Saturday, December 31, 2016

இன்றோடு.......

இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

11 comments:

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

கருத்துள்ள அழகான கவிதை ..... மிக அருமை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

மலரட்டும் புத்தாண்டு வளரட்டும் இனிமையும் செழுமையும். பரவட்டும் நட்பு வலையெங்கும்... உலகெங்கும்...

G.M Balasubramaniam said...

அன்பின் ரமணி சாருக்கு இஒந்தப்பதிவை முதலில் என் டாஷ் போர்டில் கண்ட மாதிரிப் படித்ததும் பிறகு பதிவில் படிக்கும் போதும் இரண்டு வித பொருள்கள் இருந்ததுபொல் தெரிந்தது. ஒன்று நெகடிவ் மற்றது பாசிடிவ் பின்படித்ட்க்ஹுப் புரிந்து கொண்டேன் டாஷ் போர்டில் இருப்பதைப் பங்சுவேஷன் இல்லாமல் படித்துப்பார்த்திருக்கிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

பின்னூட்டத்தில் நிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதை.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

அருமையான வாழ்த்து.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அனைவருக்கும் ஒளி மயமானதாக அமையட்டும் 2017!

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சி

Post a Comment