Saturday, April 19, 2014

கருவும் கவியும் ( 1 )

எழுதிவிட  எண்ணி
அவன் எழுதுகோலை எடுத்ததும்
ஓராயிரம் கருக்கள் அவன்  முன்
ஓரணியாய் நிற்கத் துவங்குகின்றன

குழம்பித் தவித்து அவன்
பயனுள்ளவைகளை மட்டும்
பொறுப்புடன் பொறுக்கி எடுக்க
பாதி குப்பையாகிப் போகிறது

மீந்து நிற்பவைகளுள்
நிகழ் காலச் சூழலுக்குக்கானதை
நிதானமாய் யோசித்து எடுக்க
பெரும்பகுதி கூளமாகிப் போகிறது

இருப்பவைகளுக்குள் அவன்
சுவாரஸ்யப்படுத்த முடிந்தவைகளை
கவனமாய்த் தேர்ந்தெடுக்க
ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறது

சந்தோஷமாய் அவன்
அது குறித்து சிந்திக்கத் துவங்க
மெல்ல அது அவன்  கைவிட்டு
நழுவுவதிலே கவனமாய் இருக்கிறது

எரிச்சலுற்று அவன்
அதற்கான காரணம் கேட்கையில்
"நீ பக்குவப் பட்டவில்லை
என்னை விட்டுவிடு "என்கிறது

குழப்பம் கூடுதலாகிப் போக
"காரணம் சொல் திருந்த முயல்கிறேன் "
என அவன் கெஞ்சிக் கேட்க
முகஞ்சுளித்து அது  இப்படிச் சொல்கிறது

( தொடரும் )

26 comments:

vimalanperali said...

குழப்பங்கள் குடிகொண்ட எழுத்துக்க்ளெ பின்பு தெளிவாகிறது என்கிறார்கள்.

vimalanperali said...

tha.ma 2

Unknown said...

ஏற்கனவே மூடு பனி தொடர் ,ஆகா ...இப்போ கவிதைத் தொடரா ?
த ம 3

Anonymous said...

வணக்கம்
ஐயா.
ரசிக்க வைக்கும் வரிகள்....பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்.

நன்றி
அன்புடன்
ரூபன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அப்படி என்னதான் சொன்னது . கேட்க ஆவல்.
த.ம. 4

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஏதார்த்தமான உண்மை.

ஸ்ரீராம். said...

என்னவாம்?

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன தான் சொன்னது...?

ஆவலுடன்....

இராஜராஜேஸ்வரி said...

"நீ பக்குவப் பட்டவில்லை
என்னை விட்டுவிடு "என்கிறது

எழுத்தே யாசிக்கிறதே...!

வெங்கட் நாகராஜ் said...

என்ன சொன்னது? தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! தொடருங்கள்! இந்த தலைப்பில் உங்களை விட சுவாரஸ்யமாக யாராலும் எழுத முடியாது!

கே. பி. ஜனா... said...

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் நானும்....

கரந்தை ஜெயக்குமார் said...

கருவும் கவியும்
அருமையான தலைப்பு ஐயா
பக்குவப் பட்டத் தாங்கள்
எதில் பக்குவப்படவில்லை என்பதை அறிய
ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.9

G.M Balasubramaniam said...

பக்குவப்பட்ட எழுத்து என்று நினைத்து எழுதுவது பலரால் ஒதுக்கப்பட்டு விடுகிறது

சீராளன்.வீ said...

கருவும் கவியும் தொடர்ந்திட வேண்டும் !
தருவின் இளமாய் தளிர்த்து !

அருமை அருமை தொடரட்டும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

11

கீதமஞ்சரி said...

எழுதுகோலை எடுத்ததும் எழும் ஏராளமான கருக்களில் உருப்படியானவற்றைப் பொறுக்கி எடுத்து எழுத நினைக்கும் சமூகப் பிரக்ஞையுள்ள மனமே எழுத்தாளனின் சிறப்பம்சம். முதல் பத்தியிலேயே மனம் தொட்டுவிட்டீர்கள் ரமணி சார். தொடர்ந்து வரும் கருத்தறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Anonymous said...

''...பாதி குப்பையாகிப் போகிறது
மீதி கூளமாகிப் போகிறது..''
இப்படித்தான் நடக்கிறது..தொடருங்கள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

காத்திருக்கிறேன்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

எல்லாப் பொருளும் இனிய கவியாக
வல்ல தமிழே வழங்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பன்னிரண்டாம் வாக்கினைப் பாங்குடன் தந்திட்டேன்
உன்னினிய பாக்களை உண்டு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீரகள் அன்பரே.

Iniya said...

கவிதை தொடரா நன்று நன்று தொடரட்டும்.

Unknown said...

எழுத நினைப்பவனுக்கு, எழுத பட போகின்ற கருவின் யோஜனைகள் அற்புதமானவையாகத்தான் இருக்கும்! நானும் உங்கள் கவிதையை தொடர்கிறேன்...

கோமதி அரசு said...

எழுதிவிட எண்ணி
அவன் எழுதுகோலை எடுத்ததும்
ஓராயிரம் கருக்கள் அவன் முன்
ஓரணியாய் நிற்கத் துவங்குகின்றன//

நல்ல கவிஞருக்கு கிடைத்த வரம்.
வாழ்த்துக்கள்.

Post a Comment