒரு கவிதை.

மகேந்திரன் said...

எத்தடை வந்தாலும்
எதிர்மறை எண்ணம் தவித்து
நேர்மறையாய் உள்ளம் செலுத்தினால்
விதைத்தது எதுவாயினும்
விளைவது நலமே...

அருமையான சிந்தனை நண்பரே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புதம்...

Unknown said...

எண்ணம் போலவே வாழ்வும் அமையும் என்பதை அழகாக எடுத்துரைத்திருப்பது மிகநன்று!..வாழ்த்துகள்!

Anonymous said...

எண்ண்ம் வாழ்வின் வண்ணம்:)

”தளிர் சுரேஷ்” said...

எண்ணம் போல வாழ்வு என்பதை சிறப்பிக்கும் சீரிய கவிதை! சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

Seeni said...

ummai ayya!

naam velvom!

Anonymous said...

மனமே மகா சக்தி.
மாபெரும் வலிமையுடைத்து
மறக்வொண்ணாதது என
வலியுறுத்தும் பதிவு. சிறப்பு!
பாராட்டுகள்.
பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

பயனுள்ள இனிய கவிதை வரிகள் தொடர
வாழ்த்துக்கள் ஐயா .

மனோ சாமிநாதன் said...

உயர்ந்த எண்ணங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்பதனை அழகிய கவிதையால் சொல்லியிருக்கிறீர்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு...

அருமையான வரிகள்
உண்மையான வரிகள்

ஆத்மா said...

அழகான அர்த்தமிகுந்த வரிகள் சார்....
ஆம் செயல்கள் எல்லாம் எண்ணத்திப் பொருத்துத்தான் அமைகின்றன அதுவே மனதும் உயர சந்தோஷமாக காரனமாகவும் இருக்கிறது
அழகு....( த .ம 16)

ஸாதிகா said...

/நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு///ஆஹாஹா...என்னெ வார்த்தை சொல்லாடல்!!!

vimalanperali said...

நல்ல் கருத்தாக்கம் கொண்ட படைப்பு,நூலைப்பொருத்தே இருக்கிற சேலையின் வனப்புகள் இப்போதெல்லாம் காணாமல் போய் ரொம்பவும்தான் நாட்களாகிப்போனது.

vanathy said...

அழகான வரிகள். அழகான கவிதை. தொடருங்கள்.

Aathira mullai said...

//மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே//
எல்லா வரிகளும் ஆழ்ந்த கருத்தைத் தாங்கியது.

ஹேமா said...

மனதில் பதியவைக்கவேண்டிய ஒவ்வொரு வரிகளும் அருமை !

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

அத்தனையும் உண்மை.
மிக நல்ல கருத்து கொண்ட
கவிதைப் பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

மிகவும் ரசித்த வரிகள் கவிதை நல்லா இருக்குவாழ்த்துகள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

உற்சாகம் தரும் வரிகள் ஐயா கோர்த்த விதம் அழகு மீண்டும் மீண்டும் படித்தேன//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

சிந்திக்க தூண்டும் வரிகள் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

நேற்றையும் நாளையும் நினைத்து இன்றை மறக்கச் செய்வது நம் எண்ணங்களே என்ற கருத்து மிக அருமை.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

வெள்ளத்தனையது மலர் நீட்டம் - எண்ணங்களின் சிறப்பை அருமையாக எடுத்தியம்பினீர்கள் நண்பரே. சிந்தனையைத் தூண்டி மனதைத் தொட்ட படைப்பு. நன்று//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இக்பால் செல்வன் //

அருமையான வரிகள்..
இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன் .//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராதா ராணி //

உயர்வைத் தடுப்பது எண்ணமே... அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள். எண்ணம் இனிதானால் எல்லாமே இனிமைதான்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

எண்ணங்களே எல்லாமே என்று சொல்லும் அற்புத கவிதை...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

ரெம்ப சிறப்பா சொனீங்க சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

எத்தடை வந்தாலும்
எதிர்மறை எண்ணம் தவித்து
நேர்மறையாய் உள்ளம் செலுத்தினால்
விதைத்தது எதுவாயினும்
விளைவது நலமே...


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிஅருமையான சிந்தனை நண்பரே..

Yaathoramani.blogspot.com said...

mazhai.net //

எண்ண்ம் வாழ்வின் வண்ணம்:)


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

எண்ணம் போல வாழ்வு என்பதை சிறப்பிக்கும் சீரிய கவிதை! சிறப்பான பகிர்வு! நன்றி!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

ummai ayya!

naam velvom!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

மனமே மகா சக்தி.
மாபெரும் வலிமையுடைத்து
மறக்வொண்ணாதது என
வலியுறுத்தும் பதிவு. சிறப்பு!
பாராட்டுகள்.
பணி தொடரட்டும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

பயனுள்ள இனிய கவிதை வரிகள் தொடர
வாழ்த்துக்கள் ஐயா .//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

உயர்ந்த எண்ணங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்பதனை அழகிய கவிதையால் சொல்லியிருக்கிறீர்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு...

அருமையான வரிகள்
உண்மையான வரிகள்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

அழகான அர்த்தமிகுந்த வரிகள் சார்....
ஆம் செயல்கள் எல்லாம் எண்ணத்திப் பொருத்துத்தான் அமைகின்றன அதுவே மனதும் உயர சந்தோஷமாக காரனமாகவும் இருக்கிறது//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா//

///ஆஹாஹா...என்னெ வார்த்தை சொல்லாடல்!!!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy s//

அழகான வரிகள். அழகான கவிதை.
தொடருங்கள்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆதிரா //.

எல்லா வரிகளும் ஆழ்ந்த கருத்தைத் தாங்கியது. //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

மனதில் பதியவைக்கவேண்டிய ஒவ்வொரு வரிகளும் அருமை !//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அருமையான எண்ணங்கள்...உங்களது உயர்ந்த எண்ணங்களே வார்த்தையாக இருக்கிறது. நன்றி ஒரு நல்ல பதிவிற்கு.

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

ஆழமான கருத்துகள் பொதிந்த வார்த்தைகள் Sir! நம் எண்ணங்கள் நலமானால் எல்லாமே நலம்!

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment