Wednesday, November 20, 2013

தமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும்

சங்கர பாஷ்யத்திற்கு அர்த்தம் அத்துப்படி
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்

அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்

சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்

போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்

தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?

அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர் 
என்றாவது முதலாவதாக வரச்   சாத்தியம் உண்டா ?

தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி

அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?

தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
 திரட்டிகளைத்  தவிர தனிப்பதிவர்கள்  என்றேனும்
வெற்றிபெற  வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
   
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

42 comments:

அம்பாளடியாள் said...

நானும் உங்கள் கேள்விக்குப் பினால் நின்று விடுகின்றேன் ஐயா :))))))
(அம்பாளடியாள் நல்ல பிள்ளை சமத்து :)))) ம்ம்ம்ம்ம்ம் )

கார்த்திக் சரவணன் said...

நீங்கள் சொல்வது சரிதான் ஐயா.. முதல் இரண்டு இடங்களில் இருப்பவை செய்தி ஊடகங்கள்... அவை தனி நபரால் நடத்தப்படும் தளம் அல்ல... வலைச்சரம் இருந்துவிட்டுப் போகட்டுமே.... த.ம.2

அம்பாளடியாள் said...

உங்கள் விருப்பம் போல் நல்ல பதில் கிடைத்திட என்னால் முடிந்த உதவி முதலாளாய் வந்து விளக்கு ஏற்றி வச்சிற்றேன் :)))

Anonymous said...

வணக்கம்
ஐயா
அருமையான கேள்வி கேட்டு பதிவு வெளியிட்டமைக்கு முதலில் வாழ்த்துக்கள் ஐயா
இந்தப் பிரச்சினை பல நாட்களாக பலரிடம் உள்ளது….இன்று வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளிர்கள்…..தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் போன்றவைதான் முதல் இடத்தில் உள்ளது..உங்களின் வினாவுக்கு விடை கிடைக்கும் வரை நானும் உங்கள் பக்கம்..ஐயா…..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

RajalakshmiParamasivam said...

பதிவர்கள் சார்பில் ஆதங்கத்தை வெளியிட்டதற்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

செய்திப பக்கங்களுக்கு தரவரிசையில் சேர்ப்பதில் எனக்கும் உன்பாடு இல்லைதான். தனி நபர் கூட தொடர்ந்து செய்திகளை வெளியிட்டால் முன்வரிசைக்கு வந்து விடுவார்கள். செய்திகள் வெளியிடும் வலைப பக்கங்களை தமிழ் மணம் தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கலாம். தானியங்கியாக செயல் படுவதால் இதை தவிர்ப்பது கடினம். அப்ஜ்கஷன் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் மணத்திற்கு தெரிவித்தால் மாறுதல் செய்யும் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

ரமணி சார்,

எதுக்கு இந்த குழப்பம்? இத்தினி நாளா வராதக்குழப்பம் இப்ப எப்பூடி?


//அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர்
என்றாவது முதலாவதாக வரச் சாத்தியம் உண்டா ?
//

கொஞ்ச நாள் முன்னர் ஒரு தனி வலைப்பதிவர் தான் ஓர் ஆண்டாக தமிழ்மணத்தில் "முதல் இடத்தில்" இருப்பதாக சொல்லி நன்றி தெரிவித்து பதிவெல்லாம் போட்டிருந்தார்,(நீங்களும் வழக்கம் போல மொய் செய்திருப்பீர்கள் ,இப்போ மறந்துட்டிங்களோ?) எனவே தமிழ்மண ரேங்க்கிங் நீங்கள் சொல்வது போல குழுப்பதிவுகளுக்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

தமிழ்மணம் ரேங்கிங் பொறுத்தவரையில் "டோட்டல்"ஹிட்ஸ் தான் முதன்மையாக கணக்கில் எடுக்கப்படுகிறது, தினம் ஒரு பதிவு போட்டு சராசரியாக 100 ஹிட்ஸ் வாங்கினால் கூட அந்த மாதத்தின் முதலிடம் புடிக்கலாம்,அப்படியே ஆண்டுக்கும்.

எனவே தினம் ஒரு பதிவுனு போட்டுப்பாருங்க ,நீங்களும் முதலிடத்துக்கு வரலாம்னு நினைக்கிறேன் :-))

Anonymous said...

