Wednesday, August 1, 2012

சதுப்பு நிலம்

வீட்டை அடுத்திருந்த
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊன்றப் பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்

மந்திர சப்தமும்
மங்கள வாத்தியமும்
கேட்க துவங்கியதும்
நா ங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அரி வாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா

முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்

நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன

நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்ப் பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
தவறெனத் தெரிந்த போதும்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்

மீள்பதிவு

61 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படித்ததில்லை... பிடித்த வரிகள்...
/// நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன ///

நன்றி சார்...
(த.ம. 2)

MANO நாஞ்சில் மனோ said...

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அறிவாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா//

அதானே குரு....முன்பே படித்த மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்....மீள்பதிவு...!

ஹேமா said...

மீண்டும் அசைபோட வைக்கிறீர்கள்.நலாதொரு கவிதைதானே.கற்பனைகள்தானே ஆக்கத்தும் அழிவுக்கும் காரணம் !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனதை தொடுகிறது.மணம் முடிக்க இயலாத சூழலில் வாழும் பெண்மனதை படம் பிடிஹ்துக் காட்டுகிறது கவிதை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 4

Seeni said...

meel pathivukku mikka nantri!

kavithai nantru!

ஸ்ரீராம். said...

அட...!

ஐயோ......!!!

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //


தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

ஹேமா//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

// மீண்டும் அசைபோட வைக்கிறீர்கள்.நலாதொரு கவிதைதானே.கற்பனைகள்தானே ஆக்கத்தும் அழிவுக்கும் காரணம் !//

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

மனதை தொடுகிறது.மணம் முடிக்க இயலாத சூழலில் வாழும் பெண்மனதை படம் பிடிஹ்துக் காட்டுகிறது கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

meel pathivukku mikka nantri!
kavithai nantru!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //


அட...!
ஐயோ......!!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

இயலாமையுடனும் குற்றவுணர்வுடனும் குறுகுறுக்கும் பெற்றோர், அறிந்தும் அறியாதவள்போல் நடித்து, மண நாடக ஒத்திகையை நாள்தோறும் நடத்திக்கொண்டு கனவில் களித்திருக்கும் மகள்! ஒரு முதிர்கன்னியிருக்கும் வீட்டு நிலையைப் படம்பிடித்துக்காட்டும் வரிகள். தாயையும் தந்தையையும் வர்ணிக்கும் வரிகள் நெகிழ்த்துகின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள் ரமணி சார்.

ஊண்டப்பட்டவுடன், அறிவாளாய்- இவற்றை சற்றே சரிபார்க்கவும்.

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி

முதிர்கன்னியிருக்கும் வீட்டு நிலையைப் படம்பிடித்துக்காட்டும் வரிகள். தாயையும் தந்தையையும் வர்ணிக்கும் வரிகள் நெகிழ்த்துகின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள் ரமணி சார். //

தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
சரிசெய்துவிட்டேன்
வரவுக்கும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

முதிர்கன்னிகள்.... பரிதாபம் தான் ஜி...

முன்னர் படித்த நினைவில்லை....

நல்லதோர் கவிதைக்கு பாராட்டுகள். த.ம. 7

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்

அருமை..

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

முதிர்கன்னிகள்.... பரிதாபம் தான் ஜி.
நல்லதோர் கவிதைக்கு பாராட்டுகள்./

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன்//

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
அருமை.//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கும் ஒரு மனதின் ஏக்கக் கவிதை.

குறையொன்றுமில்லை. said...

நானும் இப்பதான் முதல் முறையா படிக்கிரேன் நல்லா இருக்கு வாழ்த்துகள்

பால கணேஷ் said...

முன்னர் நான் தவறவிட்ட கவிதைகளில் இது ஒன்று- இப்போதுதான் படிக்கிறேன். அருமை. மனதில் நின்றது ஸார்.

sathishsangkavi.blogspot.com said...

மனதை வருடும் வரிகள்...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

இதில் ஒரு பெண் தெரிகிறாளே?

மகேந்திரன் said...

//நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன///

வாழ்வியல் பொருள்கூறும்
அழகிய சொல்லாற்றல் நண்பரே..
மனதின் உணர்வுகளால் உந்தப்பட்ட
ஒரு பெண்மகளின் உணர்வுகளை
படம்பிடித்து காண்பிக்கிறது கவிதை..
அழகு...

அருணா செல்வம் said...

எப்படி ஐயா....
ஊமை கண்ட கனவுகளையும்
உங்களால் கவியில் சொல்லமுடிகிறது...!!

வணங்குகிறேன் ரமணி ஐயா.

சசிகலா said...

முதிர் கன்னியின் உள்ளக் குமுறளை தங்கள் வரிகளில் நெஞ்சை உருக்குகின்றன.

NKS.ஹாஜா மைதீன் said...

#வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா#

பார்த்தவுடன் மனதில் நின்ற வரிகள்....

MARI The Great said...

///
நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன
///

அருமையான வரிகள் ஐயா! TM 17

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ//

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கும் ஒரு மனதின் ஏக்கக் கவிதை.//

தங்கள் வரவுக்கும் கவித்துவமான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

நல்லா இருக்கு வாழ்த்துகள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //.

