Wednesday, May 7, 2014

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

24 comments:

கவியாழி said...

அவசியமான எடுத்துக்காட்டு.பகிர்வுக்கு நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
சொல்ல வேண்டிய காலத்தில் சரியாக சொன்னீர்கள்... இறுதியில் நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

த.ம3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

Correct sir

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

வள்ளுவன் சொன்ன மறைபொருள் காத்திட
சொல்லிய பாடல் சுவை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அருணா செல்வம் said...

ராஜ ரகசியத்தை இப்படி ஒடச்சிட்டீங்களே....

அருமை இரமணி ஐயா.

ஸ்ரீராம். said...

அருமை. ராஜ ரகசியம் நன்று. சட்டம் போட்டு தண்ணீரைப் பாதுகாக்க 'மழை நீர் சேகரிப்பு' செய்து கொள்ளச் சொல்லியும் எத்தனை பேர் ஒழுங்காய்ச் செய்தார்கள்? சரியாய்ச் செய்திருந்தால் எவ்வளவோ நன்மை! காட்டை அழிக்கும்போதும், மணலை அள்ளும்போதும் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுகிறோம் என்று மனிதன் உணர்வதில்லை.

Unknown said...

சிந்திக்க வைத்த கவிதை ,அருமை !
த ம 9

Iniya said...

உண்மை உண்மை !

இராஜராஜேஸ்வரி said...

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

இதமான கோடை மழையாய்
அக்னிநட்சத்திரத்தில்
இன்னல் தீர்க்கப் பொழிந்த
இனிய மழையாய்
அருமையான கவிதை..!

ஸாதிகா said...

ராஜரகசியம் அழகாக வெளிப்பட்டுள்ளது.த.ம 10

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள்.
வள்ளுவர் சொன்ன ராஜரகசியம் படி நடந்தால் எல்லாம் நலமே.
கவிதை மிக அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிவுரை...

அறிவுரை படி நடந்தால் நல்லது தான்.

அம்பாளடியாள் said...

உண்மை தான் ஐயா தண்ணீர்ப் பஞ்சம் மக்களை அழிக்கும் முன்பே நாம் விழித்துக் கொள்வது அவசியம் .சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் ஐயா .

Unknown said...

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

உண்மை! உண்மை இவ்வரிகள் -எடுத்து
உரைத்தீர் வள்ளுவன் செவ்வரிகள்
நன்மை வேண்டின் நாநிலமே -உடன்
நம்பி செயல்படின் மாவளமே

”தளிர் சுரேஷ்” said...

அருமை ஐயா! மழையின் சிறப்பை உணர்த்தி சேமிக்க சொல்லிவிட்டீர்கள்! நன்றி!

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான பகிர்வு நண்பரே. அழகாகச் சொன்னீர்கள்.

VVR said...

நாம் உண்மையை உணர்வது என்றோ?

VVR said...

நாம் உண்மையை உணர்வது என்றோ?

G.M Balasubramaniam said...

தெரியாமல் தவறு செய்யலாம். தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாவிட்டால் எல்லாமே ரகசியம்தான்.

Unknown said...

நுகர்வு கலாச்சாரத்தில் மதிமயங்கி கிறங்கிக் கிடக்கும், மனிதர்கள், விழிப்பதெப்போ...உலகம் உய்வதெப்போ?

Pandiaraj Jebarathinam said...

வரிகளின் உண்மையை வலியுள்ளவர் புரிந்துணர்வார்.

வாழ்ந்து கெட்டவர்கள்
கெட்டுப் போகிறார்கள்
வாழ்வதன் அடி தெரியாது..

Yarlpavanan said...

"சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்" என்பதே
இன்றைய தேவையும் கூட

Post a Comment