Sunday, March 26, 2017

தலைமுறையும் இடைவெளியும்

உரிமைகளின் எல்லைகள்
குறித்துச் சிந்தனைகொள்ளாது
உறவு கொண்டாடும்
ஒரு தலைமுறைக்கும்

உரிமைகளின் எல்லையிலேயே
கவனம் கொண்டு
உறவு கொள்கிற
ஒரு தலைமுறைக்கும்

இடையினில்

என்னசெய்வதென்று அறியாது
அன்றாடம்
பரிதவித்துத் திரிகிறது
பாசமும் நேசமும்....

வார்த்தைகளின் அர்த்தங்களில்
கவனம்  கொள்ளாது
ஒட்டி உறவாடும்
ஒரு தலைமுறைக்கும்

அனைத்து வார்த்தைகளுக்கும்
அர்த்தம் தேடி
அமைதி இழக்கும்
ஒரு தலைமுறைக்கும்

இடையினில்

என்னசெய்வதென்று அறியாது
அனுதினமும்
புலம்பித் திரிகிறது
உணர்வும் உறவும்...

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.....

என்ன செய்வதென்று அறியாது அனுதினமும் புலம்பித் திரிகிறது....

பல சமயங்களில் இப்படித்தான்....

இராய செல்லப்பா said...

ஹும்...எங்கோ போய்விட்டீர்கள்!

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்னசெய்வதென்று அறியாது அனுதினமும் புலம்பித் திரிகிறது உணர்வும் உறவும்...//

அதே ... அதே ... உண்மைதான். புலம்புவதைத் தவிர வேறு ஒன்றும் வழியே தெரியவில்லை.

Kasthuri Rengan said...

அருமை தோழர்

Kasthuri Rengan said...

தம

Yarlpavanan said...

தலைமுறையும் இடைவெளியும்
நன்றே சிந்திக்க வைக்கும்
பாவரிகள்!

Avargal Unmaigal said...

இது தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருப்பதுதான். வயதானவர்கள் உரிமைக்கு எல்லை என்று நினைக்கும் அதே வேளையில் இளையவர்கள் இது எங்கள் உரிமை இந்த எல்லையை தாண்ட உங்களுக்கு ரைட் இல்லை என்று நினைக்கிறார்கள்

Post a Comment