Wednesday, March 22, 2017

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்...

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
 வாழ்க்கை ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

10 comments:

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே வாழ்வியல் உண்மை

கோமதி அரசு said...

அருமை

இராய செல்லப்பா said...

அருமையான பாடல்! குழந்தைகளுக்கு ஏற்ற சந்தம். இதை தினமும் பள்ளி 'அசெம்பிளி'யில் பாடச் சொல்லவேண்டும்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த ’வாழ்க்கை இரகசியம்’ என்பது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமானதொரு விஷயமாகும். :)

சமூக அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் கூடிய தக்க நேர நினைவூட்டலுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுகள். நன்றிகள்.

ஸ்ரீராம். said...

இயற்கையை மதித்து வாழ்ந்தால் மனிதன் பிழைப்பான்.

அன்பே சிவம் said...

இன்னும் நிறைய தூரம் இருக்கிறதே.

Yarlpavanan said...

"கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே - அடுத்து
மறந்திடாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது" என
நன்றே சிந்திக்க வைக்கின்றீர்!

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

G.M Balasubramaniam said...

மரம் வைத்தவன் நீரும் விடுவான்

Thulasidharan V Thillaiakathu said...

இயற்கையோடு ஒன்றி அதனை மதித்து வாழ்ந்தால் மனிதனுக்கு நல்லது இல்லையேல் நாசம்தான்..

அருமையான வரிகள்

ராமலக்ஷ்மி said...

உண்மை. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

Post a Comment