Saturday, November 22, 2014

இவ்வுலகே சொர்க்கமாக ஒரு இலகு வழி

எவை எவை எல்லாம்
அவசியத் தேவையில்லையோ
எவை எவை எல்லாம் இல்லாது
சிறப்பாக வாழமுடியுமோ
எவை எவை எல்லாம் அதிகத்
தீங்கை விளைவிக்குமோ

அது அலங்காரப் பொருட்களோ
பொழுதுபோக்குச் சாதனங்களோ
அல்லது போதை வஸ்துக்களோ

அவைகளையெல்லாம்
உற்பத்தி செய்பவன்
விற்பனை செய்பவன்
அதற்குத் தன் பங்கையளிப்பவன் எல்லாம்

செல்வந்தனாய் வாழ
செல்வாக்கு உள்ளவனாய் வாழ
சமூகத் தலைவனாய் வாழ

எவை எவை  எல்லாம்
அவசியத் தேவையோ
எவை எவை இல்லாது
வாழவே முடியாதோ
எவை எவை எல்லாம்
நன்மை மட்டுமே விளைவிக்குமோ

அது ஆடையோ
அது உணவுப் பொருட்களோ
அல்லது கல்வி ஞானமே

அவைகளையெல்லாம்
உற்பத்தி செய்பவன்
விற்பனை செய்பவன்
அதற்குத் தன் பங்கையளிப்பவன் எல்லாம்

வறுமையில் வாட
அன்றாடம் சாக
சமூகத்தில் மதிப்பிழந்து வாழ

ஊழ்வினை காரணம் இல்லை என்னும்
உண்மையை ,முதலில் தெளிவோம்-இந்தச்
சூழ் நிலை மாற  வாழ்நிலை மாற
நம்மால்  ஆனதை   இன்றே செய்வோம்

நன்மை பயக்கும்
தேவையானவைகளை மட்டும் நுகர்ந்து
வாழப் பழகினால் போதும்

தீங்குப் பயக்கும்
தேவையற்றவைகளை அறவே விலக்கி
வாழத் துவங்கினால் போதும்

அரசியல்வாதியின் தயவு இன்றியும்
ஆன்மிக வழிகாட்டியின் அருட்பார்வை இன்றியும்
பொருளாதார மேதையின்  திட்டங்களின்றியும்

ஒவ்வொரு மனிதனும் மாறத் துவங்கினால் போதும்
அனைத்து தீமைக்கும்   இதுதான் ஆணிவேர் என
முதலில் அறியத் துவங்கினால் கூடப் போதும்

இப்புவியே மறுகணம் தன்மை   மாறும்
இப்புவியே  இனி    சொர்க்கம்  என்றே ஆகும்


( மாதம்   ஐந்தாறு கூட்டமாயினும்
ஒவ்வொரு கூட்டத்திலும்  ஒரு புதிய பயனுள்ள
சுவாரஸ்யமான  கருத்தைச் சொல்லி
வியக்கவைக்கும் அரிமா 324 பி 3
மாவட்டத்  துணை ஆளுநர்
A  .அறிவழகன் M J F அவர்கள் நேற்று
திண்டுக்கல்  கூட்டத்தில் சொல்லிய
ஒரு கருத்தை என் பாணியில் விரிவாக்கம்
செய்துள்ளேன்
கரு தந்த   துணை ஆளுநருக்கு மனமார்ந்த நன்றி )


17 comments:

ஸ்ரீராம். said...

அவசியமான அறிவுரை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Interesting & Useful Advises.

The way of presentation is also excellent.

Thanks for sharing.

கீதமஞ்சரி said...

ஆடம்பரம் செழிக்கிறது. அத்தியாவசியம் உழல்கிறது. உண்மைதான். வாழ்நிலைக்குரிய சூழ்நிலையை நமக்கு உகந்ததாய் மாற்றும் சூத்திரம் நம் (வாழ்க்)கையில்தான் உள்ளது. அருமையான கருத்துகள். பாராட்டுகள் ரமணி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு மிகவும் தேவையான அறிவுரைகள்....

ananthako said...

ஊழ்வினையா தன் வினையோ தட்டிக்கேட்பவர் குரல்
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று ஒதுங்கி இருப்பதல்ல. ஐ .ஏ. எஸ் ,நேர்மை மாறுதல் அல்லது அடக்குதல்.நீதிமன்றம் சொல்லியும் சகாயத்திற்கு யாரும் சகாயம் இல்லை. ஆண்டவன் நிலத்திற்கே அபாயம் . நல்ல கவிதை ரமணி ஜீ .அம்மா ஜீ விடுதலைக்கு ஹோமங்கள் யாகங்கள்!இனி எங்கே செல்வது நீதிகேட்க.அநீதிக்கு இரண்டாயிரம் மொட்டைகள் நீதிக்கு மொட்டை அடிக்க.

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் சில்லியிருப்பது இந்தக் காலக்கட்டதிற்கு மிக்வும் தேவையான ஒன்று. நல்ல கருத்துள்ள அறிவுரை!

V. Chandra, B.COM,MBA., said...

//தீங்குப் பயக்கும்
தேவையற்றவைகளை அறவே விலக்கி
வாழத் துவங்கினால் போதும்// நல்ல கருத்துள்ள அறிவுரை!

Unknown said...

திரு ,அறிவழகன் தந்த அறிவுரைக்கு நீங்கள் தந்த விரிவான விளக்கம் அழகு !
த ம 5

தி.தமிழ் இளங்கோ said...

பகிர்வுக்கு நன்றி.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - திருக்குறள் 341

த.ம.6

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயனுள்ள, ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய நெறிகள். நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தீங்குப் பயக்கும்
தேவையற்றவைகளை அறவே விலக்கி
வாழத் துவங்கினால் போதும்
,அறிவான விளக்கம் அழகு..

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கருத்து! சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

UmayalGayathri said...

பயனுள்ள அறிவுரைகள்..
நன்றி
தம + 1

KILLERGEE Devakottai said...

அற்புதமான,
அவசியமான,
அருமையான,
அறிவுரை
அய்யா.

கதம்ப உணர்வுகள் said...

எல்லோருக்கும் பயனுள்ள எழுத்து பகிர்வு ரமணி சார்.

தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

Yaathoramani.blogspot.com said...

Manjubashini Sampathkumar said...

எல்லோருக்கும் பயனுள்ள எழுத்து பகிர்வு ரமணி சார்.

தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

Avargal Unmaigal said...


சுவாரஸ்யமான பகிர்வு இதை படித்துவிடு அருமை என்று சொல்லி செல்லாமல் செயல்படுத்தினால் எப்படி இருக்கும்?

Post a Comment