Thursday, March 30, 2017

முகமதியரான மனுஷ புத்திரரே

எப்போதும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே இருங்கள்
அதுவே பிழைக்கும் வழி

எப்போதும்
இருவரும் ஏற்கத்தக்க
ஆசாமியாகவே இருங்கள்
அதுவே ஜெயிக்கும் வழி

பொதுவெளியில்
அனைவரும் ஏற்கவேண்டுமெனில்
"மனுஷ புத்திரனாய் "இருங்கள்
அதுவே நிலைக்கும் வழி

வீடுகிடைக்கவில்லையெனில்
சங்கடப்படாது உடனே
"முகமதியராய் "முகம் காட்டுங்கள்
அதுவே அரசியல் மொழி

"இந்து "வெனவே தனக்கு
பெயர்வைத்துக் கொண்டு
மதம் கடந்ததைப் போல்
காட்டிக் கொள்பவர்களுக்கு

உங்கள் நாடகம்
நிச்சயம் கைகொடுக்கும்
அதைப்போலவே
நிச்சயமா உங்களுக்கும்

என்வே....
மனுஷபுத்திரரான முகமதியரே
முகமதியரான மனுஷபுத்திரரே

எப்போதும் என்றேன்றும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே தொடருங்கள்
அதுவே என்றும் பிழைக்கும் வழி

8 comments:

KILLERGEE Devakottai said...

"நச"வரிகள் நன்று

Avargal Unmaigal said...

Well said

Kasthuri Rengan said...

மாறுபட்டக் கோணம்

கரந்தை ஜெயக்குமார் said...

நன்று சொன்னீர் ஐயா

இராய செல்லப்பா said...

வீடு வாடகைக்குக் கிடைப்பதென்பது வெறும் மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நம்முடைய நல்ல நண்பர்களே நமக்கு வீடு கொடுக்க சில சமயம் தயங்குவார்கள். ஹமீது அவர்கள் இதை அரசியலாக்குவது சரியில்லை.
-இராய செல்லப்பா நியூஜெர்சி

K. ASOKAN said...

மிகவும் நன்றாக இருக்கிறது

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாகச் சொன்னீர்கள்...

G.M Balasubramaniam said...

வீடு கொடுக்காமல் இருக்கக் காரணங்கள் இருக்கலாம் எதையும் கற்பனை செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது பல இந்துக்கலுக்கும் வீடு கிடைப்பது சிரமமாய் இருக்கலாம் மதத்தை இழுக்க வேண்டுமா

Post a Comment