Monday, April 10, 2017

தேர்தல் ஆணையர் ஐயா

தப்புப் பன்னீட்டீ ங்களே
ஆணையர்  ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புக் கணக்குக்கும்
கணக்குத் தப்புக்கும்
வித்தியாசம் தெரியாம
தப்புப்பன்னிட்டீங்களே

எங்கள் தொப்பி ஐயா
தேர்தல் செலவுக்குப் பணமில்லாம
கஷ்டப்படரானுன்னு

தொகுதி மக்கள்
ஆளுக்கு நாலாயிரமாப் போட்டு
மந்திரி மூலமா கொடுத்தப் பணமய்யா

வரவை செலவா
செலவை வரவா
தப்பா எழுதினதாலே
உங்களுக்குத்
தப்பாத் தெரியுதையா

இது
கணக்குத் தப்பையா
தப்புக் கணக்கில்லே ஐயா

இப்ப
டாக்டர் ஐயா
குடக் கூலிக்கு கொடுத்தது
ரேகைக்கு இல்லேன்னு
சொன்னாருப் பாத்தீங்களா

அப்படி எங்க
வக்கீல் ஐயாவும்
கணக்குத் தப்பைப்  பத்தி
மிகச் சரியா
நாளைக்குச் சொல்வாரையா

ஒரு கடைக் கோடி
தொண்டன் எனக்குத்
தெரிஞ்சது கூடத் தெரியாம

அதுக்குள்ள
அவசரப்பட்டு
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புப் பண்ணிட்டீங்களே
ஆணையர் ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே 

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தப்பைத்தான்
சரியாகச் செய்துகொண்டிருக்கிறோம்

Avargal Unmaigal said...


ஆமாம் அவர்கள் தப்புதான் பண்ணி இருக்கிறார்கள் காரணம் அவர்களுக்கு சொன்னதைதான் செய்து பழக்கம் சிந்தித்து அல்ல

Kasthuri Rengan said...

ஹா ஹா
சிரிப்புதான் வருகிறது
தம +

இராய செல்லப்பா said...

கவலைப் படாதீர்கள்! வழக்கு கோர்ட்டுக்குப் போனால் இருக்கவே இருக்கிறார்கள் குமாரசாமி வகையறாக்கள்!

K. ASOKAN said...

நல்ல பதிவுக்கு மகிழ்ச்சி

G.M Balasubramaniam said...

என்னவோ நடக்குது எதுக்கும் அர்த்தமே புரியலெ

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹ...நல்ல நையாண்டி....



Post a Comment