Saturday, December 21, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

34 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிஞர்(ஐயா)

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

உண்மையின் வடிவம் கவிதையில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா.

த.ம 3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

நல்லதொரு நேர்மறைச் சிந்தனை. அருமை.

இளமதி said...

காலத்தில் செய்யும் கடமை அழியாது
ஞாலத்தைக் காக்கும் நிலைத்து!

மிக அருமையான மாற்றுச் சிந்தனை ஐயா!

இப்படி உங்களைப் போன்று நினைத்திட்டால்
என்றோ எல்லோரும் எவ்வளவோ சாதித்திருப்போம்!

நல்ல கவிதை! மனதில் நிலைத்து நிற்கும்!

வாழ்த்துக்கள் ஐயா!

த ம.4

தி.தமிழ் இளங்கோ said...

உலகை பாழ்படுத்தியவர்கள், உறவுகளை இழந்தவர்கள்,
முன்னேற்றதை தொலைத்தவர்கள்,சமூகத்தை கெடுத்தவர்கள் என்று ஒரே சாடல்! புத்தாண்டில் இவையில்லாது இருக்க

// இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம் //

என்று வாழ்த்துக்கள்! சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்!


ADHI VENKAT said...

//இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை//

அருமையான வரிகள்..த.ம 6

கவியாழி said...

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை// தன்னம்பிக்கை வரிகள் இதைவிடச் சிறந்த வாக்கியம் இருக்க முடியாது

Avargal Unmaigal said...

tha.ma 8 எல்லோரும் பழைய ஆண்டிலே இன்னும் இருக்கும் போது நீங்கள்தான் புத்தாண்டில் முதலில் நுழைந்து தீர்மானத்தை அழகாக நிறைவேற்றி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு பாராட்டு & வாழ்த்துக்கள்....

Avargal Unmaigal said...

இந்த ஆண்டில் இன்னும் பதிவு வருமா அல்லது இந்தாண்டுக்கு லீவு விட்டுடிங்களா?

vimalanperali said...

கூடாததை ச்செய்தவர்களின் பாடு வெகு சிரமாகிப்போய்விட்டகாலத்தில் அவர்கள் கவனிக்கப்படாமல் இருக்கவே இருத்திவைக்கப்படுகிறார்கள்.எதிர்மறைக்கருத்துக்களும்,எழுத்தும்,செய்கைகளும்,பேச்சுக்களும் இச்சமூகத்திற்கு உவப்பானவையாய் இருந்தது இல்லைதான் என்றுமே/புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.2014 ல் சிறப்போம் நிறைய எழுதுவோம்,பேசுவோம் பகிர்ந்து கொள்வோம் பயணிப்போம் என்கிற நம்பிக்கையுடன்,,,,,,,,/

vimalanperali said...

tha,ma 9

Unknown said...

தீயதை தேடிச் செல்கின்றோம் ,நல்லதை உங்கள் மூலமாய் பெறுகின்றோம் !புத்தாண்டில் புது ஒளி பெறுவோம் !
+1

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!

Unknown said...

மிக அருமையான சிந்தனை ஐயா...!
த.ம. +1

Iniya said...

அருமையான சிந்தனை ஆழ்ந்த கருத்துகளை எவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டீர்கள்.

தீயவற்றை செய்து கெடுவதை விட
நல்லன செய்யாது கெடுவது நன்றன்று
என்று சொன்னது நன்றே

பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

Anonymous said...

''..இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை...
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம் ..'''
மிக அருமை. புத்தாண்டில் ஒளி பெறுவோம் !
Vetha.Elangathilakam

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் ரமணி ஐயா .பிறக்கப் போகும் புத்தாண்டு
ஒளிமயமாகட்டும் .

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு பத்தியும் ஆம் ஆம் என்று சொல்ல வைக்கிறது. பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

எப்படி இப்படி அருமையான சிந்தனைகள் கவிதயாக வெளிவந்து எல்லோர் மனதிலும் ஒளிஏற்றுகின்றன!!!!இந்த ஒளி வெள்ளம் இன்னும் நல்ல நல்ல நேர்மறைசிந்தனைகளை விதைத்து "தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம் "

Thulasidharan V Thillaiakathu said...

த.ம.+

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு சமயத்தில் அருமையான கருத்துள்ள கவிதை. பகிர்வுக்கு நன்றி.

த.ம. 15

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
த.ம.16

கோமதி அரசு said...

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம் //
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எழுதக் கூடாததை எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்//

இதற்கு பதிவுலகமே நல்ல எடுத்துக்காட்டு ;)

நீங்கள் ஒருவர் மட்டுமாவது தொடர்ந்து, ஏதாவது எழுதக்கூடியதை மட்டும் எழுதி வாருங்கள். சமூகம் கெட்டு பாதிக்காமல் பிழைத்துப் போகட்டும். ;)

Yarlpavanan said...


"இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்!" என
தங்களுக்கும்
வலைப்பூ உறவுகளுக்கும்
எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

சொல்லிப் போனதை விட சொல்லாமல் போனது உறுத்துகிறது.
நன்று.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 18

உள்ளொளி ஓங்கி உலகு சிறக்கட்டும்
வெள்ளொலி பாப்போல் விளைந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.புத்தாண்டில் முனைவோம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 19

Unknown said...

சொல்லியதில் உள்ள ஒவ்வொன்றும் முத்தே!
சொல்லிச் சென்ற விதமும் சத்தே!
மல்லியென வீசுகின்ற நல்ல மணமே!
மயக்குவது இரமணி யவர் குணமே!

அருணா செல்வம் said...

மிக அருமை

Easwaran said...

//பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்//

உண்மை! உண்மை!

Muthu said...

புத்தாண்டுகேற்ற புதிய சிந்தனை பகிர்வுக்கு நன்றி! மனங்கனிந்த பாராட்டுகள்.

Post a Comment