தமிழ்மணத்தின் அண்மை காலப் போக்குகள் சரியாக பிடிபடவில்லை. விளம்பரதாரர்களின் பதிவுகளை வரிசைப்படுத்தல்களில் கொண்டு வருவதும், அதிகம் வாசித்தோர் பகுதியில் காட்டுவதும் முறையற்ற ஒன்றாகும். அத்தோடு தமிழ்மணத்தின் கொள்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. சாதியம் பேசும் அருள் மதவாதம் கக்கும் வாஞ்சூர், ஜோதிடம், புராணங்கள், ஆபாசங்கள், குழந்தைகள் வாசிக்க கூடாத பதிவுகள் என பலவற்றையும் திரட்டுகின்றது. அத்தோடு கடந்த மாதம் முதல் புதிய வலைப்பதிவு சேர்க்கைகளையும் நிறுத்திவிட்டது. ஒன்றுமே புரியவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் error என்று காட்டுகின்றது. :( யாராவது இதை எல்லாம் அவர்கள் காதில் போடுங்களேன்.

Unknown said...

சரியான கேள்விதான் !
வவ்வால் அவர்களின் கூற்றுப் படி பார்த்தால் என் ஜோக்காளி வலைப்பூ தான் முதல் இடத்திற்கு வந்து இருக்க வேண்டும் !தமிழ் மண நிர்வாகிகள் வேறு ஏதோ ஒரு கம்ப சூத்திரம் வைத்துக் கொண்டு இருப்பதாக நினைக்கிறேன் !
த.ம +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கே குழப்பமா? !!!!!

குழப்பம் தீர வாழ்த்துகள்.

அருணா செல்வம் said...

என்னவாக இருக்கும்....?
நானும் யோசிக்கிறேன் இரமணி ஐயா.

Avargal Unmaigal said...

@வவ்வால்

///தமிழ்மணம் ரேங்கிங் பொறுத்தவரையில் "டோட்டல்"ஹிட்ஸ் தான் முதன்மையாக கணக்கில் எடுக்கப்படுகிறது, தினம் ஒரு பதிவு போட்டு சராசரியாக 100 ஹிட்ஸ் வாங்கினால் கூட அந்த மாதத்தின் முதலிடம் புடிக்கலாம்,அப்படியே ஆண்டுக்கும்.///

எனது மட்டமான மொக்கை பதிவுக்கு வரும் ஹிட்ட் குறைந்தது 500 க்கும் மேல் அது வெகு சில பதிவு மட்டுமே. அது போல பதிவுகளுக்கு சராசரி கிடைக்கும் ஹிட் 1200 க்கும் மேல் பல பதிவுகள் 3000 4000 5000 ஹிட்டுக்கள் கூட கிடைத்திருக்கின்றன. நான் கடந்த நவம்பர் 15 ல் எனது தளம் மில்லியன் ஹிட் பெற்றது என்று பதிவு இட்டு இருந்தேன் இப்போது சென்று பாருங்கள் எவ்வளவு ஹிட் ( பேஸ்வ்யூ ) கிடைத்திருக்கிறது என்று. நீங்கள் சொல்லவதுபடி பார்த்தால் நானும் நம்பர் ஒன்றாகத்தான் வந்திருக்க வேண்டும் அல்லவா?

Avargal Unmaigal said...

@ரமணி சார்....


உங்கள் பதிவுகள் மக்கள் மனதில் முதல் இடத்தை பெற்று இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் நீங்களும் பதிவர்களிடம் முதல்மை இடத்தை பெற்று இருக்கிறீர்கள். அதற்காக சந்தோஷப்படுங்கள் சார்.

நீங்கள் தமிழ் மணத்தில் முதலில் வருகிறீரகளா அல்லது இறுதியில் வருகீறிர்களா என்பது முக்கியமல்ல நீங்கள் எங்கள் மனத்தில் என்றும் முதல் இடத்தில்தான் இருக்கிறீர்கள் அதுதான் இங்கு கவனிக்கபட வேண்டியது.

வாழ்த்துகள் & பாராட்டுக்கள் சார்


வாழ்க வளமுடன்

ப.கந்தசாமி said...

தமிழ்மணம் ஒழிக!

தனிமரம் said...

எனக்கும் புரியவில்லை நானும் உங்கள் பின்னே ஐயா.:)))

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் கேள்வி நியாயமானதுதான். எல்லோருக்குமே இந்த குழப்பம் உண்டு வலைப் பதிவர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்று இருக்கும், திரட்டிகளில் முதன்மையானது தமிழ்மணம்தான் என்பதில் ஐயமில்லை.

தமிழ்மணம் தளத்தின் நிர்வாகக்குழு பங்கெடுக்கும் இந்த வலைப்பதிவு பயனர்களுக்கு அறிவிப்புகளைக் கொண்டுசெல்லவும், எழும் கேள்விகளுக்கு விடைகாணவும் பயன்படும் என்று ஒரு பதிவு வைத்து இருக்கிறார்கள்.

தமிழ்மணம் அறிவிப்புகள் http://blog.thamizmanam.com

விடைதான் இல்லை. வலைபதிவர்களே பெரும்பாலும் வாசகர்களாக இருந்த போதிலும் அவர்கள் ஓட்டு போடுவதில்லை என்பதும் ஒரு காரணம். வாசகர் பரிந்துரை இடத்தில் வர ஏழு ஓட்டுகள் தேவை. என்னுடைய பதிவுகள் பல கருத்துரைகள் அதிகம் இருந்தாலும், ஓட்டு எண்ணிக்கையில் ஆறு மட்டுமே பெற்று இருக்கும். இந்த வலைப்பூவை வலைப் பதிவர்கள் எல்லோரும் பார்த்து இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

இத்தனை கருத்த்துரைகள் எழுதியவர்கள் தங்களின் வாக்கையும் அளித்து இருக்கலாம். உங்களின் இந்த பதிவிற்கு 7 ஆவது ஓட்டு அளித்துள்ளேன். இனிமேல்தான் வாசகர் பரிந்துரை பகுதிக்கு வரும்.



aavee said...

ஐயா தமிழ்மணம் முதலிடம் வேண்டாம், தமிழர்'மனம்' முதலிடம் உள்ளதே உங்களுக்கு..

Unknown said...

சீனியர் பதிவருக்கே இப்புடிக்கான்னா... நம்பள மாறி அப்ப்ரசண்டுக நெலமே...?

வெங்கட் நாகராஜ் said...

புரியாத விஷயம் தான்... தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி... அதிகமாய் குழம்புவதில்லை.

தமிழ்மணத்தில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் கவிதைகளும் பகிர்வுகளும் வாசிக்கும் அனைவரின் இதயத்தில் முதல் இடத்தினை பிடித்து வைத்திருக்கிறதே ரமணி ஜி!..... அதனால் DON'T WORRY BE HAPPY!

G.M Balasubramaniam said...

எண்ணங்களைக் கடத்தினோமா பதிவு எழுதினோமா. என்பது தவிர வேறெதையும் கவனிப்பதில்லை. தமிழ்மணத்தில் இணைத்ததே நாலு பேர் படிக்க ஒரு வாய்ப்பு என்பதால்தான். மற்றபடி ஹிட்ஸ் ரேங்க் என்பதெல்லாம் நினைப்பதில்லை. முதல் பத்தில் வருகிறதே உங்கள் வலைப்பூ..!

Unknown said...

ஐயா .ஜி. எம் பாலசுப்பிரமணியம் அவர்களின் கருத்தே! என்கருத்து! பதிவர்கள் பெரும் பாலும் தமிழ் மணத் திரட்டியை பார்பதால் நானும் இணைத்தேன் ! ஆனால் , அதில் வரும் நம்முடைய
பதிவுகள் விரைந்து மறைந்து விடுவதால், மதிப்பெண் 7 வாங்கினால் தான் ஒருநாளாவது பலரும், படிக்க நிற்கும் என்பதால் எத்தனையோ தில்லு முல்லு வேலைகள் நடப்பதை நான் அறிவேன்! ! இளங்கோ அவர்கள் சொல்வதும் உண்மைதான் !மறுமொழியைவிட மதிப்பெண் அதிகமாக சில பதிவுகளில் இருக்கும் ! மறுமொழி அதிகமிருக்கும் மதிப்பெண் போடுவதில்லை! என்னைப் பொறுத்தவரை நான் படிக்கும் எந்த பதிவுக்கும் அவர்களை ஊக்கப் படுத்த மறுமொழியும் மதிப்பெண்ணும் போடாமல் இருந்ததில்லை !

திண்டுக்கல் தனபாலன் said...

என்னைப் பொருத்தவரை இதுவும் ஒரு திரட்டியே...

வவ்வால் said...

ஆஹா ஓட்டு,ஹிட்ஸ், முதலிடம்னு இத்தனைப்பேருக்கு கவலை இருக்கா அவ்வ்

# அவர்கள் உண்மைகள்,

ஒரு உதாரணத்துக்கு "100" என சொன்னால் நான் 500.1000னு ஹிட்ஸ் வாங்கினேனு வந்துடுங்க, சராசரியாக நல்ல ஹிட்ஸ் வாங்குவது என எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆமாம் 2 மாசம் முன்ன வரையில் ஒரு தனிப்பதிவர் தான் முதலிடத்தில் இருந்தார், இப்பவும் அவர் பதிவில் "நெம்பர் ஒன் லோகோ" இருக்கு, எனவே நீங்க எல்லாம் சொல்வது போல ரேங்க்கிங் குழப்பம் இருக்குமானால், குழுக்களாக இயங்கும் பதிவு தான் முதலிடம் வரும் என்றால் அப்பதிவருக்கு எப்படி சாத்தியமாகி இருக்கும்.
எனவே தனிப்பதிவர் அதிகம் பதிவுப்போட்டு அதிக ஹிட்ஸ் வாங்கினால் முதலிடம் வரும்,ஆனால் அதை வச்சுக்கிட்டு ஒரு டீ கூட வாங்கிக்குடிக்க முடியாது என்பதால் , பதிவு எழுதினமா,நாலு பேரு படிச்சா சரிதான்னு "கூலாக" போகலாம்.

தமிழ்மணத்தில் முதலிடம் வாங்க துடிப்போருக்கான குறிப்பு:
அதிகம் ஹிட்ஸ் கிடைக்க . தினசரி பரபரப்பான தலைப்பில் பதிவு போடுங்க, ஓட்டு வேண்டுமானால் "கள்ள ஓட்டு போடும் திறன்வாய்ந்த "புரஃபெஷனல்ஸ்" இருக்காங்க பிரண்டு புடிச்சு ஓட்டுப்போட சொல்லிடுங்க, அப்புறம் நீங்க தான் "தமிழ் மணத்தின் நெம்பர்-1"

ஹி..ஹி இத்தினி நாளா கள்ள ஓட்டு போட்டு சிலர் மகுடத்தில் இருந்தப்போலாம் யாரும் வாயே தொறக்கலை, இப்போ மட்டும் தமிழ் மண ரேங்கில் குழப்பமானு கிளம்பிட வேண்டியது அவ்வ்!

கே. பி. ஜனா... said...

படிப்பவர் மனதில் கிடைக்கும் இடமே முக்கியம், இல்லையா? உங்கள் பதிவுகள் எங்கள் மனதில் எப்போதுமே தனியிடம் பெறுகின்றன!

இராஜ முகுந்தன் said...

ஐயா இதுக்கெல்லாம் எதுக்கு கவலை. பலர் சொன்னதுபோல் உங்கள் பதிவுகள் பெஸ்ட்.
கீதை சொன்ன கண்ணனை நினையுங்கோ.

சசிகலா said...

அவர்கள் உண்மைகள் சொல்வது போல தங்கள் எழுத்து எங்கள் அனைவரின் மனதிலும் முதலிடம் பிடித்திருக்கிறது பின்பு ஏன் இதெல்லாம் ?

உஷா அன்பரசு said...

.வவ்வால் அவர்கள் சொல்லியிருப்பது சரிதான் என்று நினைக்கிறேன். நான் நிறைய பதிவுகள் தொடர்ந்து எழுதிய போதும்... அதே போல் நிறைய பேரின் பதிவுகளுக்கு கருத்து போட்டு ...ஓட்டு போட்ட போது எனக்கும் அந்த மொய் கிடைத்தது.. குறுகிய காலத்தில் என் பக்கம் வேகமாக 16 வது இடம் வரை வந்தது. அதற்கு பிறகு நேர நெருக்கடியில் நிறைய பேரின் வலைப்பதிவிற்கு போகமுடியவில்லை... அதனால் என் பதிவுகளுக்கும் கருத்து குறைந்தது... என் பக்கம் 16 வது இடம் வரை வந்த போது ஆச்சரியமாக இருந்தது....அடிக்கடி பதிவுகள் போடாத போது 16 லிருந்து பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தது...பிறகுதான் யோசித்தேன் பதிவில் இடைவெளி வரும் போது வரிசை மாறி விடுகிறது..என்று ! தொடர்ந்து முன்னனிக்கு செல்ல வேண்டும் என்று பணிகளுக்கிடையே நிறைய பதிவு போட மெனக்கெடுவது ஒன்றும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். பிறகு வேற வேலை இல்லை... இதுல போய் என்ன இருக்கு என்று அந்த ரேங்க் பட்டியை தூக்கி போட்டு விட்டேன்...! தினசரி பதிவுகள் போடுவதும்.. பார்வையாளர்கள் வருகை, கருத்து, ஓட்டு இவை மட்டுமே முன் வரிசைக்கு இழுத்து செல்கிறது...! இதைபற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.... எழுத்துக்களோடு நம் குடும்பம், கடமை என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது எழுத்துக்களை ரசிப்போம்... அது எங்கிருந்தாலும்... அதேபோல் நேரம் கிடைக்கும் போது எழுத்துக்களை ரசிக்க கொடுப்போம்... ! வாசிப்பு மகிழ்ச்சியான விஷயமாக நினைக்கிறேன்..! " புகழை தேடி நாம் ஓடும்போது நம்மிடம் நிறைய தொலைந்து போயிருக்கும்... புகழ் நம்மை தேடி வரும் போது நம்மிடம் நிறைய கொடுத்து செல்லும்.." - இதை எப்போதும் கவனத்தில் கொண்டு இருக்கிறேன். ரமணி சார் குழப்பம் வேண்டாம்...மகிழ்ச்சியா இருங்க... உங்க எழுத்துக்கள் வாசகர்கள் மனதில் நீங்காத இடத்துல இருக்கு!

டிபிஆர்.ஜோசப் said...

இந்த கேள்வி இன்று நேற்றல்ல தமிழ்மணம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே கேட்கப்பட்டு வருகிறது. அதை சிஸ்டமிக் (systemic) தவறு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று, முன்பு போல் கூடி கும்மியடிப்பது இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தரமற்ற பதிவுகளுக்கு ஓட்டு போட்டு தினமும் சூடான பதிவுகள் பட்டியலில் ஒரு சில பதிவர்களுடைய மொக்கை பதிவுகள் தினமும் இடம் பிடித்துக்கொண்டிருந்த காலமும் ஒன்று இருந்தது.

மதுரை சொக்கன் said...

விட்டுத் தள்ளுங்கள் ஐயா!நமது ஆத்ம திருப்திக்காக எழுதுவோம். யாராவது படிக்க வேண்டும்.நாலு பேராவது படிக்க மாட்டார்களா? அது போதும்.!இந்த ரேங்கெல்லாம் எப்படியோ போகட்டும்!

இளமதி said...

ஐயா... இதில் நான் இணைந்துள்ளது ஏனையவர்களை ஊக்குவித்தற்பொருட்டு வாக்களிப்பிற்காக மட்டுமே!

இது இல்லாமலே நீங்கள் அனைவரின் உள்ளத்திலும் உயர்வான பதிவராக மிக உன்னதமான இடத்தில் இருக்கின்றீர்கள்... இருப்பீர்கள்!

வாழ்த்துக்கள் ஐயா!

ADHI VENKAT said...

குழப்பமோ குழப்பம் தான்....:))

கவியாழி said...

ஆகா பூனைக்கு மணி கட்டும் தங்களின் வாதம் சரியே நானும் உங்கள் பின்னால் நிற்க்கிறேன்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

எப்படித் தரவரிசைப் படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை ஐயா..ஆனால் உங்கள் பதிவுகள் பலரும் படித்து ரசிக்கும் தரமானவை என்பதில் ஐயமில்லை..உங்கள் கேள்விக்கு சரியான விடை கிடைக்க வாழ்த்துகள்!

Avargal Unmaigal said...

வவ்வால்

எனக்கு தமிழ்மணத்தில் முதலிடம் வரவில்லை என்று குறைபடவில்லை. அதில் இருக்கும் தவறுகளுக்காகதான் முன்பு சொல்லிய கருத்து. எனக்கு அதிக வரவு வருவது கூகுல்,இண்டலியில் இருந்து மட்டுமே..தமிழ் மணம் 3 வது இடம்தான்...

தனபால் சொல்வது போல தமிழ்மணம் ஒரு திரட்டிதான்...


தமிழ்மணத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளை பற்றியும் ஒரு சில நடிகர்கல் பற்றியும் எழுதினால் அந்த பதிவாளர்களின் அந்த பதிவுகளையோ அல்லது பதிவர்களையோ ஒரங்கட்டி விடுவார்கள் மெதுவாக. தமிழ்மணம் பொதுக் கம்பெனி அல்ல ஒரு சில தமிழர்களை கொண்டு நடத்தப்படுவதுவே.

Anonymous said...

தமிழ்மணம் என்பது புண்ணாக்கு, உங்களுக்கு 50 ஓட்டு வேண்டுமென்றாலும் உடனே கிடைக்கும்
வேணுமா ஜி

வவ்வால் said...

அவர்கள் உண்மைகள்,

உங்களுக்கு ஆசை இல்லை என்றால் இத்தனை பரபரப்பு ஏன் :-))

ஏற்கனவே பதில் சொல்லப்பட்டதற்கு நான் சொன்னது,

// 2 மாசம் முன்ன வரையில் ஒரு தனிப்பதிவர் தான் முதலிடத்தில் இருந்தார், இப்பவும் அவர் பதிவில் "நெம்பர் ஒன் லோகோ" இருக்கு, எனவே நீங்க எல்லாம் சொல்வது போல ரேங்க்கிங் குழப்பம் இருக்குமானால், குழுக்களாக இயங்கும் பதிவு தான் முதலிடம் வரும் என்றால் அப்பதிவருக்கு எப்படி சாத்தியமாகி இருக்கும்.
எனவே தனிப்பதிவர் அதிகம் பதிவுப்போட்டு அதிக ஹிட்ஸ் வாங்கினால் முதலிடம் வரும்,ஆனால் அதை வச்சுக்கிட்டு ஒரு டீ கூட வாங்கிக்குடிக்க முடியாது என்பதால் , பதிவு எழுதினமா,நாலு பேரு படிச்சா சரிதான்னு "கூலாக" போகலாம்.//

இதுக்கு ஆமாம்,இல்லைனு எதாவது பதில சொல்லுங்க :-))

அதை விட்டுட்டு அடுத்த பட்டியலை வாசிக்கிறிங்க அவ்வ்!

எனவே இப்பதிவில் சொல்லப்பட்டதற்கு அடிப்படையே இல்லாம போயிடுதே :-))

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா..
எனக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது அய்யா. நான் இணைந்த ஒரு மாதத்தில் 300 ஆவது ரேங்க் எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிய ஆவல் தான். இருப்பினும் அதற்கல்லவே நமது சிந்தனை, நம் சிந்தனையின் நோக்கம் வெற்றி பெற்றாலே போதும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வவ்வால்ஜி,
நீங்கள் வீடு திரும்பல் பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் இப்போது தினமும் பதிவு போடுவதில்லை அவரது வரிசை 11 க்கு சென்று விட்டது குழுக்களின் பார்வையாளர்களை விட அவரது பார்வையாளர் எண்ணிக்கை அப்போது அதிகம். அதுமட்டும் போதாது. தமிழ் மண ஓட்டுக்கள் பெறவேண்டும் அதோடு மற்றவர்களுக்கும் போடப்படும் ஓட்டுக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மறுமொழிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இவற்றை தவறாதுது பின்பற்றி வந்தததோடு பார்வையாளர் எண்ணிக்கையும் இருந்ததால் முதல் இடத்தில் இருந்தார் . அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட கேபிள் போன்றவர்கள் மற்றவர்களுக்கு கருத்திடுவதில்லை ஒட்டு போடுவதில்லை. பிறருக்கு ஒட்டு போடாததால் அவர்களுக்கு ஓட்டும் குறைவாகவே கிடைக்கிறது.அதனால் தரவரிசையில் முதல் இடத்திற்கு வர முடியவில்ல இதுவரை இந்த முறையை பின்பற்றியவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.மதுரை தமிழனுக்கும் பார்வையாளர் எண்ணிக்கை அதிகம் இருந்தபோதும் பல நாட்களாக அவரது தமிழ்மண ஒட்டுப்பட்டை வேலை செய்யவில்லை. தற்போது வேலை செய்கிறது.கூடிய விரைவில் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது
மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தர வரிசை உயர்த்திக் கொள்ள முடியும் என்று அறிய முடிகிறது
ஆனால் ரமணி சாரின் கேள்வி இந்த நடைமுறைகளை தற்போது முதலிடத்தில் உள்ள வலைபதிவு பின்பற்றாத போதிலும் எப்படி முதல் இடத்திற்கு வந்தது என்பதே!
குழுக்களாக இயங்குவதகும் ஒரு நாளுக்கு ஒரு பதிவு எளிதில் போடமுடியும்.தனிப பதிவர்கள் அப்படி தொடர்ந்து பதிவிடுவது கடினம். ஆனால் அப்படி தொடர்ந்து பதிவுட்பவர்கள் முன்னிளைக்குவந்து விடுகிரார்கள். தற்போது காணாமல் கனவுகளும் முன்னிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

வவ்வால் said...

முரளி சார்,

// ரமணி சாரின் கேள்வி இந்த நடைமுறைகளை தற்போது முதலிடத்தில் உள்ள வலைபதிவு பின்பற்றாத போதிலும் எப்படி முதல் இடத்திற்கு வந்தது என்பதே!//

அது எப்படி அவ்ளோ சரியா சொல்லுறிங்க அவ்வ்!

மேலும் மேற்கண்டவாறு பதிவில் எங்கேனும் சொல்லி இருக்கா? அதான் குறைப்பாடு எனில் அதனை நேரடியாக சொல்லி இருக்கலாமே?

பதிவில் சொல்லி இருப்பது தனிநபர் எக்காலத்திலும் முதலிடம் வரமுடியாது என்று தான்.


சாருக்கு பதிவுல என்ன எழுதி இருக்குனு சரியா கண்ணுக்கு தெரியலை ,போல, கீழ்க்கண்டது தான் சொல்லி இருக்கு :-))

//அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர்
என்றாவது முதலாவதாக வரச் சாத்தியம் உண்டா ?//

//இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
திரட்டிகளைத் தவிர தனிப்பதிவர்கள் என்றேனும்
வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை//.

தனிநபருக்கு வாய்ப்பு இருந்தது ,இருக்கிறது என்பதை சொல்லியாச்சு.

நீங்களும் வாய்ப்பு இருக்குனு தான் சொல்லுறிங்க,அப்புறம் என்ன?

இப்பவும் கொஞ்சம் மெனக்கெட்டு பதிவ கட்டிப்புடிச்சுக்கிட்டு யாராவது வேலை செய்தால் முதலிடத்துக்கு வரலாம், ஆனால் அது சிங்கிள் டீக்கு கூட உதவாது :-))

# இந்த குழுப்பதிவுகள் எல்லாம் இப்பத்தான் ஆரம்பிச்சாங்களா என்ன ,ரொம்ப நாளாவே இருந்துச்சு,அப்பவும் தனிப்பதிவர்கள் வேலைமெனக்கெட்டு "உழைச்சு" முதலிடம் வந்திருக்காங்க, எனவே இப்பவும் வேலைமெனக்கெட்டு வெட்டியா உழைச்சால் திரட்டிகளில் முதலிடம் புடிக்கலாம் :-))

நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை, எத்தினியோ பேர் திரட்டிக்கு வெளியில் தான் இருக்காங்க.

குருப்பு சேர்த்துக்கிட்டு கும்மி அடிச்சு "பிராபல்ய"பதிவர்னு ஆகணும் நினைக்கிறவங்க தான் திரட்டிகளின் தரவரிசைக்கு கவலைப்படுறாங்க அவ்வ்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஐயா, தங்களின் ஆதங்கம் புரிகிறது. கவலை வேண்டாம். நாம் நமது மன திருப்திக்காக எழுதுவோம். நண்பர்கள் படிக்கிறார்கள் .மகிழ்ச்சியடைவோம். படிக்கின்ற வாசக நண்பர்கள் முடிவு செய்யட்டும் தரத்தினை, தர வரிசையினை.
நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்//
இதை பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதை வைத்தே நானும் சொன்னேன். தற்போது முதலிடத்தில் உள்ள வலைத்தளம் தமிழ் மணத்தின் கட்டண சேவையை பயன் படுத்துகிறது. அதனால் தர வரிசை கணக்கிடும் முறையில் முன்னுரிமை வழங்கவும வாய்ப்பு உள்ளது.
///நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை, எத்தினியோ பேர் திரட்டிக்கு வெளியில் தான் இருக்காங்க//
ஏற்கனவே பிரபலம் அடைந்தவர்கள் திரட்டிகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை எஸ்.ரா,ஜெ,மோ, சாரு போன்ற பத்தரிக்கை பிரபலங்களுக்கு திரட்டிகள் தேவை இல்லை . வலைப பதிவு எழுத ஆரம்பித்து, திரட்டிகளின் உதவி இன்றியோ வேறு உபாயங்களை கையாளாமலோ பிரபலம் அடைவது மிகக் கடினம்.

//நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை,//
பெரும்பாலோர் சொல்வதில்லையே தவிர மனதுக்குள் நினைக்கத் தான் செய்வார்கள். சிலர்க்கு திரட்டிகள் பற்றி தெரிவதில்லை. தெரியாமலேயே சில ஆண்டுகளாக எழுதிவருபவர்களும் உண்டு.