அருமை. மனதில் நின்றது ஸார்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சங்கவி //

மனதை வருடும் வரிகள்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

இதில் ஒரு பெண் தெரிகிறாளே?//

தங்கள் வரவுக்கும் கவித்துவமான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

வாழ்வியல் பொருள்கூறும்
அழகிய சொல்லாற்றல் நண்பரே..
மனதின் உணர்வுகளால் உந்தப்பட்ட
ஒரு பெண்மகளின் உணர்வுகளை
படம்பிடித்து காண்பிக்கிறது கவிதை..
அழகு...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

எப்படி ஐயா....
ஊமை கண்ட கனவுகளையும்
உங்களால் கவியில் சொல்லமுடிகிறது...!!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

முதிர் கன்னியின் உள்ளக் குமுறளை தங்கள் வரிகளில் நெஞ்சை உருக்குகின்றன.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

மனதில் நின்ற வரிகள்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

அருமையான வரிகள் ஐயா//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! சிந்தனை அருமை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in

மாதேவி said...

ஏக்கம் படிப்போர் மனங்களிலும்.

Yaathoramani.blogspot.com said...

s suresh //

சிறப்பான கவிதை!
சிந்தனை அருமை!
வாழ்த்துக்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி//

ஏக்கம் படிப்போர் மனங்களிலும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஆத்மா said...

//நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன///

இரண்டையும் சமதளத்தில் வைத்திருப்ப தென்பது மிகவும் கடினமான விடயமாச்சே

ரசித்த கவிதை சார்

ஆத்மா said...

த.மண.18

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

இரண்டையும் சமதளத்தில் வைத்திருப்ப தென்பது மிகவும் கடினமான விடயமாச்சே
ரசித்த கவிதை சார்//


திருமண ஆசையும்
திருமணம் எப்படியும் நடக்கும்
என்கிற நம்பிக்கையும்
சம தளத்தில் இருந்தால்
பிரச்சனையில்லை
நம்பிக்கை குறைகையில்
இதுபோன்ற எண்ணச் சிதறல்கள் ஏற்பட
அதிக வாய்ப்பு என சொல்ல முயன்றுள்ளேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vimalanperali said...

தங்களது படைப்புகள் முழுக்க ஏதோ செய்தி சொல்லிச்செல்வதாகவே உள்ளது.நல்ல் ஆக்கம்.திருமண மண்டபத்தையும்,வாழ்வின் நிகழ்வுகளையும் முடிச்சுப்போட்டிருக்கிற விதம் அருமை/நன்றி வணக்கம்.

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்களது படைப்புகள் முழுக்க ஏதோ செய்தி சொல்லிச்செல்வதாகவே உள்ளது.நல்ல் ஆக்கம்.திருமண மண்டபத்தையும்,வாழ்வின் நிகழ்வுகளையும் முடிச்சுப்போட்டிருக்கிற விதம் அருமை//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ganpat said...

ரமணி ஸார்,
உங்களிடம் நான் வியப்பது இதைத்தான்.
நாங்கள் ஒரு பதிவைபடித்து அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள் அதைவிட அதிக தாக்கம் கொண்ட அடுத்தபதிவை நீங்கள் பரிமாறிவிடுகிறீர்கள்..
இந்த முதிர்கன்னி "நாகரீகம் கடந்த கற்பனை" என தன் எண்ணத்தை கருதுவது உண்மையில் தாரத்துடன் பொருளை இணைத்திருக்கும் இந்த சமுதாயத்தின் அநாகரீகத்தையே சாடுவது போல அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.

NAAN said...

அருமை........

அம்பாளடியாள் said...

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அரி வாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா

அருமையான சிந்தனை!!!!......வாழ்த்துக்கள்
ஐயா .

சிகரம் பாரதி said...

#நாங்கள் ஒரு பதிவைபடித்து அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள் அதைவிட அதிக தாக்கம் கொண்ட அடுத்தபதிவை நீங்கள் பரிமாறிவிடுகிறீர்கள்..#
உண்மை. அருமையான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

Ganpat said...

ரமணி ஸார்,
உங்களிடம் நான் வியப்பது இதைத்தான்.
நாங்கள் ஒரு பதிவைபடித்து அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள் அதைவிட அதிக தாக்கம் கொண்ட அடுத்தபதிவை நீங்கள் பரிமாறிவிடுகிறீர்கள்..//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வல்லத்தான்

அருமை......//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

sigaram bharathi //

அருமையான கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

சில அடையாளங்கள் புரிகின்றன. என்னை போலவும் இருக்கிறது :)

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை//

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ananthu said...

இதுவரை நான் படித்த உங்கள் கவிதைகளிலேயே மிக சிறப்பானது இது என்று அடித்துச் சொல்வேன் ...

Yaathoramani.blogspot.com said...

ananthu //

இதுவரை நான் படித்த உங்கள் கவிதைகளிலேயே மிக சிறப்பானது இது என்று அடித்துச் சொல்வேன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

மிகவும் பிடித்துப்போன பதிவு Sir! உள்ளத்தின் உணர்வுகளை திருத்தமாக பதித்தது போல் முதிர்க்கன்னியின் வாயிலில் அருமை Sir!

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment