Tuesday, April 29, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

21 comments:

ஸ்ரீராம். said...

இருக்கலாம். :)))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியான கேள்வி . இவற்றை அதன் இடத்தில் வைக்காமல் தலையில்வைத்துக் கொண்டாடுவதால்தானே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நல்ல சிந்தனை ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

முறையாக பயன்படுத்தினால் சரி...

இராஜராஜேஸ்வரி said...

பொருள் என்பதற்கான பொருள்
அர்த்தமுள்ள விளக்கம்..!

வெங்கட் நாகராஜ் said...

மீள் பதிவாக இருந்தாலும் எப்போதும் பொருத்தமான பதிவு......

Unknown said...

கடைசியில் வச்சீங்களே ஒரு ஆப்பு ,அது சூப்பர் ஆப்பு !
த ம 6

கீதமஞ்சரி said...

அப்படியொரு விழிப்புணர்வின்மையின் விளைவுதான் நம்மை இப்படி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மனம் தொட்டக் கவியும் கருத்தும். பாராட்டுகள் ரமணி சார்.

கோமதி அரசு said...

பொருள் விளங்கியது, பொருள் பொதிந்த அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...


பொருள் பற்றிய தங்கள் அலசலை வரவேற்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

நிறைய அர்த்தங்கள் கொள்ள‌ வைக்கும், நிறைய அர்த்தங்கள் புரிய வைக்கும் அருமையான பதிவு!! நிறைய சிந்திக்கத் தூண்டும் வரிகள்! பொருள்களை பயன்பாடு, புனிதமென்று தரம் பிரித்திருப்பது அழகு!

Anonymous said...

இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நன்மையே என்று தெரிந்து தானே கூறப்பட்டது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

G.M Balasubramaniam said...

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ஜடவஸ்துக்கள் மட்டுமே பொருள் அல்ல என்று சொன்னவிதம் ரசிக்க வைத்தது.

கவியாழி said...

சிந்தனை விருந்து அருமை

அம்பாளடியாள் said...

அது அது அந்தந்த இடத்தில் இருக்கும் போது தான் மதிப்பும் மரியாதையும் கிட்டும் என்பதை மிக அற்புதமாக எடுத்துச் சொன்ன சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

”தளிர் சுரேஷ்” said...

பொருளறிந்து புரிந்து கொண்டேன்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொருளை எடுக்கலாம்! போற்றலாம்! சாதி
இருளை ஒழிப்பதே இன்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

kingraj said...

பொருள் என்பதற்கான பொருள்...புரிந்துக்கொண்டால்
கவிதைப்போல எல்லாம் புதுமைதான்.

தி.தமிழ் இளங்கோ said...

மீள் பதிவே என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கலாம்
த.ம.11

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அர்த்தம் உள்ள கவிதை... இறுதியில் சொல்லியது சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே! பொருளின் பொருள் உணர்ந்தேன்...பொருளுடன் ௯டிய அழகான கவிதை! சிறப்பான படைப்புக்கு வாழ்த்துக்கள்.

ezhil said...

ஆமாங்க அது அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் மேலே ஏறி நிற்பதால் தானே பிரச்சனை.

Post a Comment