Friday, April 25, 2014

ஏஜெண்டுகள் தேவை

கம்பெனியின் பெயர் :  

ஆண்டவன் கம்பெனி

கல்வித் தகுதி :  

அது ஒரு பொருட்டில்லை

வயது  :  

அதுவும் ஒரு பொருட்டில்லை


தகுதி :  

பெருந்தன்மையான மனம் மற்றும்
வள்ளல் குணமுடையோர் மட்டும்


வேலையின் தன்மை :
 
தகுதி உடையோருக்குத் தேவையானவைகள்
உங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும்
சேர்க்கவேண்டியவர்களிடம் அதை மிகச்
சரியாகச் சேர்த்துவிடவேண்டும்

தவிர்க்க வேண்டியவர்கள்:

தனது குறைந்தபட்சத் தேவைகள் தவிர்த்து
அதிகம் சேர்க்க விரும்புபவர்கள்

கூடுதல் தகவல் :

கடவுள் நம்பிக்கை ஒரு தகுதி இல்லை
பகுத்தறிவு வாதிகளும் விண்ணப்பிக்கலாம்
தனக்கென ஒதுக்கும் பட்சத்தில் கொடுப்பது நிறுத்தப்படும்
விளக்கங்கள் தரப்படமாட்டாது

தகுதியுடையோருக்கெல்லாம் வாய்ப்பளிக்க
வாய்ப்பு இருப்பதால் தகுதியுடையோர் அனைவரும்
நிச்சயம் விண்ணப்பிக்கலாம்

கம்பெனி நம்பகத்தன்மை குறித்து
விசாரிக்க முகவரி:

கர்ணன்,காம்
பாரி.காம்
எம்.ஜி,ஆர்.காம்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

அவரவர் மனச்சாட்சி

விளம்பர உதவி :

யாதோரமணி,ப்ளாக் ஸ்பாட்.காம்

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

///உங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும்//

அசத்தல் ஐயா... முகவரி அதை விட...!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

கம்பனிக்கு அனுப்ப மாட்டேன் தங்களுக்கு அனுப்புகிறேன்...இப்போ....

நன்றாக உள்ளது ஐயா.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

என்பக்கம் கவிதையாக
எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

த.ம3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

இதற்கு விண்ணப்பிக்க பணம் ஏதும் கட்டணுமா ?மனம் திருந்தினால் போதுமா ?
தம 4

ananthako said...

தேவைகள் குறைத்து என்பது இந்தக்கால ஆஷ்ரமங்கள் சென்றுபாருங்கள்.
மனமே சாட்சியா?

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

தி.தமிழ் இளங்கோ said...

மூடுமந்திரமாக இருக்கிறது. எனக்கு புரியவில்லை.
த.ம - 5

cheena (சீனா) said...

அன்பின் ரமணி - த.ம 6 - சரி சரி ஏதாச்சும் செய்யணும் இல்ல - செய்வோம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

விண்ணப்பிக்கவேண்டும் என்று கூட அவசியமில்லை! நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 8

vimalanperali said...

விண்ணப்பித்துவிட்டால் போகிறது/

கீதமஞ்சரி said...

ஆண்டவன் கம்பெனியில் பணிபுரிய, அவரவர் மனசாட்சிக்கு விண்ணப்பம் அளிக்கவும் விளம்பரம் தேவைப்படும் விநோதம்! அற்புதமான சிந்தனை! பாராட்டுகள் ரமணி சார்.

மகிழ்நிறை said...

already நாங்க எல்லாம்(டீச்சர்) ஏஜண்டுகள் தங்கோ:) சும்மா..நல்ல இருக்கு சார் உங்க விளம்பரம் . அப்புறம் கர்ணன் ,பாரிக்கு, அடுத்தா தலைவரை வைச்சு பொன்மனச்செம்மலின் புகழை குறிப்பிட்ட விதம் அருமை ஆண்டவரே!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான விளம்பரம்

கோமதி அரசு said...

அருமையான சிந்தனை.
வாழ்த்துக்கள்.

Maria Regan Jonse said...

இந்த விளம்பரம் அனைவருக்கும் சென்று சேரவேண்டியது.

கார்த்திக் சரவணன் said...

விசாரிக்க வேண்டியவர்கள் யாரும் இப்போது இல்லையே ஐயா...

G.M Balasubramaniam said...

கீதமஞ்சரி சொன்னதுதான் பதிவின் உட்பொருளோ.?

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாய் ஒரு விளம்பரம்....

கவியாழி said...

முன் அனுபவத்திற்கு முன்னுரிமை உண்டா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

அருணா செல்வம் said...

இரமணி ஐயா....

இதுவரையில் எத்தனை ஏஜன்டுகள் கிடைத்தார்கள்...?

Post a Comment