வவ்வால் said...

முரளி சார்,

அம்புட்டு லாஜிக்கா அதை வச்சு தான் சொன்னீர்கள் என்றால், இந்தப்பதிவுக்கு 6 ஆம் இடம் கிடைச்சதும் அதே போல தானா :-))

ஒரு தவறான ரேங்கிங் சிஸ்டம் தவறா யாருக்கோ முதலிடம் கொடுத்திருக்கு என்றால், அதே போல தவறாதான் ஆறாம் இடத்தையும் கொடுத்திருக்கும் என சொல்ல தயாரா? அப்போ மட்டும் உண்மையான மதிப்பீடுகளின் அடிப்படையில்னு நழுவிடுவீங்கலே அவ்வ்!

# // தற்போது முதலிடத்தில் உள்ள வலைத்தளம் தமிழ் மணத்தின் கட்டண சேவையை பயன் படுத்துகிறது. அதனால் தர வரிசை கணக்கிடும் முறையில் முன்னுரிமை வழங்கவும வாய்ப்பு உள்ளது.//

ம்க்கும் அவர்கள் கட்டண சேவையில் ரொம்ப காலமாகத்தான் இருக்காங்க,அப்பொலாம் வேற யாரோ முதலிடம் பிடிக்காமலா போயிட்டாங்க , இப்போ மட்டும் ஏன் இந்த சந்தேகம்?

நான் கேட்டதுக்கு நேரடியாக இது வரையில் பதிலே சொல்லவில்லை, தனிப்பதிவர்கள் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லாத வகையிலா "தமிழ்மணம் ரேங்கிங்" இருக்கு? இது வரையில் தனிப்பதிவர்கள் முதலிடம் பிடிச்சதை எல்லாம் மறந்துவிட்டதேன்?

#//வலைப பதிவு எழுத ஆரம்பித்து, திரட்டிகளின் உதவி இன்றியோ வேறு உபாயங்களை கையாளாமலோ பிரபலம் அடைவது மிகக் கடினம்.//

இது உங்க தனிப்பட்ட அவதானிப்பு ,ஒன்றும் சொல்வதற்கில்லை.

தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளை தாண்டி எதையும் படிக்கும் வழக்கம் இல்லை என நினைக்கிறேன். வெளியில இதை விட பரபரப்பா, நல்லா எழுதுற பிலாக்கர்ஸ் இருக்காங்க.


சரி திரட்டிகளினால் தான் ஒருப்பதிவர் பிரபலம் ஆக முடியும்னு நம்பிக்கைலாம் வச்சிருக்கிங்க, சிலருக்கு திரட்டிலாம் தெரியாம கூட இருக்கும்னு சொல்லுறிங்க, எந்த பதிவர் சந்திப்பிலவாச்சும் திரட்டிகளை பற்றி ஒரு அறிமுக உரை,திரட்டிகளின் சேவைக்கு நன்றினு சொல்லி இருக்காங்களா?

ஹி...ஹி அப்போ மட்டும் திரட்டிகள் எல்லாம் வேண்டாதப்பொருளாகிடுமே அவ்வ்!


# தமிழ்மணத்தில் இன்று 177 பதிவுகள் தான் திரட்டப்பட்டு இருக்கு, இந்த அளவுக்கு ரொம்ப குறைவாக தான் தற்போதெல்லாம் திரட்டப்படுகிறது, அதாவது ஆக்டிவ் பிலாக்கர்ஸ் இன் தமிழ்மணம் அவ்ளோ தான்,(11,000 சொச்சம் பேரு பதிவு செய்துள்ல திரட்டியில்)என்னை கேட்டால் இதெல்லாம் ஒன்னுமே இல்லை, இணைய உலகில் ஒரு தூசு அளவு, அதில போய் எனக்கு ஏன் முதலிடம் வரலை ,அவங்களுக்கு எப்படி வந்துச்சு என சிண்டைப்பிச்சுக்கிட்டு அலையிறவங்கள பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்ய அவ்வ்!


நான் விளக்கிட்டு இருக்க காரணமே ஒன்னுமெ இல்லாத விடயத்தை இப்படி பேசிக்கிட்டு,அதுல வேற என்னமோ மர்மம் இருக்காப்போல ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்காங்களே , கொஞ்சம் தெளிய வைப்போம்னு தான் ,எல்லாம் ஒரு சமூக சேவைதேன் அவ்வ்!

Post a Comment