Thursday, August 9, 2012

சென்னையில் சங்கமிப்போமாக புதிய சரித்திரம் படைப்போமாக


http://2.bp.blogspot.com/-EpCbfB7BhDk/UCK7CjAXehI/AAAAAAAABlU/wW_hZ-BY-to/s1600/chennai+bloggers+meet+invitation.jpg

 நூறு குடம் நீரூற்றி ஒரு பூ பூத்தது
என்பதைப்போல பல்வேறு பதிவுலக நண்பர்களின்
எண்ணத்திலானும் முயற்சியினாலும்
சென்னைப்பதிவர்களின் அதிதீவீர அயராத
முயற்சியினாலும் 26/08/2012 இல்
தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா
சென்னையில் சாத்தியமாகி இருக்கிறது

தவறாது கல்ந்து கொள்வதன் மூலமும்
நமது சீரிய கருத்தைப் பதிவு செய்வதுடன்
நம்மை முழுமையாக
இணைத்துக்கொள்வதன் மூலமும்
அர்பணித்துக் கொள்வதன் மூலமும்
இந்த பதிவர் சந்திப்பு ஒரு புதிய சகாப்தத்தின்
துவக்கமாக இருக்கச் செய்வோமாக

எழுத்துக்கள் மூலம் நல்லெண்ணெங்களைப்
புரிந்துகொண்டு தொடர்ந்து தினமும்
 தொடர்பில் இருக்கிற நாம்
முகம்பார்த்து சிரித்து
மன்ம் திறந்து பேசி
இன்னும் நெருக்கமாக நிச்சயம் இந்தச்
சந்திப்பு உதவும் என உணர்ந்து தவறாது
சென்னையில் சங்கமிப்போமாக
புதிய சரித்திரம் படைப்போமாக

வாழ்த்துக்களுடனும்
தங்களை எதிர்பார்த்தும்


அன்புடன்
ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

37 comments:

சம்பத்குமார் said...

சந்திப்பு இனியதாய் நடந்தேற மனமார்ந்த வாழ்த்துக்கள் ரமணி சார்.

தவிர்க்க முடியாத பணி இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.எனினும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன்
சம்பத்குமார்

அருணா செல்வம் said...

இந்த விழா சிறக்க எங்களின் நல்வாழ்த்துக்கள் ரமணி ஐயா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் .

Admin said...

நிச்சயம் ஐயா..உங்களுடன் ஆவலாக அந்நாளை எதிர் நோக்கியுள்ளேன்..

CS. Mohan Kumar said...

நன்றி சார். கலக்கிடுவோம்.

ஸ்பெஷல் Performance ஆக MGR மாதிரி மேடையில் நடித்து காட்டுவீர்களா?

CS. Mohan Kumar said...

நீங்கள் அப்படி எங்களுக்கு செய்ததை அன்று இருந்த அனைவரும் ரசித்தோம். அது பற்றி எழுதிய போதே அதை பலரும் ரசித்தனர். அதனால் தான் எழுதினேன். தவறாய் எண்ண வேண்டாம்

MANO நாஞ்சில் மனோ said...

மனமார்ந்த வாழ்த்துகள் குரு...!

Anonymous said...

ரமணி சார்.. நீங்கள் எம்.ஜி.ஆர் போல மேடையில் பெர்பார்ம் செய்தே தீர வேண்டும். ப்ளீஸ்!!

MARI The Great said...

சந்திப்பு இனிதே ஈடேற வாழ்துக்கள் சார்!

Anonymous said...

சந்திப்பு இனியதாய் நடந்தேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam.

Avargal Unmaigal said...

இந்த விழா சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்....எங்களை போல உள்ளவர்கள் பார்த்து ரசிக்க வலைதளம் மூலம் வீடியோ ஒளிபரப்பு உண்டா?

Unknown said...

சந்திப்புகள் இனிதாக நடக்க வாழ்த்துக்கள்

Seeni said...

vaazhthukkal ayya!

கீதமஞ்சரி said...

அனைத்துலக தமிழ்ப்பதிவர்களின் திருவிழா வெற்றிகரமாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதன் பின்னணியில் உழைத்த அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...(TM 6)

கரந்தை ஜெயக்குமார் said...

வலைப் பதிவர் சங்கமம் சிறப்பாய் நிகழ்வுற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
'திருவிழா' என்பது யோசிக்க வைக்கிறது.

அப்பாதுரை said...

! சிவகுமார் ! சொல்படி கேட்டால் அதை விடியோ எடுத்து பதிவில் போடவேண்டும் ரமணி சார்.

G.M Balasubramaniam said...

தங்கள் முன்னிலையில் கவியரங்கம். புலவர் இராமானுசம் தலைமை.தென்றலின் கவிதை வெளியீடு. எல்லாம் நலமாக நடந்தேற வேண்டுதல்களும் வாழ்த்துக்களும்.

கோவி.கண்ணன் said...

விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துகள்

குறையொன்றுமில்லை. said...

இதுபோல கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டதில்லே. எழுத்து மூலமே அறிமுகமாகி இருக்கும் பதிவுலக நண்பர்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்கனும்னு நினைச்சுண்டு இருந்தேன். மும்பைலேந்து வந்து கலந்து கொள்ள முடியுமான்னு யோசனையா இருந்துச்சு. எதிலுமே டிக்கட் கிடைக்கலே ஆர், ஏ, ஸி ல தான் கிடைச்சிருக்கு.வரனும்னு நினைச்சாச்சு. வந்துடுவேன்

Athisaya said...

சிற்பாக அமைய வாழ்த்துகிறேன்.

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

அடடா வருவதற்க்கு ஆவலாக இருக்கு ஆனால் வரயியலாச் சூழ்நிலையாக இருப்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. அனைத்தும் சிறப்புடன் நடக்க மனமார்ந்த வாழ்த்துகள்

Thozhirkalam Channel said...

சென்னையில் சந்திப்போம்...

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in

பால கணேஷ் said...

சற்று தாமதமாக இப்போதுதான் இப்பதிவைக் கவனித்தேன். உஙகளின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன் நானும. எழுத்தில் பார்த்த அனைவரையும் நேரில் சந்திக்கும ஆசை மட்டற்றதாக இருக்கிறது. நன்றி.

ராமலக்ஷ்மி said...

சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

சசிகலா said...

அனைவரையும் சந்திக்கும் ஆவலில் நானும் வருக வருக.

அமர பாரதி said...

சென்னைப் பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

சந்திப்போம்;காத்திருக்கிறேன்

ananthu said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_11.html

ராஜி said...

விழாவில் சந்திப்போம் ஐயா.

துரைடேனியல் said...

@ அன்பு ரமணி சார்!

போலீஸ் உடற்தகுதி தேர்வுகள் இம்மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருப்பதால் நானும் அதில் Nodal Officer ஆக தூத்துக்குடியில் பணியாற்ற வேண்டியிருக்கிறது. எனது Department அலுவல் நிமித்தம் வராமல் போய்விட்டது. என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சகோ. கணேஷ், சகோ. ராஜி ஆகியோர் விழாவிற்கு அழைத்தனர். அவர்களுக்கும் நன்றி. மற்றபடி விழா சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்தம் ஒற்றுமை!

Unknown said...

இனிதே விழா சிறக்க வாழ்த்துக்கள்!

Unknown said...

கலந்து கொள்ள இயலாவிட்டாலும் ,அந்த விழாவின் நோக்கம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் .

சமுதாய முழக்கம்

வெங்கட் நாகராஜ் said...

விழா திருவிழாவாக இனிதே நடந்தேற வாழ்த்துகள்.....

என்னால் வர இயலவில்லையே என்ற ஏக்கத்தோடு...

த.ம. 12

Post a Comment